ஹோண்டா ADV150 அட்வென்ஜெர் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் என்னென்ன..?

ஹோண்டா மோட்டார்சைக்கிள் யுஎஸ்ஏ என்கிற ஹோண்டா பவர்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் புதிய ADV150 ப்ரீமியம் அட்வென்ஜெர் ஸ்கூட்டரை 4,299 டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் 3.28 லட்சம்) விலையில் அமெரிக்காவில் சமீபத்தில் அறிமுகம் செய்திருந்தது.

ஹோண்டா ADV150 அட்வென்ஜெர் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் என்னென்ன..?

இந்த விலை மதிப்புக்கு ஏற்ப ட்யூல்-ஸ்போர்ட் தன்மையை இந்த ஸ்கூட்டரில் ஹோண்டா நிறுவனம் வழங்கியுள்ளது. ஸ்கூட்டர்கள் என்றாலே பைக்குகளின் எளிய வடிவமாக பார்க்கப்படுகின்றன. இவற்றின் சிறப்பே கியரை மாற்ற வேண்டியதில்லை என்பது தான்.

ARE YOU ON INSTAGRAM? FOLLOW TAMIL DRIVESPARK ON INSTAGRAM - CLICK HERE!

ஹோண்டா ADV150 அட்வென்ஜெர் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் என்னென்ன..?

இத்தகைய சிறப்பம்சங்களால் ஹோண்டா ADV150 போன்ற ஸ்கூட்டர்கள் தனித்து அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் ஸ்கூட்டர்களுக்கான மார்க்கெட் பல வருடங்களாக உள்ளது. ஹோண்டா ஆக்டிவா போன்ற பிரபலமான செயல்திறன் மிக்க சிவிடி ஸ்கூட்டர்கள் இந்திய சந்தையில் சிறுக சிறுக தான் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தன.

ஹோண்டா ADV150 அட்வென்ஜெர் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் என்னென்ன..?

இந்த ஆற்றல்மிக்க ஸ்கூட்டர்கள் பிரிவில் இப்போதைக்கு அப்ரில்லா எஸ்ஆர்150 மற்றும் டிவிஎஸ் என்டார்க் 125 போன்ற ஸ்கூட்டர் மாடல்கள் மட்டும் தான் கவனிக்கத்தக்க வகையில் உள்ளன. இத்தகைய ஸ்கூட்டர்கள் சந்தைக்கேற்ப மாற்றியமைக்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

ஹோண்டா ADV150 அட்வென்ஜெர் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் என்னென்ன..?

இந்த வரிசையில் புதியதாக சேர்ந்திருப்பது சுசுகி மோட்டார்சைக்கிளின் 2020மை பர்க்மேன்200. இந்த மேக்ஸி-ஸ்கூட்டர் சில தினங்களுக்கு முன்பு தான் ஜப்பான் சந்தையில் அறிமுகமானது. புதிய தலைமுறை ஹோண்டா ADV150 ஸ்கூட்டர் முதன்முதலாக கடந்த 2019ஆம் ஆண்டு மத்தியில் இந்தோனிஷியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

ஹோண்டா ADV150 அட்வென்ஜெர் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் என்னென்ன..?

அப்போது இதன் ஸ்டைலிங் பாகங்களை பற்றி அறிவிக்கும்போது, வழக்கம்போல் மார்க்கெட்டிற்கு தகுந்தாற்போல் மாற்றியமைக்கூடியது என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. ஹோண்டாவின் இந்த புதிய க்ராஸ்ஓவர் ரக ஸ்கூட்டர், ஆஃப்-ரோட்டிற்கு ஏற்ற தோற்றத்தில் இந்நிறுவனத்தில் இருந்து வெளியான X-ADV ஸ்கூட்டர் மாடலிடம் இருந்து தான் பெரும்பான்மையான ஸ்டைலிங் பாகங்களை பெற்றுள்ளது.

ஹோண்டா ADV150 அட்வென்ஜெர் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் என்னென்ன..?

இதன் எக்ஸ்ஷோரூம் விலைக்கு ஏற்றாற்போல் இந்த ஸ்கூட்டரில் முழுவதும் எல்இடி தரத்தில் விளக்குகள், அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான விண்ட்ஸ்க்ரீன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், கீலெஸ் இக்னிஷன், இருக்கைக்கு அடியில் 27-லிட்டர் கொள்ளளவில் சேமிப்பிடம், ஹேண்டில்பாருக்கு அடியில் 2-லிட்டர் சேமிப்பிடம் மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஹோண்டா ADV150 அட்வென்ஜெர் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் என்னென்ன..?

இதன் அட்டகாசமான வடிவமைப்பால் சிறப்பான ரைடிங் அனுபவத்தை தரக்கூடிய இந்த ஸ்கூட்டரில் 14 இன்ச் மற்றும் 13 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் முன்புறம் மற்றும் பின்பிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. சஸ்பென்ஷன் அமைப்பாக இந்த ஸ்கூட்டரில் முன்புறத்தில் ப்ரீமியம் ஷோவா டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸும், எரிவாயுவால் செயல்படக்கூடிய ஷாக் அப்சார்பர்ஸ் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது.

ஹோண்டா ADV150 அட்வென்ஜெர் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் என்னென்ன..?

ப்ரேக்கிங்கிற்கு முன்புறத்தில் மட்டும் தான் டிஸ்க் ப்ரேக் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளது. 2020 ஹோண்டா ADV150 ஸ்கூட்டரில் 149சிசி லிக்யூடு-கூல்டு ஃப்யூல்-இன்ஜெக்டட் சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ஹோண்டா ADV150 அட்வென்ஜெர் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் என்னென்ன..?

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 14.3 பிஎச்பி பவரையும், 13.8 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தவல்லது. இந்த ஸ்கூட்டருக்கு தயாரிப்பு நிறுவனம் மேட் ப்ளாக் மெட்டாலிக் என்ற ஒரே ஒரு நிறத்தேர்வை மட்டும் தான் தற்போதைக்கு வழங்கியுள்ளது.

ஹோண்டா ADV150 அட்வென்ஜெர் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் என்னென்ன..?

இந்த ஸ்கூட்டர் தற்போதைக்கு இந்திய சந்தைக்கு வருவதுபோல் தெரியவில்லை. இந்தியாவில் ப்ரீமியம் அல்லது வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் மாற்றியமைக்கக்கூடிய ஸ்கூட்டர்களுக்கு எப்போது நல்ல வரவேற்பு கிடைக்க துவங்குகிறதோ அப்போது ஹோண்டாவின் இந்த லேட்டஸ்ட் ஸ்கூட்டர் மாடலை சந்தையில் பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Honda ADV150 adventure scooter debuts – Price $4,299 (Rs 3.28 lakh)
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X