சில ஆசிய நாடுகளில் அறிமுகமானது ஹோண்டா சிடி125 ஹண்டர் கப்... இந்தியாவிற்கு வருகை தருமா...?

தாய்லாந்து உள்பட சில ஆசிய நாடுகளில் ஹோண்டா நிறுவனம் கப் 125 மினி-மோட்டார்சைக்கிளின் புதிய வேரியண்ட்டாக சிடி125 ஹண்டர் கப் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்திய சந்தைக்கு வருவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ள மினி மோட்டார்சைக்கிளை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

சில ஆசிய நாடுகளில் அறிமுகமானது ஹோண்டா சிடி125 ஹண்டர் கப்... இந்தியாவிற்கு வருகை தருமா...?

கடந்த ஆண்டு டோக்கியோ மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சிடி125 ஹண்டர் கப் மினி-பைக்கானது ஆஃப்-ரோட்டிற்கு ஏற்ற வகையில் டயர்கள், நீண்ட ட்ராவல் சஸ்பென்ஷன், உயரமாக பொருத்தப்பட்ட எக்ஸாஸ்ட் மற்றும் என்ஜினை பாதுகாக்கும் வகையில் பேஷ் தட்டுகளை கொண்டுள்ளது.

சில ஆசிய நாடுகளில் அறிமுகமானது ஹோண்டா சிடி125 ஹண்டர் கப்... இந்தியாவிற்கு வருகை தருமா...?

இந்த பைக் குறித்து வெளியிடப்பட்டுள்ள வீடியோவை பார்க்கும்போது நிச்சயம் புதிய சிடி125 மாடல் மகிழ்ச்சியான பயணத்தை வழங்கும் என்பது உறுதி. இந்த மினி-பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 124.9சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 9 பிஎச்பி மற்றும் 11 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

MOST READ: வாகனங்களால் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு... சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை!

சில ஆசிய நாடுகளில் அறிமுகமானது ஹோண்டா சிடி125 ஹண்டர் கப்... இந்தியாவிற்கு வருகை தருமா...?

ட்ரான்ஸ்மிஷனிற்கு இந்த என்ஜின் உடன் 4-ஸ்பீடு செமி-ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை கொண்டுள்ள புதிய சிடி125 ஹண்டர் பைக்கில் இருசக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகள், ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டத்துடன் வழங்கப்பட்டுள்ளன.

சில ஆசிய நாடுகளில் அறிமுகமானது ஹோண்டா சிடி125 ஹண்டர் கப்... இந்தியாவிற்கு வருகை தருமா...?

முற்றிலும் ரெட்ரோ தோற்றத்தில் காட்சியளிக்கும் இந்த மினி பைக்கில் வயர்-ஸ்போக்டு சக்கரங்கள், க்ராஷ் பார்கள் மற்றும் சிறிய அளவிலான லக்கேஜ் ரேக் உள்ளிட்டவற்றை ஹோண்டா நிறுவனம் பொருத்தியுள்ளது.

MOST READ: நிலைமை கை மீறி செல்கிறது... கொரோனாவை சமாளிக்க முடியாமல் குஜராத் அரசு திடீர் முடிவு... மக்கள் கலக்கம்

சில ஆசிய நாடுகளில் அறிமுகமானது ஹோண்டா சிடி125 ஹண்டர் கப்... இந்தியாவிற்கு வருகை தருமா...?

எக்ஸாஸ்ட் குழாய் ஆஃப்-ரோடுகளில் பைக்கை இயக்கும்போது எது ஒன்றின் மீதும் எளிதாக அடிப்படாமல் இருக்க பைக்கின் வலப்புறத்தில் சற்று உயரமாக இருக்கைகளுக்கு நெருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் என்ஜினும் பாதிப்பிற்குள்ளாகாமல் இருக்க பேஷ் தட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.

சில ஆசிய நாடுகளில் அறிமுகமானது ஹோண்டா சிடி125 ஹண்டர் கப்... இந்தியாவிற்கு வருகை தருமா...?

தாய்லாந்தில் ஹோண்டா சிடி125 ஹண்டர் கப் மாடலின் விலை 84,900 பாட்-ஆக (கிட்டத்தட்ட ரூ.2 லட்சம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோண்டா சூப்பர் கப் மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதால் அதனுடன் சேசிஸை பகிர்ந்து கொண்டாலும், சிடி125 கப் மாடல் கூடுதல் ஸ்க்ரம்ப்ளர் ஸ்டைலில் ட்யூல்-பர்பஸ் தோற்றத்துடன் உள்ளது.

MOST READ: பிரபல அரசியல்வாதிகளின் இந்த செயல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கலாம்... இவர்களா இப்படி?

முன்புற ஃபோர்க் 110மிமீ ட்ராவலிலும், பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 5.4 லிட்டர்களிலும் வழங்கப்பட்டுள்ளது. முழு டேங்கில் இந்த மினி பைக் 354கிமீ வரை இயங்கும். ஏற்கனவே கூறியது புதிய சிடி125 ஹண்டர் மாடலை இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்த வாய்ப்பே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

Most Read Articles

English summary
Honda CT125 Hunter Cub Revealed In Latest Video
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X