150சிசி டூவீலர் சந்தையில் இருந்து வெளியேறுகிறதா ஹீரோ? எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் பைக் உற்பத்தி நிறுத்தம்

ஹீரோ நிறுவனம் 150சிசி பைக் சந்தையில் வெளியேறும் விதமாக கடைசியாக விற்பனையில் இருந்த எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் 150 பைக்கை விற்பனையில் இருந்து விளக்கிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

150சிசி டூவீலர் சந்தையில் இருந்து வெளியேறுகிறதா ஹீரோ..? எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் மாடல் உற்பத்தி நிறுத்தம்..!

விரைவில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரம் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரவிருக்கின்றது. இதற்கான காலக்கெடு ஏப்ரல் 1ம் தேதி அளிக்கப்பட்டுள்ளது. ஆகையால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதன் பிரபல தயாரிப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து பிஎஸ்-6 தரத்திற்கு அப்கிரேட் செய்து வருகின்றது.

மேலும், இந்த அப்கிரேஷனைப் பயன்படுத்தி சில மாற்றங்களையும் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

150சிசி டூவீலர் சந்தையில் இருந்து வெளியேறுகிறதா ஹீரோ..? எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் மாடல் உற்பத்தி நிறுத்தம்..!

அந்தவகையில், நாட்டின் ஜாம்பவான் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ மோட்டோகார்ப், அதன் பிரபல மாடல் ஒன்றை விற்பனையில் இருந்து விளக்கிக் கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால், ஹீரோ மோட்டோகார்ப் விரைவில் 150சிசி மோட்டார்சைக்கிள் சந்தையில் வெளியேறிவிடுமோ என்ற சந்தேகம் வாகன உலகில் ஏற்பட்டுள்ளது.

150சிசி டூவீலர் சந்தையில் இருந்து வெளியேறுகிறதா ஹீரோ..? எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் மாடல் உற்பத்தி நிறுத்தம்..!

தற்போது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஹீரோ எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட் 150சிசி பைக்கைதான் சந்தையில் இருந்து விளக்கியுள்ளது. இதேபோன்று, முன்னதாக ஹங்க், இம்பல்ஸ் மற்றும் அச்சீவர் உள்ளிட்ட 150சிசி திறன் கொண்ட பைக்குகளையும் சந்தையில் இருந்து விளக்கியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

150சிசி டூவீலர் சந்தையில் இருந்து வெளியேறுகிறதா ஹீரோ..? எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் மாடல் உற்பத்தி நிறுத்தம்..!

ஹீரோ எக்ஸ்ட்ரீம் பைக்கில் 149.2 சிசி திறன் கொண்ட ஏர் கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 15.6 பிஎச்பி பவரையும், 13.50 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டுள்ளது.

150சிசி டூவீலர் சந்தையில் இருந்து வெளியேறுகிறதா ஹீரோ..? எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் மாடல் உற்பத்தி நிறுத்தம்..!

இந்த எஞ்ஜின் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனில் இயங்கும். முன்னதாக விற்பனையில் இருந்து அனைத்து 150சிசி பைக்குகள் சந்தையில் இருந்து விளக்கிக் கொள்ளப்பட்டநிலையில், கடைசியாக ஹீரோ நிறுவனத்தின்கீழ் இந்த எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட் பைக்கை விற்பனையில் இருந்தது.

150சிசி டூவீலர் சந்தையில் இருந்து வெளியேறுகிறதா ஹீரோ..? எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் மாடல் உற்பத்தி நிறுத்தம்..!

ஆனால், அதையும் தற்போது விற்பனையில் இருந்து ஹீரோ மோட்டோகார்ப் நீக்கியுள்ளது. ஆகையால், இந்நிறுவனத்தின் சார்பில் தற்போது ஒரு 150சிசி திறன் கொண்ட பைக்கூட விற்பனைக்கு கிடைக்காத சூழல் ஏற்பட உள்ளது.

150சிசி டூவீலர் சந்தையில் இருந்து வெளியேறுகிறதா ஹீரோ..? எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் மாடல் உற்பத்தி நிறுத்தம்..!

ஹீரோ மோட்டோகார்ப்பின் இந்த அதிரடி முடிவிற்கு எக்ஸ்ட்ரீம் பைக்கின் விற்பனை கடுமையாக சரிவுற்றதே முக்கிய காரணமாக இருக்கின்றது. தொடர்ந்து, இந்த பைக்கை பிஎஸ்-6 தரத்திற்கு அப்கிரேட் செய்தால், அது தற்போது விற்பனையில் விலையில் இருக்கும் எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் பைக்கின் விலையைவிட அதிகமானதாக இருக்கும். ஆகையால், இது எந்தவிதத்திலும் பைக்கின் விற்பனைக்கு உதவாது என எண்ணிய ஹீரோ இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

150சிசி டூவீலர் சந்தையில் இருந்து வெளியேறுகிறதா ஹீரோ..? எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் மாடல் உற்பத்தி நிறுத்தம்..!

முன்னதாக இதேபோன்ற காரணங்களுக்காகவே ஹங்க், இம்பல்ஸ் மற்றும் அச்சீவர் உள்ளிட்ட மாடல்களை ஹீரோ மோட்டோகார்ப் சந்தையை விட்டு வெளியேற்றியிருந்தது.

150சிசி டூவீலர் சந்தையில் இருந்து வெளியேறுகிறதா ஹீரோ..? எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் மாடல் உற்பத்தி நிறுத்தம்..!

இந்த பைக் சியாம் தகவலின்படி நவம்பர் மாதம் வெறும் 1,237 யூனிட்டுகளை விற்பனைச் செய்திருந்ததாக கூறுகின்றது. இதனால், அக்டோபர் மாதம் வரை மட்டுமே இந்த பைக்கின் உற்பத்தி நடைபெற்று வந்தது. மேலும், அதனையே விற்பனைக்கு வெளியேற்றி வந்துள்ளது ஹீரோ.

150சிசி டூவீலர் சந்தையில் இருந்து வெளியேறுகிறதா ஹீரோ..? எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் மாடல் உற்பத்தி நிறுத்தம்..!

இதைத்தொடர்ந்து, சந்தையை விட்டு எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் பைக்கை நீக்கியதன் அறிகுறியாக அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்தும் அந்த பைக் பற்றிய தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளன.

ஆகையால், தற்போது எக்ஸ்ட்ரீம் வரிசையில் ட்வின் பைக்குகளாக விற்பனையில் இருக்கும் 200 எஸ் மற்றும் 200ஆர் ஆகிய மாடல்கள் மட்டுமே இணையத்தளத்தில் இடம்பெற்றிருக்கின்றன.

150சிசி டூவீலர் சந்தையில் இருந்து வெளியேறுகிறதா ஹீரோ..? எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் மாடல் உற்பத்தி நிறுத்தம்..!

தற்போது, விற்பனையில் இருந்து நீக்கப்பட்ட எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் பைக் சந்தையில் ஹோண்டா சிபி யூனிகார்ன் 160, சுசுகி ஜிக்ஸர் மற்றும் யமஹா எஃப்இசட் வெர்ஷன் 2.0 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருந்து வந்தது. ஆனால், இந்த போட்டியை இனி இந்த பைக்குகளுக்கு எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் வழங்காது.

Most Read Articles
English summary
Hero Xtreme Sports Discontinued. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X