சிபிஎஃப்190டிஆர் பைக்கை இந்தியாவிற்கு கொண்டுவருகிறதா ஹோண்டா..? ஸ்டைலான பைக்காச்சே இது...

புதிய ஹார்னெட் 2.0 பைக்கை தொடர்ந்து சில புதிய தயாரிப்புகளை இந்தியாவிற்கு கொண்டுவர ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த வகையில் சிபிஎஃப்190டிஆர் பைக் இந்திய சந்தைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிபிஎஃப்190டிஆர் பைக்கை இந்தியாவிற்கு கொண்டுவருகிறதா ஹோண்டா..? ஸ்டைலான பைக்காச்சே இது...

ஹோண்டா மோட்டார்சைக்கிள் பிராண்ட் இந்திய சந்தையில் நுழைந்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் நிறைவடையவுள்ளது. இதனை முன்னிட்டு தனது சந்தையை இந்தியாவில் விரிவுப்படுத்த ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 66666

சிபிஎஃப்190டிஆர் பைக்கை இந்தியாவிற்கு கொண்டுவருகிறதா ஹோண்டா..? ஸ்டைலான பைக்காச்சே இது...

இந்த திட்டத்தின் முதல் படியாக ஹார்னெட் 2.0 சமீபத்தில் அறிமுகமான நிலையில் அடுத்த அறிமுகமாக சிபிஎஃப்190டிஆர் பைக் இருக்க வாய்ப்புள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளிவந்துள்ளன.

சிபிஎஃப்190டிஆர் பைக்கை இந்தியாவிற்கு கொண்டுவருகிறதா ஹோண்டா..? ஸ்டைலான பைக்காச்சே இது...

நியோ-ரெட்ரோ வகை மோட்டார்சைக்கிளான இது, சிபிஎஃப்190ஆர் தயாரிக்கப்பட்ட அதே ப்ளாட்ஃபாரத்தில் தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் சிபிஎஃப்190ஆர்-ஐ அடிப்படையாக கொண்டுதான் ஹார்னெட் 2.0 உருவாக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சிபிஎஃப்190டிஆர் பைக்கை இந்தியாவிற்கு கொண்டுவருகிறதா ஹோண்டா..? ஸ்டைலான பைக்காச்சே இது...

ஹோண்டாவின் சீன கூட்டணி நிறுவனமான சுந்திரோவினால் சிபிஎஃப்190டிஆர் பைக் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் நியோ ஸ்போர்ட்ஸ் கேஃப் டிசைனை தான் ஹோண்டா நிறுவனம் மற்ற நாக்டு மோட்டார்சைக்கிளுக்கு பயன்படுத்தி வருகிறது.

சிபிஎஃப்190டிஆர் பைக்கை இந்தியாவிற்கு கொண்டுவருகிறதா ஹோண்டா..? ஸ்டைலான பைக்காச்சே இது...

பழமையான தோற்றத்தை கொண்டிருப்பினும் சிபி300ஆர் பைக்கின் புதிய ஸ்டைலிங் பாகங்களுடன் மற்ற நாட்டு சந்தைகளில் ஹோண்டா சிபிஎஃப்190டிஆர் தற்போதைய காலக்கட்டத்து மோட்டார்சைக்கிள்களுக்கு சரியான போட்டியாளராக விளங்கி வருகிறது.

சிபிஎஃப்190டிஆர் பைக்கை இந்தியாவிற்கு கொண்டுவருகிறதா ஹோண்டா..? ஸ்டைலான பைக்காச்சே இது...

மற்ற இயந்திர பாகங்கள் இந்த பைக்கில் ஹார்னெட் 2.0 பைக்கிற்கு இணையாகவோ அல்லது சற்று குறை/அதிகமாகவோ வழங்கப்படலாம். புதிய டைமண்ட்-வகை ஃப்ரேம்-ஆல் தயாரிக்கப்படவுள்ளதால் இந்த புதிய ஹோண்டா பைக்கில் 184சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

சிபிஎஃப்190டிஆர் பைக்கை இந்தியாவிற்கு கொண்டுவருகிறதா ஹோண்டா..? ஸ்டைலான பைக்காச்சே இது...

ஹார்னெட் 2.0 பைக்கில் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 17.27 பிஎச்பி மற்றும் 16.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. ரெட்ரோ ஸ்டைலில் வருகை தரும் சிபிஎஃப்190டிஆர் பைக்கில் சஸ்பென்ஷிற்கு யுஎஸ்டி ஃபோர்க் முன்புறத்திலும் மோனோஷாக் பின்புறத்திலும் வழங்கப்படலாம்.

சிபிஎஃப்190டிஆர் பைக்கை இந்தியாவிற்கு கொண்டுவருகிறதா ஹோண்டா..? ஸ்டைலான பைக்காச்சே இது...

அதேபோல் ப்ரேக்கிங் பணியை கவனிக்க இரு சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகள் பொருத்தப்பட்டிருக்கும். இதன் எக்ஸ்ஷோரூம் விலையை ஹார்னெட் 2.0-க்கு சற்று அதிகமாகவே எதிர்பார்க்கலாம். ஹோண்டா ஒருவேளை சிபிஎஃப்190டிஆர் பைக்கை இந்தியாவிற்கு கொண்டுவந்தால், அதன் விலையை ரூ.1.35 லட்சத்தில் இருந்து ரூ.1.40 லட்சத்திற்கு உள்ளாக நிர்ணயிக்க வாய்ப்புள்ளது.

{document1}6

English summary
Will Honda Now Make The CBF190TR In India
Story first published: Saturday, September 5, 2020, 2:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X