மின்சார ஸ்கூட்டர் அவதாரம் எடுத்த ஹோண்டா ஆக்டிவா... இதுதான் இந்தியாவின் முதல் மின்சார ஆக்டிவா!

பெட்ரோலால் இயங்கும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் மின்சார மாடலாக மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

மின்சார ஸ்கூட்டர் அவதாரம் எடுத்த ஹோண்டா ஆக்டிவா... இதுதான் இந்தியாவின் முதல் மின்சார ஆக்டிவா!

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் ஹோண்டா ஆக்டிவாவே முதல் இடம். இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான இருசக்கர வாகனங்களில் ஒன்றாக இருக்கும் இந்த ஸ்கூட்டரைதான் இளைஞர் ஒருவர் மின்சார வாகனமாக மாற்றியிருக்கின்றார்.

மின்சார ஸ்கூட்டர் அவதாரம் எடுத்த ஹோண்டா ஆக்டிவா... இதுதான் இந்தியாவின் முதல் மின்சார ஆக்டிவா!

அதாவது, இந்த ஸ்கூட்டரில் நிறுவப்பட்டிருந்த பெட்ரோல் (ICE) எஞ்ஜினை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக மின்சாரத்தால் இயங்கும் மின் மோட்டாரை பொருத்தியிருக்கின்றனர்.

இதனால், பெட்ரோலால் இயங்கும் ஹோண்டா ஆக்டிவா தற்போது மின்சாரத்தால் இயங்கும் ஸ்கூட்டராக மாறியிருக்கின்றது. அண்மைக் காலங்களாக இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்த வண்ணமே உள்ளது.

MOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

மின்சார ஸ்கூட்டர் அவதாரம் எடுத்த ஹோண்டா ஆக்டிவா... இதுதான் இந்தியாவின் முதல் மின்சார ஆக்டிவா!

நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டிருக்கும் இந்த தேவியன் காரணமாக உள் மற்றும் வெளிநாட்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதன் புகழ்வாய்ந்த மாடல்களை மின்சார ரகத்தில் அறிமுகப்படுத்தி வருகின்றன.

மின்சார ஸ்கூட்டர் அவதாரம் எடுத்த ஹோண்டா ஆக்டிவா... இதுதான் இந்தியாவின் முதல் மின்சார ஆக்டிவா!

ஆனால், தற்போது வரை மின்சார வாகனங்களின் விற்பனை ஆரம்பிக்கப்பட்ட இடத்திலேயே இருக்கின்றது. இதற்கு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் சார்ஜிங் நிலையங்கள் உள்ளிட்டவை போதியளவில் இல்லாததே முக்கிய காரணமாக இருக்கின்றது.

MOST READ: உங்க பைக்கிற்கு எவ்வளவு இன்ஸ்யூரன்ஸ் பிரிமீயம்னு தெரியணுமா?... இங்கே க்ளிக் பண்ணுங்

மின்சார ஸ்கூட்டர் அவதாரம் எடுத்த ஹோண்டா ஆக்டிவா... இதுதான் இந்தியாவின் முதல் மின்சார ஆக்டிவா!

இந்த நிலையை போக்குவதற்காக ஒரு சில நிறுவனங்கள் குறைக்கப்பட்ட அம்சங்களுடன் மலிவு விலை மின்சார வாகனங்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றன. அவற்றை எளிதில் சார்ஜ் செய்யும் விதமாக வீட்டிலேயே சார்ஜிங் நிலைய வசதியை ஏற்படுத்திக் கொடுக்கின்றன.

மின்சார ஸ்கூட்டர் அவதாரம் எடுத்த ஹோண்டா ஆக்டிவா... இதுதான் இந்தியாவின் முதல் மின்சார ஆக்டிவா!

அதாவது, செல்போன்களை சார்ஜ் செய்வதற்கு வழங்கப்படும் சார்ஜரைப் போல மின்சார வாகனங்களைச் சார்ஜ் செய்வதற்கான கருவிகளை அந்த நிறுவனங்களே வழங்கி வருகின்றன. இருப்பினும், குறிப்பிட்ட காரணங்களினால் மின் வாகனங்களை வாங்க மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

மின்சார ஸ்கூட்டர் அவதாரம் எடுத்த ஹோண்டா ஆக்டிவா... இதுதான் இந்தியாவின் முதல் மின்சார ஆக்டிவா!

இந்த நிலையில்தான் மின்சார வாகனங்கள்மீது அதிக ஆர்வம் கொண்ட ஓர் இளைஞர், அவரது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை அவரே மின்சார தரத்திற்கு அப்கிரேட் செய்திருக்கின்றார். மின் வாகனங்களின் பயன்பாட்டை மக்களுக்கு உணர்த்தும் விதமாக மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மின்சார ஸ்கூட்டர் அவதாரம் எடுத்த ஹோண்டா ஆக்டிவா... இதுதான் இந்தியாவின் முதல் மின்சார ஆக்டிவா!

டெல்லியைச் சேர்ந்த ஹேம்ங்க் தபாதே என்ற இளைஞர்தான் அந்த புகழ்ச்சிக்குரிய நபர். இவர் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை மட்டுமின்றி முன்னதாக செவ்ரோலே நிறுவனத்தின் பீட் காரையும் எலெக்ட்ரிக் காராக மாற்றியிருந்தார். இதுகுறித்த வீடியோவை ஹேமங்க் தபாதே என்னும் யுடியூப் சேனலில் அவர் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த சேனலின் வாயிலாகவே மின்சார ஸ்கூட்டராக மாறியிருக்கும் ஹோண்டா ஆக்டிவா பற்றிய வீடியோவும் வெளியிட்டுள்ளார்.

மின்சார ஸ்கூட்டர் அவதாரம் எடுத்த ஹோண்டா ஆக்டிவா... இதுதான் இந்தியாவின் முதல் மின்சார ஆக்டிவா!

இதுபோன்று, எரிபொருள் எஞ்ஜின் கொண்ட வாகனங்களை மின்சார தரத்திற்கு மாற்றும் பணியை அந்த இளைஞர் பொழுதுபோக்கிற்காக செய்து வருவதாக முந்தைய வீடியோவில் தெரிவித்திருந்தார். இதனடிப்படையிலேயே ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரும் மின்சார வெர்ஷனுக்கு அப்கிரேட் செய்யப்பட்டிருக்கின்றது.

மின்சார ஸ்கூட்டர் அவதாரம் எடுத்த ஹோண்டா ஆக்டிவா... இதுதான் இந்தியாவின் முதல் மின்சார ஆக்டிவா!

இந்த அப்கிரேஷனக்காக ரூ. 12 ஆயிரத்தை மட்டுமே அவர் செலவு செய்திருக்கின்றார். டீம்-பிஎச்பி பயனர் ஒருவர் கேட்ட கேள்வியின் அடிப்படையில் இந்த தகவலை அவர் வெளியிட்டிருந்தார். மேலும், பேட்டரி, மெட்டீரியல் மற்றும் உதிரிபாகங்கள் ஆகியவற்றிற்கான செலவு இது என்பதையும் அவர் கூறியிருந்தார்.

இந்த தனித்துவமான மாற்றத்தால், மிகக் குறைந்த விலையில் உருவாகிய இந்தியாவின் முதல் மின்சார ஆக்டிவா ஸ்கூட்டர் என்ற புகழை இது பெற்றிருக்கின்றது.

அதேசமயம், இந்த ஆக்டிவாவை முழுமையாக மின்சார ஸ்கூட்டராக மாற்ற ஒட்டுமொத்தமாக 18 நாட்களை வரை எடுத்துக் கொண்டிருக்கின்றது.

மின்சார ஸ்கூட்டர் அவதாரம் எடுத்த ஹோண்டா ஆக்டிவா... இதுதான் இந்தியாவின் முதல் மின்சார ஆக்டிவா!

சரி இதெல்லாம் ஓகே, இதோட ரேஞ்ஜ் எவ்வளவு பாஸ்..? அப்படினு தானே கேட்குறீங்க... இந்த ஸ்கூட்டரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 42 கிமீ தூரம் வரை செல்ல முடியும். தனியாக பணித்தால் மட்டுமே இது பொருந்தும். இருவராக பணித்தால் 35 கிமீ தூரம் வரை மட்டுமே ஹோண்டா ஆக்டிவா ரேஞ்ஜை வழங்கும். இந்த மாற்றத்திற்காக சீன தொழில்நுட்பங்கள் சிலவற்றை அந்த இளைஞர் பயன்படுத்தியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Most Read Articles
English summary
Honda Activa Converted Into EV. Read In Tamil.
Story first published: Tuesday, May 26, 2020, 20:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X