ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் புக்கிங் செய்தவர்களுக்கு ஒரு குட் நியூஸ்

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள்களை புக்கிங் செய்தவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளை முன்பதிவு செய்து காத்திருப்பவர்களுக்கு இந்த செய்தி இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து படிக்கலாம்.

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் டீலர்களுக்கு அனுப்பும் பணி துவங்கியது... விரைவில் டெலிவிரி!

ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிளுக்கு நேர் போட்டியாக புத்தம் புதிய ஹைனெஸ் சிபி350 என்ற புதிய மோட்டார்சைக்கிளை ஹோண்டா அண்மையில் விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த பண்டிகை காலத்தில் புதிய பைக் மாடலை வாங்க திட்டமிட்டு இருப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாக மாறி இருக்கிறது.

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் டீலர்களுக்கு அனுப்பும் பணி துவங்கியது... விரைவில் டெலிவிரி!

இந்த நிலையில், இந்த புதிய மோட்டார்சைக்கிளை புக்கிங் செய்து காத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. அதாவது, ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள ஹோண்டா ஆலையில் இருந்து நாடு முழுவதும் உள்ள டீலர்களுக்கு இந்த புதிய மோட்டார்சைக்கிளை அனுப்பும் பணி துவங்கப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் டீலர்களுக்கு அனுப்பும் பணி துவங்கியது... விரைவில் டெலிவிரி!

இதையடுத்து, ஹோண்டா பிங்விங் பிரிமீயம் ஷோரூம்களில் இந்த மோட்டார்சைக்கிளின் டெலிவிரிப் பணிகள் அடுத்த சில தினங்களில் துவங்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் டீலர்களுக்கு அனுப்பும் பணி துவங்கியது... விரைவில் டெலிவிரி!

புதிய ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் கூடிய ரெட்ரோ க்ளாசிக் வகை மோட்டார்சைக்கிளாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. வட்ட வடிவிலான ஹெட்லைட் க்ளஸ்ட்டர், வட்ட வடிவிலான ரியர் வியூ மிரர்கள், க்ரோம் பூச்சுடன் கூடிய சைலென்சர் குழாய், டிஜிட்டல் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் டீலர்களுக்கு அனுப்பும் பணி துவங்கியது... விரைவில் டெலிவிரி!

இந்த பைக் தோற்றத்தில் பாரம்பரியத்தை பரைசாற்றிலும், ஸ்மார்ட்ஃபோன் வாய்ஸ் கன்ட்ரோல் சிஸ்டம், டியூவல் ஹாரன், ஹோண்டா செலக்டபிள் டார்க் கன்ட்ரோல் சிஸ்டம், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் க்ளஸ்ட்ச் உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது.

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் டீலர்களுக்கு அனுப்பும் பணி துவங்கியது... விரைவில் டெலிவிரி!

இந்த மோட்டார்சைக்கிளில் 348 சிசி ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட ஏர்கூல்டு எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 20.8 பிஎச்பி பவரையும், 30 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் டீலர்களுக்கு அனுப்பும் பணி துவங்கியது... விரைவில் டெலிவிரி!

புதிய ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிளில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் ட்வின் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பரும் உள்ளன. அதேபோன்று முன்புறத்தில் 19 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 18 அங்குல அலாய் அசக்கரமும் உள்ளன.

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் டீலர்களுக்கு அனுப்பும் பணி துவங்கியது... விரைவில் டெலிவிரி!

முன்சக்கரத்தில் 310 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இடம்பெற்றுள்ளன.

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் டீலர்களுக்கு அனுப்பும் பணி துவங்கியது... விரைவில் டெலிவிரி!

புதிய ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 மோட்டார்சைக்கிள் டிஎல்எஸ் மற்றும் டிஎல்எக்ஸ் புரோ ஆகிய இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. டிஎல்எக்ஸ் வேரியண்ட்டிற்கு ரூ.1.85 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டிஎல்எக்ஸ் புரோ ரூ.1.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

Most Read Articles

English summary
Honda Motorcycle and Scooter India has commenced the despatches of the H’Ness CB350 from its plant to Big Wing dealers.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X