ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு சவாலாக மாறுமா ஹைனெஸ் சிபி350? அக்டோபர் விற்பனை ஒப்பீடு!

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மற்றும் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்குகளின் கடந்த அக்டோபர் மாத விற்பனை நிலவரத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு சவாலாக மாறுமா ஹைனெஸ் சிபி350? அக்டோபர் விற்பனை ஒப்பீடு!

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 ரெட்ரோ க்ரூஸர் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளுக்கு நேரடி போட்டியாக, ஹைனெஸ் சிபி350 பைக்கை ஹோண்டா களத்தில் இறக்கியுள்ளது.

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு சவாலாக மாறுமா ஹைனெஸ் சிபி350? அக்டோபர் விற்பனை ஒப்பீடு!

இந்த சூழலில் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கின் கடந்த அக்டோபர் மாத விற்பனை நிலவரம் வெளியாகியுள்ளது. தனது முக்கியமான போட்டியாளரான ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு எதிராக புத்தம் புதிய ஹோண்டா ஹைனெஸ் சிபி350 விற்பனையில் எப்படி செயல்பட்டுள்ளது? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு சவாலாக மாறுமா ஹைனெஸ் சிபி350? அக்டோபர் விற்பனை ஒப்பீடு!

கடந்த அக்டோபர் மாதம் ஹோண்டா நிறுவனம் மொத்தம் 1,290 ஹைனெஸ் சிபி350 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. விற்பனையில் இதுதான் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கிற்கு முதல் மாதம். அத்துடன் இது புத்தம் புதிய பைக் ஆகும். இதை எல்லாம் வைத்து பார்க்கையில், ஹைனெஸ் சிபி350 பைக், ஹோண்டா நிறுவனத்திற்கு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தந்துள்ளது என்றே சொல்லலாம்.

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு சவாலாக மாறுமா ஹைனெஸ் சிபி350? அக்டோபர் விற்பனை ஒப்பீடு!

ஆனால் மிகவும் புகழ்பெற்ற ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிக மிக குறைவு. கடந்த அக்டோபர் மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்த கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்திற்கு நெருக்கமாக வருகிறது. இதற்கிடையே ராயல் என்பீல்டு நிறுவனம் சமீபத்தில் மீட்டியோர் 350 பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு சவாலாக மாறுமா ஹைனெஸ் சிபி350? அக்டோபர் விற்பனை ஒப்பீடு!

ரெட்ரோ க்ரூஸர் மோட்டார்சைக்கிளான இதுவும், ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கிற்கு நேரடி போட்டி மாடல்தான். ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கில், 350 சிசி, 4 ஸ்ட்ரோக், ஓஹெச்சி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5,500 ஆர்பிஎம்மில் 21 ஹெச்பி பவரையும், 3,000 ஆர்பிஎம்மில் 30 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு சவாலாக மாறுமா ஹைனெஸ் சிபி350? அக்டோபர் விற்பனை ஒப்பீடு!

5 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அஸிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதிகளையும் இந்த பைக் பெற்றுள்ளது. சஸ்பென்ஸனை பொறுத்தவரை முன் பகுதியில் டெலஸ்கோபிக் போர்க்கும், பின் பகுதியில் ட்வின்-ஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் முன் பகுதியில் 310 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன.

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு சவாலாக மாறுமா ஹைனெஸ் சிபி350? அக்டோபர் விற்பனை ஒப்பீடு!

இதுதவிர ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் வசதியும் இடம்பெற்றுள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் பிரீமியம் பிக்விங் டீலர்ஷிப்கள் வாயிலாக மட்டுமே ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் ஹோண்டா நிறுவனத்தின் வழக்கமான டீலர்ஷிப்களில் இந்த பைக்கை வாங்க முடியாது.

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு சவாலாக மாறுமா ஹைனெஸ் சிபி350? அக்டோபர் விற்பனை ஒப்பீடு!

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மற்றும் மீட்டியோர் 350 ஆகிய மோட்டார்சைக்கிள்களுடன் மட்டுமல்லாது, ஜாவா 42 மற்றும் பெனெல்லி இம்பீரியல் 400 உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களுடனும், ஹோண்டா ஹைனெஸ் சிபி350 போட்டியிட்டு வருகிறது. சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருப்பதால், வரும் நாட்களில் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கின் விற்பனை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
H'Ness CB350 vs Classic 350: October 2020 Sales Analysis. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X