பெட்ரோலுக்கு பதில் பாடி ஸ்பிரே! அடுத்து நடந்ததுதான் ஆச்சரியத்தின் உச்சம்! இத நீங்க நம்பவே மாட்டீங்க!

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் பெட்ரோலுக்கு பதிலாக பாடி ஸ்பிரே பயன்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

பெட்ரோலுக்கு பதில் பாடி ஸ்பிரே... அடுத்து நடந்ததுதான் ஆச்சரியத்தின் உச்சம்... இதை நீங்க நம்பவே மாட்டீங்க!

ஹோண்டா நிறுவனத்தின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர்களில் ஒன்று ஆக்டிவா. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களின் பட்டியலில் இந்த ஸ்கூட்டரே கடந்த சில வருடங்களாக முதல் இடத்தை பிடித்து வருகின்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஸ்கூட்டரைதான் அண்மயில் டெல்லியைச் சேர்ந்த ஓர் இளைஞர் மின்சார வாகனமாக மாடிஃபை செய்திருந்தார். இது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது.

பெட்ரோலுக்கு பதில் பாடி ஸ்பிரே... அடுத்து நடந்ததுதான் ஆச்சரியத்தின் உச்சம்... இதை நீங்க நம்பவே மாட்டீங்க!

இந்த நிலையில், ஹோண்டா ஆக்டிவாகுறித்த மற்றுமொரு வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகத் தொடங்கியுள்ளது. அந்த வீடியோவில் இளைஞர்கள் சிலர் ஹோண்டா ஆக்டிவாவில் பெட்ரோலுக்கு பதிலாக பிரபல நிறுவனத்தின் பாடி ஸ்பிரேவினை பயன்படுத்துகின்றனர். இதன்மூலம் ஹோண்டா ஆக்டிவா இயங்கியதா? இல்லையா? என்பதுதான் இந்த தொகுப்பின் டுவிஸ்ட். இதைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவும் இருக்கின்றோம்.

பெட்ரோலுக்கு பதில் பாடி ஸ்பிரே... அடுத்து நடந்ததுதான் ஆச்சரியத்தின் உச்சம்... இதை நீங்க நம்பவே மாட்டீங்க!

தற்போது நாம் பார்க்கிவருக்கும் இந்த விநோதமான செயல் குறித்த வீடியோவை மிஸ்டர் இந்தியன் ஹேக்கர் எனும் யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் பாடி ஸ்பிரேவை மட்டுமின்றி அந்த இளைஞர்கள் மற்றும் சில எரிபொருள்களையும் பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

பெட்ரோலுக்கு பதில் பாடி ஸ்பிரே... அடுத்து நடந்ததுதான் ஆச்சரியத்தின் உச்சம்... இதை நீங்க நம்பவே மாட்டீங்க!

அந்தவகையில், பெட்ரோல், எல்பிஜி, டீசல் மற்றும் பாடி ஸ்பிரே ஆகிய நான்கும் பயன்படுத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த பரிசோதனைக்காக அந்த இளைஞர்கள் ஸ்கூட்டரின் எஞ்ஜின் கவர் மற்றும் கார்பரேட்டர் பகுதியை நீக்கியிருக்கின்றனர். இத்துடன், நேரடியாக எரிபொருளை செலுத்தும் விதமாக பழுப்பு ஒன்றையும் அவர்கள் பயன்படுத்தினர். இதைவைத்தே, முதலில் பெட்ரோலை அவர்கள் ஸ்பிரே செய்தனர்.

பெட்ரோலுக்கு பதில் பாடி ஸ்பிரே... அடுத்து நடந்ததுதான் ஆச்சரியத்தின் உச்சம்... இதை நீங்க நம்பவே மாட்டீங்க!

அப்போது, முந்தை எஞ்ஜின் திறனைக் காட்டிலும் அதிக முறுக்கு விசை வெளிப்பட்டுள்ளது. இதற்கு, எரிபொருள் நேரிடியாக செலுத்தப்பட்டதே காரணம் ஆகும். இதைத்தொடர்ந்தே எல்பிஜி வாயு அதில் செலுத்தப்பட்டது. போதுமான எரிதிறன் கிடைக்காத காரணத்தினால் எஞ்ஜின் ஸ்டாார்ட்டாகவில்லை. மூன்றாம் கட்ட முயற்சியாக டீசல் பயன்படுத்தப்பட்டது. அப்போது, எஞ்ஜின் சிறு அசைவைக்கூட வெளிப்படுத்தவில்லை.

பெட்ரோலுக்கு பதில் பாடி ஸ்பிரே... அடுத்து நடந்ததுதான் ஆச்சரியத்தின் உச்சம்... இதை நீங்க நம்பவே மாட்டீங்க!

கடைசியாகவே ஆக்ஸ் பாடி ஸ்பிரேவினை அந்த இளைஞர்கள் பயன்படுத்தினர். அப்போது, பெட்ரோல் பயன்படுத்தும் எம்மாதிரியான திறனை வெளிப்படுத்தியதோ, அதே திறனை பாடி ஸிபிரே உட் சென்றதும் ஹோண்டா எஞ்ஜின் வெளிப்படுத்தியது. இது ஆச்சரியமளிக்கும் வகையில் இருந்தது. எரிபொருள்களான எல்பிஜி, டீசல் ஆகியவற்றில் இயங்காத ஆக்டிவா பாடி ஸ்பிரேவில் இயங்கியது.

பெட்ரோலுக்கு பதில் பாடி ஸ்பிரே... அடுத்து நடந்ததுதான் ஆச்சரியத்தின் உச்சம்... இதை நீங்க நம்பவே மாட்டீங்க!

இது பலருக்கு சந்தேகத்தை எழுப்பும் வகையில் இருந்தது. இது பொய்யாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் வீடியோவில் மிக தெளிவாக ஆக்ஸ் ஸ்பிரேவினை தெளிப்பதை நம்மால் காண முடிகின்றது. எனவே, இதனை உண்மை என்பதை நம்மால் மறுக்க முடியவில்லை. ஏனெனில் இதற்கு மற்றுமொரு காரணமும் இருக்கின்றது.

பெட்ரோலுக்கு பதில் பாடி ஸ்பிரே... அடுத்து நடந்ததுதான் ஆச்சரியத்தின் உச்சம்... இதை நீங்க நம்பவே மாட்டீங்க!

பாடி ஸ்பிரேக்களில் அதிகளவில் ஆல்கஹால் இருக்கின்றன. 99 சதவீத ப்யூர் ஆல்கஹால் ஆகும். இது அதிக எரிதிறன் கொண்டது. எனவேதான் இந்த ஸ்பிரே உட் செலுத்தப்பட்ட உடனே ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் இயங்கியது.

எனவே, இந்த பரிசோதனை மூலம் ஹோண்டா ஆக்டிவா பெட்ரோலில் மட்டுமின்றி அதிக ஆல்கஹால் திறன்கொண்ட பாடி ஸ்பிரே மூலமும் இயங்கும் என்பது தெரியவந்துள்ளது.

பெட்ரோலுக்கு பதில் பாடி ஸ்பிரே... அடுத்து நடந்ததுதான் ஆச்சரியத்தின் உச்சம்... இதை நீங்க நம்பவே மாட்டீங்க!

அண்மைக் காலங்களாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொடுமளவிற்கு மிகக் கடுமையாக உயர்ந்துக் கொண்டே வருகின்றது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, உயிர் கொல்லி வைரஸ் கொரோனா மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்ற வேலையில், தற்போது புதிதாக விலையுயர்வு மக்களைக் கூடுதலாக கவலையில் ஆழ்த்தியுள்ளது.

பெட்ரோலுக்கு பதில் பாடி ஸ்பிரே... அடுத்து நடந்ததுதான் ஆச்சரியத்தின் உச்சம்... இதை நீங்க நம்பவே மாட்டீங்க!

இம்மாதிரியான சூழ்நிலையில் இந்த பாடி ஸ்பிரேக்கள் பயனளிக்குமா என்று கேட்டால் நிச்சயம் வாய்ப்பில்லை என்பதே எங்களின் பதில். இது சில நேரங்களில் உங்கள் வாகனத்தின் எஞ்ஜினை பழுதாக்கலாம். அதேசமயம், எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக சந்தையில் மின்சார வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் எரிபொருள் விலையுயர்வில் தப்பிப்பது மட்டுமின்றி நம்முடைய பர்ஸையும் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

அதேசமயம், பாடி ஸ்பிரேவை கொண்டு இளைஞர்கள் செய்திருக்கும் இந்த முயற்சியானது சற்றே ஆபத்து அதிகம் கொண்டது ஆகும். எனவே, இதுபோன்ற முயற்சிகளை யாரும் செய்ய வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோளாக இருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Honda Activa Running With Body Deodorant. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more