ஹீரோ பைக் பிரியர்களுக்கு ஓர் குட் நியூஸ்... விரைவில் வருகிறது எக்ஸ்ட்ரீம் 200எஸ் ஸ்போர்ட்ஸ் பைக்!

பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

பிஎஸ்-6 எஞ்சினுடன் விரைவில் வரும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ்!

கடந்த ஓர் ஆண்டுக்கு முன்னர் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எக்ஸ்ட்ரீம் 200எஸ் என்ற பேரிங் பேனல்கள் கொண்ட ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மாடலை களமிறக்கியது. எக்ஸ்பல்ஸ் 200 அட்வென்ச்சர் பைக் மாடலுடன் சேர்த்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இந்த மாடல் ஹீரோ பைக் பிரியர்களுக்கு சிறந்த தேர்வாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், எக்ஸ்பல்ஸ் 200 பைக் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் வந்துவிட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக் மாடலும் பிஎஸ்-6 எஞ்சினுடன் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

இந்த பைக் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கும் வகையில், ஹீரோ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. அடுத்த ஓரிரு வாரங்களில் இந்த பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

விரைவில் வரும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ்!

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கின் பிஎஸ்-4 மாடலில் 200சிசி ஏர்கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 18 பிஎச்பி பவரையும், 17.1 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதே எஞ்சின்தான் பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு தக்க வைக்கப்படும்.

புதிய பிஎஸ்6 மாடலில் முழுமையான எல்இடி ஹெட்லைட், டெயில் லைட் மற்றும் முழுமையான எல்சிடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை உள்ளன. புளூடூத் இணைப்பு வசதி, டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதி, கியர் பொசிஷன் இண்டிகேட்டர், ட்ரிப் மீட்டர், சர்வீஸ் ரிமைன்டர் அலர்ட் ஆகிய வசதிகள் உள்ளன.

பிஎஸ்-6 எஞ்சினுடன் விரைவில் வரும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ்!

இந்த பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் 7 ஸ்டெப் அட்ஜெஸ்ட் வசதி கொண்ட மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோன்று, முன்சக்கரத்தில் 276 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்படும்.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கின் பிஎஸ்4 மாடலானது ரூ.98,500 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த புதிய மாடல் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை கூடுதல் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்பு இருக்கிறது.

Most Read Articles
English summary
Hero Motocorp company has listed the new Xtreme 200S with BS6 compliant engine in the official website today. It is expected to launch in the Indian market very soon.
Story first published: Thursday, October 29, 2020, 21:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X