ஹோண்டா சிபி500எக்ஸ் பைக்கில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..?

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் புதிய அட்வென்ஜெர் வகை பைக்கான சிபி500எக்ஸ்-ஐ இந்திய சந்தையில் விரைவாக அறிமுகப்படுத்த தயாரிப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

ஹோண்டா சிபி500எக்ஸ் பைக்கில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..?

ஆஃப்-ரோடு மோட்டார்சைக்கிள் ஆர்வலர்களுக்கு ஏற்ற வாகனமாக கருதப்படும் இந்த பைக்கில் அட்வென்ஜெர் பைக்குகளுக்கு உண்டான அசத்தலான டிசைன், தேவையான என்ஜின் அமைப்பு மற்றும் ஹை-டெக் அம்சங்களை ஹோண்டா நிறுவனம் வழங்கியுள்ளது.

ஹோண்டா சிபி500எக்ஸ் பைக்கில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..?

முழுவதும் தயாரிக்கப்பட்ட நிலையில் (சிகேடி முறை) இந்திய சந்தைக்கு வரும் இந்த ஆஃப்-ரோடு பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.5.50 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

ஹோண்டா சிபி500எக்ஸ் பைக்கில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..?

இரும்பு டைமண்ட் ஃப்ரேம்-ஆல் ஆன பேனல்களை கொண்டுள்ள சிபி500எக்ஸ் பைக்கில் கோண தோற்றமுடைய பக்கவாட்டு பேனல்கள், நீண்ட விண்ட்ஸ்க்ரீன் மற்றும் கவர்ச்சிக்கரமான பெயிண்ட் அமைப்பு உள்ளிட்ட கிராஃபிக்ஸ் வேலைகள் கச்சிதமாக செய்து முடிக்கப்பட்டுள்ளன.

ஹோண்டா சிபி500எக்ஸ் பைக்கில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..?

சவுகரியமான ரைடிங் பொசிஷன், கரடு முரடான சாலைகளுக்கு ஏற்ற டயர்கள் மற்றும் சரியான அளவில் க்ரவுண்ட் கிளியரென்ஸ் உள்ளிட்டவை ஹோண்டா சிபி500எக்ஸ் பைக்கை ஆஃப்-ரோட்டிற்கு மிகவும் ஏற்ற பைக் மாடலாக காட்டுகின்றன.

ஹோண்டா சிபி500எக்ஸ் பைக்கில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..?

இவற்றுடன் முழுவதும் டிஜிட்டல் தரத்தில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் எல்இடி ஹெட்லைட்டையும் ஹோண்டாவின் இந்த 500சிசி பைக் கொண்டுள்ளது. இயக்க ஆற்றலுக்காக சிபி500எக்ஸ் பைக்கில் 471சிசி லிக்யூடு-கூல்டு இணையான இரட்டை ஃப்யூல்-இன்ஜெக்டட் என்ஜின் பொருத்தப்படவுள்ளது.

ஹோண்டா சிபி500எக்ஸ் பைக்கில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..?

இந்த என்ஜின் பைக்கிற்கு வழங்கும் அதிகப்பட்ச ஆற்றல் அளவு 8,600 ஆர்பிஎம்-ல் 47 பிஎச்பி பவர் மற்றும் 6,500 ஆர்பிஎம்-ல் 43 என்எம் டார்க் திறன் ஆகும். ட்ரான்ஸ்மிஷன் பணிக்காக இந்த பைக் ஸ்லிப்பர் க்ளட்ச் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை பெற்றுள்ளது.

ஹோண்டா சிபி500எக்ஸ் பைக்கில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..?

சஸ்பென்ஷன் அமைப்பாக இதன் முன்புறத்தில் 41மிமீ வழக்கமான டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸும் பின்புறத்தில் 5 நிலைகளில் ப்ரீ-லோடு அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோ-ஷாக் யூனிட்டும் வழங்கப்பட்டுள்ளன. ப்ரேக்கிங்கிற்கு இரு சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக் உள்ளது. இவற்றுடன் சிறந்த ரோடு ஹேண்டிலிங்கிற்காக ட்யூல்-சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டத்தையும் இந்த பைக் பெற்றுள்ளது.

ஹோண்டா சிபி500எக்ஸ் பைக்கில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..?

இந்த ஹோண்டா சிபி500எக்ஸ் அட்வென்ஜெர் பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை குறித்து தற்போது வெளிவந்துள்ள தகவல் எதிர்பார்க்கக்கூடியது தான். அதிகாரப்பூர்வ தகவல் பைக்கின் அறிமுகத்தின் போது வெளியிடப்படும் என தெரிகிறது. சிபி500எக்ஸ் பைக்கின் அறிமுகம் இந்த வருட இறுதியிலோ அல்லது அடுத்த வருட துவக்கத்திலோ இருக்கலாம் என கூறப்பட்டு வருகிறது.

Most Read Articles
English summary
Honda CB500X India launch price design engine specs features
Story first published: Monday, March 9, 2020, 14:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X