மீண்டும் ஹீரோ இணையத்தள பக்கத்தில் எக்ஸ்ட்ரீம் 200எஸ் & எக்ஸ்பல்ஸ் 200டி பைக்குகள்...

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் மற்றும் எக்ஸ்பல்ஸ் 200டி மோட்டார்சைக்கிள்களின் பிஎஸ்6 மாடல்களின் தோற்றம் அறிமுகத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான போஸ்டர்கள் இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

மீண்டும் ஹீரோ இணையத்தள பக்கத்தில் எக்ஸ்ட்ரீம் 200எஸ் & எக்ஸ்பல்ஸ் 200டி பைக்குகள்...

முன்னதாக இந்த இரு மோட்டார்சைக்கிள்களை பற்றி வெளியாகி இருந்த தகவலில் இந்நிறுவனத்தின் இணையத்தள பக்கத்தில் இருந்து இவற்றின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தான் தற்போது இந்த இரு பைக்குகளின் பிஎஸ்6 மாடல்கள் டீசர் புகைப்படங்களின் மூலமாக மீண்டும் இந்நிறுவனத்தின் இணையத்தள பக்கத்தில் இடம் பிடித்துள்ளன.

மீண்டும் ஹீரோ இணையத்தள பக்கத்தில் எக்ஸ்ட்ரீம் 200எஸ் & எக்ஸ்பல்ஸ் 200டி பைக்குகள்...

பிஎஸ்4-க்கு மாற்றாக பிஎஸ்6 என்ஜினை பெற்றுள்ள இந்த இரு 200சிசி பைக்குகளில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்கள் மற்றும் விலை அதிகரிப்புகள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இதேபோல் இவை இரண்டை தொடர்ந்து ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் மாடலும் பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்படவுள்ளதா என்பதும் தெரியவரவில்லை.

மீண்டும் ஹீரோ இணையத்தள பக்கத்தில் எக்ஸ்ட்ரீம் 200எஸ் & எக்ஸ்பல்ஸ் 200டி பைக்குகள்...

உலகில் உள்ள மற்ற அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களை போன்று ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் தனது தொழிற்சாலையை வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸினால் தற்காலிகமாக மூடியுள்ளது. இதனால் இந்நிறுவனத்தில் இருந்து பிஎஸ்6 பைக்குகளின் அறிமுகங்களும் தாமதமாகியுள்ளன.

மீண்டும் ஹீரோ இணையத்தள பக்கத்தில் எக்ஸ்ட்ரீம் 200எஸ் & எக்ஸ்பல்ஸ் 200டி பைக்குகள்...

ஹீரோ நிறுவனம் தனது அனைத்து 200சிசி மோட்டார்சைக்கிள்களையும் 'எக்ஸ்'குடும்பத்தின் கீழ் பட்டியலிட்டு வருகிறது. இந்த 200சிசி பைக்குகளில் இந்நிறுவனத்தின் எக்ஸ்பல்ஸ் 200 & 200டி மற்றும் எக்ஸ்ட்ரீம் 200ஆர் & 200எஸ் உள்ளிட்ட பைக்குகள் அடங்குகின்றன. இவற்றில் ஒரே மெக்கானிக்கல் பாகங்களை கொண்ட என்ஜின் தான் பொருத்தப்பட்டு வருகின்றன.

மீண்டும் ஹீரோ இணையத்தள பக்கத்தில் எக்ஸ்ட்ரீம் 200எஸ் & எக்ஸ்பல்ஸ் 200டி பைக்குகள்...

இவற்றில் தற்போது ஹீரோ இணையத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள எக்ஸ்ட்ரீம் 200எஸ் மற்றும் எக்ஸ்பல்ஸ் 200டி பைக்குகளின் என்ஜின் ஆற்றல் அளவுகள் குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. நமக்கு தெரிந்தவரை இவற்றின் பிஎஸ்6 என்ஜின் எக்ஸ்பல்ஸ் 200 பிஎஸ்6 மாடலின் என்ஜின் உடன் ஒத்த ஆற்றல் அளவுகளை தான் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் ஹீரோ இணையத்தள பக்கத்தில் எக்ஸ்ட்ரீம் 200எஸ் & எக்ஸ்பல்ஸ் 200டி பைக்குகள்...

இந்த இரு 200சிசி பைக்குகளுக்கு முன்னதாக ஹீரோ இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட 2020 எக்ஸ்பல்ஸ் 200 மாடலில் 199.6சிசியில் ஏர்-ஆயில்-கூலிங் மற்றும் ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் சிஸ்டங்களை கொண்ட பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான என்ஜின் பொருத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

மீண்டும் ஹீரோ இணையத்தள பக்கத்தில் எக்ஸ்ட்ரீம் 200எஸ் & எக்ஸ்பல்ஸ் 200டி பைக்குகள்...

இதன் பிஎஸ்6 என்ஜின் தற்போது அதிகப்பட்சமாக 8,500 ஆர்பிஎம்-ல் 17.8 பிஎச்பி பவரையும், 6,400 ஆர்பிஎம்-ல் 16.4 என்எம் டார்க் திறனையும் பைக்கிற்கு வழங்கும் வகையில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த என்ஜின் பிஎஸ்4 தரத்தில் மேற்கூறப்பட்ட ஆற்றல் அளவுகளை விட 0.3 பிஎச்பி மற்றும் 0.7 என்எம் குறைவாக வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது

மீண்டும் ஹீரோ இணையத்தள பக்கத்தில் எக்ஸ்ட்ரீம் 200எஸ் & எக்ஸ்பல்ஸ் 200டி பைக்குகள்...

இந்த என்ஜின் உடன் வழக்கமான 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக தொடரவுள்ளது. என்ஜின் அப்டேட் உடன் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் மற்றும் எக்ஸ்பல்ஸ் 200டி பிஎஸ்6 பைக்குகளில் முந்தைய தலைமுறை மாடலில் இருந்து அப்கிரேட்டான மெக்கானிக்கல் பாகங்கள் வழங்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

மீண்டும் ஹீரோ இணையத்தள பக்கத்தில் எக்ஸ்ட்ரீம் 200எஸ் & எக்ஸ்பல்ஸ் 200டி பைக்குகள்...

இதுகுறித்த முழுமையான தகவல்கள் இவற்றின் அறிமுகத்தின்போது வெளியிடப்படவுள்ளன. ஹீரோ நிறுவனத்தின் எண்ட்ரீ-லெவல் டூரிங் மோட்டார்சைக்கிளான எக்ஸ்ட்ரீம் 200எஸ் மற்றும் எக்ஸ்பல்ஸ் 200டி பைக்குகளில் எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில்லைட்ஸ், ப்ளூடூத் இணைப்புடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், டர்ன்-பை-டர்ன் நாவிகேஷன் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
Hero Xtreme 200S & Xpulse 200T BS6 Motorcycles Teased Ahead Of India Launch
Story first published: Thursday, April 9, 2020, 21:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X