புதிய ஹோண்டா டியோ பிஎஸ்-6 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

ஹோண்டா டியோ ஸ்கூட்டரின் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ஹோண்டா டியோ பிஎஸ்-6 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் என்றாலே, வாடிக்கையாளர்களின் கவனம் ஹோண்டா ஸ்கூட்டர்களின் மீதுதான் முதலில் விழுகிறது. ஆக்டிவா ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வாக இருக்கும் நிலையில், இளைஞர்கள் மற்றும் கல்லூரி செல்லும் இளசுகளை சுண்டி இழுப்பது என்னவோ, டியோ ஸ்கூட்டர்தான்.

புதிய ஹோண்டா டியோ பிஎஸ்-6 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக ஹோண்டா டியோ ஸ்கூட்டரின் எஞ்சின் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மாடல் இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா டியோ பிஎஸ்-6 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹோண்டா டியோ பிஎஸ்-6 மாடலில் எஞ்சின் மட்டுமின்றி, தோற்றத்தில் புதுப்பொலிவையும் பெற்றிருக்கிறது. 20 விதமான காப்புரிமை தொழில்நுட்பங்களும் கூடுதலாக பெற்று தனது மதிப்பை கூட்டியுள்ளது.

புதிய ஹோண்டா டியோ பிஎஸ்-6 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹோண்டா டியோ பிஎஸ்-6 ஸ்கூட்டரில் 110 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த புதிய எஞ்சின் அதிகபட்சமாக 7.8 எச்பி பவரையும், 9 என்எம் டார்க் திறனையும் வழங்கும். சப்தம் இல்லாமல் எஞ்சினை உயிர்ப்பிக்கும் புதிய ஏசிஜி ஸ்டார்ட்டர் மோட்டாரும் இந்த மாடலில் இடம்பெற்றிருக்கிறது. இது ஹோண்டாவின் காப்புரிமை பெற்ற தொழில்நுட்பமாக உள்ளது.

புதிய ஹோண்டா டியோ பிஎஸ்-6 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

சைடு ஸ்டான்டு இண்டிகேட்டர், சைடு ஸ்டான்டு இருக்கும்போது எஞ்சின் ஸ்டார்ட் ஆகாத தொழில்நுட்பம் ஆகியவையும் இந்த மாடலில் உள்ளது.

புதிய ஹோண்டா டியோ பிஎஸ்-6 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

ஹோண்டா டியோ பிஎஸ்6 ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் 3 ஸ்டெப் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய ஹைட்ராலிக் சஸ்பென்ஷனும் உள்ளன. அதேபோன்று, முன்புறத்தில் 12 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 10 அங்குல சக்கரமும் உள்ளன.

புதிய ஹோண்டா டியோ பிஎஸ்-6 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த ஸ்கூட்டரின் முன்சக்கரத்திலும், பின்சக்கரத்திலும் 130 மிமீ டிரம் பிரேக் உள்ளது. இந்த ஸ்கூட்டரின் வீல் பேஸ் 22 மிமீ அதிகரிக்கப்பட்டு 1,260 மிமீ ஆக உள்ளது.

புதிய ஹோண்டா டியோ பிஎஸ்-6 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹோண்டா டியோ ஸ்கூட்டரில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. நிகழ்நேர எரிபொருள் செலவு, சராசரி மைலேஜ், இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் செல்லலாம், சர்வீஸ் ரிமைன்டர் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த புதிய எஞ்சின் ஸ்டார்ட் - ஸ்டாப் வசதியுடன் வர இருக்கிறது.

புதிய ஹோண்டா டியோ பிஎஸ்-6 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

அவசர சமயத்தை எதிரில் வரும் வாகன ஓட்டிக்கு ஹெட்லைட் மூலமாக தெரிவிக்கும் பாஸ் சுவிட்ச், இருக்கைக்கு கீழ் ஸ்டோரேஜ் அறையை திறப்பதற்கான டியூவல் ஃபங்ஷன் சுவிட்ச், எல்இடி பொசிஷன் விளக்கு, டிசி எல்இடி ஹெட்லைட், பிளவுபட்ட கிராப் ரெயில் கைப்பிடி அமைப்பு, புதிய லோகோ ஆகியவை முக்கிய மாற்றங்களாக இருக்கின்றன.

புதிய ஹோண்டா டியோ பிஎஸ்-6 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த ஸ்கூட்டரின் ஸ்டான்டர்டு மாடல் சாம்பல், நீலம், சிவப்பு, ஆரஞ்ச் ஆகிய 4 வண்ணத் தேர்வுகளிலும், டீலக்ஸ் மாடல் சிவப்பு, மஞ்சள், சாம்பல் ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளிலும் கிடைக்கும்.

புதிய ஹோண்டா டியோ பிஎஸ்-6 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹோண்டா டியோ பிஎஸ்-6 ஸ்கூட்டருக்கு ரூ.59,990 எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இது அறிமுக விலைச் சலுகையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அடுத்த ஒரு சில மாதங்களில் விலை ஏற்றும் வாய்ப்பு உள்ளது.

Most Read Articles
English summary
Honda Motorcycle & Scooter India Private Limited has just launched the all new Honda Dio BS6 scooter starting at Rs 59,990 (ex-showroom, Delhi), effectively making the scooter cheaper than the Activa BS6 models.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X