ஹீரோ எலெக்ட்ரிக் மீது பகிரங்க குற்றச்சாட்டு... ஹோண்டாவின் புகாரால் வாயடைத்த இந்திய டூ-வீலர் சந்தை!

பிரபல ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மீது ஜப்பான் நாட்டு நிறுவனமான ஹோண்டா பகீரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஹீரோ எலெக்ட்ரிக் மீது பகிரங்க குற்றச்சாட்டு... ஹோண்டாவின் புகாரால் வாயடைத்த இந்திய இருசக்கர வாகன சந்தை!

ஹீரோ மற்றும் ஹோண்டா ஆகிய இரு நிறுவனங்களும் தற்போது தனி தனியாக வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கி வந்தாலும், ஒரு காலத்தில் இவ்விரு நிறுவனங்களின் கூட்டணியிலேயே பல்வேறு இரு சக்கர வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வந்தன.

ஹீரோ எலெக்ட்ரிக் மீது பகிரங்க குற்றச்சாட்டு... ஹோண்டாவின் புகாரால் வாயடைத்த இந்திய இருசக்கர வாகன சந்தை!

அந்தவகையில், இரு நிறுவனங்களின் இணைவில் வெளிவந்த ஹீரோ ஹோண்டா பேஷன் மற்றும் ஸ்பிளென்டர் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களுக்கான வரவேற்பு ஏகபோகம்.

ஆனால், குறிப்பிட்ட காரணங்களுக்காக கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவ்விரு நிறுவனங்களும் பிரிந்தன.

ஹீரோ எலெக்ட்ரிக் மீது பகிரங்க குற்றச்சாட்டு... ஹோண்டாவின் புகாரால் வாயடைத்த இந்திய இருசக்கர வாகன சந்தை!

இதைத்தொடர்ந்தே இரு நிறுவனங்களும் இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் தனி தனியாக வாகனங்களை அறிமுகம் செய்ய ஆரம்பித்தன.

இந்நிலையில், ஹீரோ நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் பிரபல எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மீது ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளது.

ஹீரோ எலெக்ட்ரிக் மீது பகிரங்க குற்றச்சாட்டு... ஹோண்டாவின் புகாரால் வாயடைத்த இந்திய இருசக்கர வாகன சந்தை!

அது, விற்பனைக்கே வராத மூவே (Moove) எனும் ஸ்கூட்டரை காப்பியடித்து ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்கியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.

ஆகையால், நகலெடுக்கப்பட்டதாக கூறப்படும் அந்த குறிப்பிட்ட ஸ்கூட்டரை விற்க மற்றும் விளம்பரப்படுத்த தடை விதிக்குமாறு உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஹீரோ எலெக்ட்ரிக் மீது பகிரங்க குற்றச்சாட்டு... ஹோண்டாவின் புகாரால் வாயடைத்த இந்திய இருசக்கர வாகன சந்தை!

இந்த புகாரை அடுத்து டெல்லி உயர்நீதிமன்றம் வருகின்ற மே 22ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

பொதுவாக இம்மாதிரியான டூப்ளிகேட் தயாரிப்பு பற்றிய குற்றச்சாட்டுக்கள் எல்லாம் சீன நிறுவனத்தின் தயாரிப்புகள் மீதே அதிகளவில் வரும். ஆனால், சற்று வித்தியாசமாக ஜப்பான் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ஹோண்டா, இந்திய நிறுவனத்தின் மீது புகாரளித்துள்ளது.

ஹீரோ எலெக்ட்ரிக் மீது பகிரங்க குற்றச்சாட்டு... ஹோண்டாவின் புகாரால் வாயடைத்த இந்திய இருசக்கர வாகன சந்தை!

அது, புகாரளித்திருப்பது இந்தியாவில் ஏற்கனவே விற்பனைக்கு வந்திருக்கும் ஹீரோ எலெக்ட்ரிக் டேஷ் மின்சார ஸ்கூட்டர் மீதுதான். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 62 ஆயிரம் என்ற விலையில் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

மலிவான விலையில் நிறைவான தொழில்நுட்பங்களை இந்த மின்சார ஸ்கூட்டர் பெற்றிருப்பதன் காரணத்தினால் இந்தியர்கள் மத்தியில் கணிசமான வரவேற்பைப் பெற்று வருகின்றது.

ஹீரோ எலெக்ட்ரிக் மீது பகிரங்க குற்றச்சாட்டு... ஹோண்டாவின் புகாரால் வாயடைத்த இந்திய இருசக்கர வாகன சந்தை!

ஆனால், காப்பியிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் மூவே ஸ்கூட்டர் தற்போது வரை சர்வதேச சந்தையில் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இந்திய அறிமுகத்தைப் பற்றி அந்நிறுவனம் இதுவரை எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.

அதேசமயம், ஹீரோ எலெக்ட்ரிக் ஓர் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அங்கமல்லாத ஓர் நிறுவனம் ஆகும்.

ஹீரோ எலெக்ட்ரிக் மீது பகிரங்க குற்றச்சாட்டு... ஹோண்டாவின் புகாரால் வாயடைத்த இந்திய இருசக்கர வாகன சந்தை!

அந்த நிறுவனத்தை முஞ்ஜல் குடும்பத்தைச் சேர்ந்த நவீன் முஞ்ஜல் தன்னாட்சியாக இயக்கி வருகின்றார். இதன் காரணத்தினாலயே ஹீரோ மோட்டோகார்ப் ஷோரூம்களில் பெரியளவில் ஹீரோ எலெக்ட்ரிக் மின்சார வாகனங்கள் விற்பனைக்குக் கிடைப்பதில்லை.

ஹீரோ எலெக்ட்ரிக் மீது பகிரங்க குற்றச்சாட்டு... ஹோண்டாவின் புகாரால் வாயடைத்த இந்திய இருசக்கர வாகன சந்தை!

இந்த வழக்கு குறித்து இரு நிறுவனங்கள் பதிலளிக்க மறுத்து விட்டதாக ஆங்கில செய்தி தளமான ஈடி ஆட்டோ தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக மின்னஞ்சல் வாயிலாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எந்தவொரு பதிலும் இல்லாமல் ஹோண்டா அமைதியாக இருப்பதாக அது தெரிவித்துள்ளது. இதேபோன்று, ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் குற்றச்சாட்டுகுறித்து பதிலளிக்கவே மறுத்துவிட்டதாக கூறியுள்ளது.

ஹீரோ எலெக்ட்ரிக் மீது பகிரங்க குற்றச்சாட்டு... ஹோண்டாவின் புகாரால் வாயடைத்த இந்திய இருசக்கர வாகன சந்தை!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் விரைவில் இந்தியாவில் இரு சக்கர மின்சார வாகனங்களைக் களமிறக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. இதற்கான பணியில் மும்பரமாக அது செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே இந்த பகிரங்க குற்றச்சாட்டை ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மீது அது முன் வைத்துள்ளது.

ஹீரோ எலெக்ட்ரிக் மீது பகிரங்க குற்றச்சாட்டு... ஹோண்டாவின் புகாரால் வாயடைத்த இந்திய இருசக்கர வாகன சந்தை!

இந்த குற்றச்சாட்டிற்கு ஏற்ப இரு ஸ்கூட்டர்களும் ட்வின்ஸ்களைப் போன்று காட்சியளிக்கின்றன. வீல், ஹெட்லைட் மற்றும் உடல் தோற்றம் என அனைத்திலும் அவை இரட்டையர்களைப் போன்றே காட்சியளிக்கின்றது. இதன் காரணத்தினாலயே ஹீரோ எலெக்ட்ரிக் மீது ஹோண்டா காப்பிடியடித்துவிட்டதாக டெல்லி உயர்நீதி மன்றத்தில் புகாரளித்துள்ளது.

ஹீரோ எலெக்ட்ரிக் மீது பகிரங்க குற்றச்சாட்டு... ஹோண்டாவின் புகாரால் வாயடைத்த இந்திய இருசக்கர வாகன சந்தை!

ஹோண்டா நிறுவனம், மின்சார இரு சக்கர வாகனங்களை இறக்குமதி செய்து விற்பனைக்குக் கொண்டு வருமா? அல்லது உள்நாட்டிலேயே வைத்து உற்பத்தி செய்து அறிமுகப்படுத்துமா? என்பது பற்றிய தகவல் இதுவரை கிடைக்கவில்லை. இவையனைத்தும் கேள்விக் குறியாகவே உள்ளது. ஆனால், இதுகுறித்த தகவல் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Honda Accused Hero Of Copying The Design Of Its Scooter Moove. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X