ஹோண்டா டூவீலர்களை போட்டி போட்டு கொண்டு வாங்கும் கேரள மக்கள்... ப்ளான் நல்லா ஒர்க் அவுட் ஆகுது...

கேரள மாநிலத்தில் 25 லட்சம் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து ஹோண்டா நிறுவனம் புதிய சாதனையை படைத்துள்ளது.

ஹோண்டா டூவீலர்களை போட்டி போட்டு கொண்டு வாங்கும் கேரள மக்கள்... ப்ளான் நல்லா ஒர்க் அவுட் ஆகுது...

ஜப்பானை சேர்ந்த உலகின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று ஹோண்டா (Honda). இந்த நிறுவனத்தின் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் உலகின் பல்வேறு நாடுகளில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளன. ஹோண்டாவின் துணை நிறுவனமான ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், இந்தியாவில் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.

ஹோண்டா டூவீலர்களை போட்டி போட்டு கொண்டு வாங்கும் கேரள மக்கள்... ப்ளான் நல்லா ஒர்க் அவுட் ஆகுது...

இந்தியாவில் இந்த நிறுவனத்தின் பயணமானது கடந்த 1999ம் ஆண்டு, ஆக்டிவா ஸ்கூட்டரின் அறிமுகத்துடன் தொடங்கியது. ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், இந்திய சந்தையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அதன் ஆக்டிவா ஸ்கூட்டர் மிகவும் வெற்றிகரமான ஒரு தயாரிப்பாக இருந்து வருகிறது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

ஹோண்டா டூவீலர்களை போட்டி போட்டு கொண்டு வாங்கும் கேரள மக்கள்... ப்ளான் நல்லா ஒர்க் அவுட் ஆகுது...

மேலும் அதன் மற்ற இரு சக்கர வாகனங்களுக்கும், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்படுகிறது. இந்த சூழலில் கேரள மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 25 லட்சம் இரு சக்கர வாகனங்கள் விற்பனை என்ற எண்ணிக்கையை கடந்திருப்பதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

ஹோண்டா டூவீலர்களை போட்டி போட்டு கொண்டு வாங்கும் கேரள மக்கள்... ப்ளான் நல்லா ஒர்க் அவுட் ஆகுது...

இதற்கு ஆக்டிவா ஸ்கூட்டருக்குதான் ஹோண்டா நிறுவனம் நன்றி சொல்ல வேண்டும். கேரளாவில் அதிகம் விற்பனையாகும் ஹோண்டா நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களில் முதன்மையானதாக ஆக்டிவா ஸ்கூட்டர் திகழ்கிறது. கேரளாவில் மட்டுமல்லாது, இந்தியாவின் மற்ற அனைத்து மாநிலங்களிலும், ஆக்டிவாவிற்கு பெரும் வரவேற்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

ஹோண்டா டூவீலர்களை போட்டி போட்டு கொண்டு வாங்கும் கேரள மக்கள்... ப்ளான் நல்லா ஒர்க் அவுட் ஆகுது...

எனவே ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா ஸ்கூட்டரை தொடர்ச்சியாக மேம்படுத்தி, புதுப்புது வெர்ஷன்களை சந்தையில் களமிறக்கி கொண்டே உள்ளது. ஹோண்டா நிறுவனம் கேரளாவில் விற்பனை செய்துள்ள 25 லட்சம் இரு சக்கர வாகனங்களில், முதல் 10 லட்சம் இரு சக்கர வாகனங்கள் விற்பனையாவதற்கு 14 ஆண்டுகள் ஆகியுள்ளது.

ஹோண்டா டூவீலர்களை போட்டி போட்டு கொண்டு வாங்கும் கேரள மக்கள்... ப்ளான் நல்லா ஒர்க் அவுட் ஆகுது...

ஆனால் எஞ்சிய 15 லட்சம் இரு சக்கர வாகனங்கள், அடுத்த 6 ஆண்டுகளில் விற்பனையாகியுள்ளன. கடந்த 6 ஆண்டுகளில் கேரள மாநிலத்தில், ஹோண்டா நிறுவனம் பிரம்மாண்டமான வளர்ச்சியை சந்தித்திருப்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம். கேரள மாநிலத்தில் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்தும் யுக்தியை ஹோண்டா நிறுவனம் கையில் எடுத்துள்ளது.

ஹோண்டா டூவீலர்களை போட்டி போட்டு கொண்டு வாங்கும் கேரள மக்கள்... ப்ளான் நல்லா ஒர்க் அவுட் ஆகுது...

இந்த யுக்திக்கு கிடைத்த பலனாகவே இந்த வளர்ச்சியும், சாதனையும் கருதப்படுகிறது. தற்போது பண்டிகை காலம் நெருங்கி வருவதால், கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களிலும் ஹோண்டா நிறுவன இரு சக்கர வாகனங்களின் விற்பனை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை மனதில் வைத்து ஹைனெஸ் சிபி350 பைக்கை ஹோண்டா சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

ஹோண்டா டூவீலர்களை போட்டி போட்டு கொண்டு வாங்கும் கேரள மக்கள்... ப்ளான் நல்லா ஒர்க் அவுட் ஆகுது...

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு போட்டியாக, புத்தம் புதிய ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் களமிறக்கப்பட்டுள்ளது. இது ரெட்ரோ-ஸ்டைல் கிளாசிக் மோட்டார்சைக்கிள் ஆகும். பழமையையும், புதுமையையும் கலந்து கட்டி, ஹைனெஸ் சிபி350 பைக்கை ஹோண்டா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

Most Read Articles
English summary
HMSI Crosses 25 Lakh Customer Base In Kerala - Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X