புதிய ஆக்டிவா 6ஜி-க்கு வீடியோ வெளியிட்ட ஹோண்டா... முக்கிய அம்சங்களை விளக்கும் விளம்பர வீடியோ...

ஹோண்டா நிறுவனம் அதன் புத்தம் புதிய ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டருக்கான விளம்பர வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் ஆக்டிவா 6 ஜி ஸ்கூட்டரில் செய்யப்பட்ட முக்கிய மாற்றங்களை தெளிவுப்படுத்தும் வகையில் காட்சிகள் அடங்கியிருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

புதிய ஆக்டிவா 6ஜி-க்கு வீடியோ வெளியிட்ட ஹோண்டா... முக்கிய அம்சங்களை விளக்கும் விளம்பர வீடியோ...

இந்தியாவில் ஹோண்டா ஆக்டிவாவிற்கென தனி சந்தையே நிலவி வருகின்றது. இதனாலயே, அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் ஆக்டிவா எப்போதுமே முதன்மை இடத்தை வகித்து வருகின்றது. இந்த ஸ்கூட்டர் இந்தியச் சாலையில் மிக நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இப்பது குறிப்பிடத்தகுந்தது.

புதிய ஆக்டிவா 6ஜி-க்கு வீடியோ வெளியிட்ட ஹோண்டா... முக்கிய அம்சங்களை விளக்கும் விளம்பர வீடியோ...

அதேசமயம், இந்த ஸ்கூட்டரை சந்தையில் காலவதியான விற்பனைப் பொருளாக மாறாத அளவிற்கு பல வேலைபாடுகளுடன் ஹோண்டா அவ்வப்போது செய்து வருகின்றது.

புதிய ஆக்டிவா 6ஜி-க்கு வீடியோ வெளியிட்ட ஹோண்டா... முக்கிய அம்சங்களை விளக்கும் விளம்பர வீடியோ...

இதுவும், ஹோண்டாவுக்கு நீண்ட நாட்களாக இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க காரணமாக இருக்கின்றது. அந்தவகையில், ஆக்டிவா 5ஜி என்றிருந்த மாடலை தற்போது 6ஜிக்கு அப்கிரேட் செய்திருக்கின்றது ஹோண்டா.

இந்த ஆக்டிவா 6ஜியில் பெரியளவில் 6 மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த மாற்றங்கள் வாகன உலகில் செய்தியாக அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

புதிய ஆக்டிவா 6ஜி-க்கு வீடியோ வெளியிட்ட ஹோண்டா... முக்கிய அம்சங்களை விளக்கும் விளம்பர வீடியோ...

சைலண்ட் ஸ்டார்ட்

இருப்பினும், ஹோண்டா தரப்பில் இருந்து தற்போது அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி விளம்பர வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் ஸ்கூட்டரில் செய்யப்பட்டுள்ள 6 மிகப்பெரிய அப்டேட்டுகளைப் பற்றிய தகவல் அடங்கியிருக்கின்றது.

இந்த வீடியோவில் முதல் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்தும் விதமாக ஆக்டிவாவின் சைலண்ட் ஸ்டார்ட் அம்சத்தைப் பற்றிய காட்சிகள் அடங்கியிருக்கின்றது.

புதிய ஆக்டிவா 6ஜி-க்கு வீடியோ வெளியிட்ட ஹோண்டா... முக்கிய அம்சங்களை விளக்கும் விளம்பர வீடியோ...

டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன்

இந்த சைலண்ட் ஸ்டார்ட் அம்சத்திற்காக ஏசிஜி ஸ்டார்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் கியர் மெஷ்ஷிங் மற்றும் கியர் இணையும் ஏற்படும் உராய்வு மற்றும் சத்தத்தைக் குறைக்க உதவும். இதனாலேயே ஹோண்டா ஆக்டிவா 6ஜி-யை ஸ்டார்ட் செய்யும்போது மிகக் குறைந்த சப்தமே வெளியேறுகின்றது.

அடுத்த இடத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் இருக்கின்றது. ஆக்டிவா 6ஜி இப்போது டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனுடன் விற்பனைக்கு வருகின்றது. இது ரைடர்களின் சொகுசான பயண அனுபவத்திற்கு உதவும்.

புதிய ஆக்டிவா 6ஜி-க்கு வீடியோ வெளியிட்ட ஹோண்டா... முக்கிய அம்சங்களை விளக்கும் விளம்பர வீடியோ...

எளிதில் ஆன், ஆஃப் செய்யும் ஸ்விட்ச்

குறிப்பாக, 12 இன்ச் கொண்ட இது சாலையில் இருக்கும் பள்ளம் மற்றும் மேடுகளில் பெரியளவில் தூக்கிப் போடுதல், எகிர வைத்தல் போன்ற அசௌகரியத்தை ஏற்படுத்தாமல் பயணிக்க உதவும்.

இதற்கு அடுத்த இடத்தில் ஒரே ஸ்விட்சில் எஞ்ஜினை ஆன் செய்தல் மற்றும் ஆஃப் செய்தல் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அம்சம் முந்தைய மாடல்களில் வழங்கப்படவில்லை. ஹோண்டா மேற்கொண்டுள்ள புதிய அம்சங்களில் இதுவும் முக்கியமான ஒன்று.

புதிய ஆக்டிவா 6ஜி-க்கு வீடியோ வெளியிட்ட ஹோண்டா... முக்கிய அம்சங்களை விளக்கும் விளம்பர வீடியோ...

இதேபோன்று, ஆக்டிவா 5ஜி உடன் 6ஜி மாடலை ஒப்பிடும்போது டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்களில் இடம்பெறுவதைப் போன்று ப்யூவல் ஃபில்லிங் வாய் பகுதி வெளிப்புறத்தில் நிறுவப்பட்டுள்ளது. இத்துடன், ப்யூவல் ஃபில்டர் மூடியும் அதில் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஆக்டிவா 6ஜி-க்கு வீடியோ வெளியிட்ட ஹோண்டா... முக்கிய அம்சங்களை விளக்கும் விளம்பர வீடியோ...

ப்யூவல் ஃபில்லிங் வாய்

இதனை சாவிபோட்டு ஆன் செய்த பின்னர் அதற்கென தனியாக வழங்கப்பட்டுள்ள ஸ்விட்சினை அழுத்தும்போதே திறக்கும். ஆகையால் பெட்ரோல் திருட்டு போன்ற வேண்டத்தகாத செயல்கள் ஏற்படும் என்ற அச்சம் தவிர்க்கப்பட்டுள்ளது.

புதிய ஆக்டிவா 6ஜி-க்கு வீடியோ வெளியிட்ட ஹோண்டா... முக்கிய அம்சங்களை விளக்கும் விளம்பர வீடியோ...

இதையடுத்து காணப்படும் மாற்றம் இந்தியர்களுக்கு மிகவும் பிடித்தமான மாற்றம் ஆகும். இந்த ஆக்டிவா 6ஜி அதன் மூதாதையர்களைக் காட்டிலும் குறைந்த அளவு எரிபொருளில் அதிகம் மைலேஜை வழங்கும் என கூறப்படுகின்றது. இதனை உறுதிச் செய்யும் கடந்த மாதங்களில் ஓர் கட்டுரையைக்கூட டிரைவ்ஸ்பார்க் தமிழ் வெளியிட்டிருந்தது.

குறிப்பாக, பழைய தலைமுறை ஹோண்டா ஆக்டிவாவைக் காட்டிலும் கூடுதலாக 10 மடங்கும் அதிக மைலேஜ் வழங்கும் வகையில் இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஆக்டிவா 6ஜி-க்கு வீடியோ வெளியிட்ட ஹோண்டா... முக்கிய அம்சங்களை விளக்கும் விளம்பர வீடியோ...

இதற்கு ஹோண்டா ஆக்டிவா 6ஜி மாடலின் எஞ்ஜின் பிஎஸ்6 உமிழ்வு தரத்திற்கு அப்கிரேட் செய்யப்பட்டதே முக்கிய காரணமாக இருக்கின்றது. இந்த எஞ்ஜின் 8பிஎச்பி மற்றும் 9என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இந்த திறனே குறைந்த எரிபொருளில் அதிக மைலேஜை வழங்க உதவுகின்றது.

புதிய ஆக்டிவா 6ஜி-க்கு வீடியோ வெளியிட்ட ஹோண்டா... முக்கிய அம்சங்களை விளக்கும் விளம்பர வீடியோ...

இந்த மிகப்பெரிய அப்டேட்டுகளுடன் சேர்த்து மெட்டல் பாடி, லாங் வீல் பேஸ், ரிவைஸ்ட் டெயில் லேம்ப், ப்யூவல் இன்ஜெக்சன் தொழில்நுட்பம், நடுத்தரம் டிஜிட்டல் திறன் இன்ஸ்ட்ரூமென்ட் சிஸ்டம் க்ளஸ்டர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த புதிய ஆக்டிவா 6ஜி மாடலில் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய அப்கிரேஷன்களால் ஆக்டிவாவின் விலை லேசாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் இதன் வழக்கமான மாடலுக்கு ரூ. 63,412 என்ற விலையும், டீலக்ஸ் வேரியண்டிற்கு ரூ. 64,912 என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய அனைத்து எக்ஸ்-ஷோரூம் விலையாகும். ஆகையால், ஆன்-ரோடில் இந்த விலை சற்றே அதிகரித்து காணப்படலாம். இந்த ஆக்டிவா இந்தியாவின் மிகச்சிறந்த விற்பனையாகும் ஸ்கூட்டராகும். கடந்த 2001ம் ஆண்டில் இருந்து இந்த இடத்தை இது தக்கவைத்து வருகின்றது.

புதிய ஆக்டிவா 6ஜி-க்கு வீடியோ வெளியிட்ட ஹோண்டா... முக்கிய அம்சங்களை விளக்கும் விளம்பர வீடியோ...

இதற்கு இந்த ஸ்கூட்டரை பராமரிக்கும் செலவு மிக குறைவு மற்றும் செகண்ட் ஹேண்டில் விற்பனைச் செய்யும்போது நல்ல மதிப்பில் விற்பனைக்குப் போகும் உள்ளிட்ட காரணங்களால் இந்தியர்கள் மத்தியில் நற்மதிப்பை இது பெற்று வருகின்றது.

அதேசமயம், இந்த ஸ்கூட்டர் பெண்கள் மட்டுமின்றி ஆண்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Honda Activa 6G BS6 TVC. Read In Tamil.
Story first published: Wednesday, March 4, 2020, 9:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X