பிரிமீயம் அம்சங்களுடன் ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடல் என்ற பெருமையை ஹோண்டா ஆக்டிவா 110 ஸ்கூட்டர் தக்க வைத்து வருகிறது. இந்த நிலையில், அதிக சிறப்பம்சங்கள் மற்றும் பிஎஸ்-6 எஞ்சினுடன் 6-வது தலைமுறை மாடலாக இன்று இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் ஸ்டான்டர்டு மற்றும் டீலக்ஸ் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும்.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட்டுகள், டெயில் லைட்டுகள் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன. செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், மல்டி ஃபங்ஷன் கீ சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்

இந்த ஸ்கூட்டரில் வீல்பேஸ் அதிகரிக்கப்பட்டுள்ளது. கால்களை வைப்பதற்கான ஃபுட்போர்டு பகுதியின் இடவசதியும் கூடியிருக்கிறது. பெரிய இருக்கை அமைப்புடன் வந்திருப்பது வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் கார்புரேட்டர் எஞ்சினுக்கு பதிலாக ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட புதிய எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 109.2 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 7.6 பிஎச்பி பவரையும், 8.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்

இந்த ஸ்கூட்டரில் முக்கிய விஷயமாக, சப்தம் இல்லாமல் எஞ்சின் ஸ்டார்ட் செய்வதற்கான புதிய ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர் கொடுக்கப்படுகிறது.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்

இந்த புதிய ஸ்கூட்டர் மாடலில் 12 அங்குல அலாய் வீல்கள், முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக் வசதி, டிவிஎஸ் ஸ்கூட்டர்களை போல, வெளியில் பெட்ரோல் டேங்க் மூடி ஆகியவை கொடுக்கப்படுகின்றன.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் அமைப்பும் பொருத்தப்பட்டு இருக்கும்.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் கருப்பு, வெள்ளை, சாம்பல், சிவப்பு, நீலம் மற்றும் மஞ்சள் என 6 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரின் ஸ்டான்டர்டு மாடல் ரூ.63,912 எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீலக்ஸ் வேரியண்ட் ரூ.65,412 விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும். ஹோண்டா ஆக்டிவா 125 மற்றும் எஸ்பி125 பைக்குகளை தொடர்ந்து ஆக்டிவா 110 பைக்கிலும் இப்போது பிஎஸ்-6 எஞ்சினுடன் விற்பனைக்கு வந்துள்ளது.

Most Read Articles
English summary
Honda Activa 6G launched in India. The new Activa 6G scooter is offered in two variants and comes with a starting price of Rs 63,912 ex-showroom (Delhi). This is around Rs 8,000 more than that of the previous-generation model in the Indian market.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X