ஹோண்டா ஃபோர்ஷா 300 மேக்ஸி ஸ்கூட்டர் டெலிவரி ஆரம்பம்.. இந்தியாவின் முதல் அதிக விலையுடைய ஸ்கூட்டர்...

ஹோண்டா நிறுவனம் அதன் முதல் பிரிமியம் தரத்திலான ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைச் செய்ய தொடங்கியுள்ளது. இந்த ஸ்கூட்டரின் விலை பலருக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

ஹோண்டா ஃபோர்ஷா 300 மேக்ஸி ஸ்கூட்டர் டெலிவரி ஆரம்பம்.. இந்தியாவின் முதல் அதிக விலையுடைய ஸ்கூட்டர் இதுதான்..

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், அதன் பிரத்யேகமான 'பிக்விங்' ஷோரூம் மூலம் விற்பனைக்குக் கொண்டு வந்த பவர்ஃபுல்லான ஃபோர்ஷா 300 ஸ்கூட்டரை டெலிவரி செய்ய தொடங்கியுள்ளது.

ஹோண்டா ஃபோர்ஷா 300 மேக்ஸி ஸ்கூட்டர் டெலிவரி ஆரம்பம்.. இந்தியாவின் முதல் அதிக விலையுடைய ஸ்கூட்டர் இதுதான்..

இது ஓர் மிட்-சைஸ் ஸ்கூட்டராகும். இந்நிறுவனத்தின் மூலம் இந்தியாவில் விற்பனைக்கு வரும் முதல் பிரிமியம் தரம் கொண்ட மேக்ஸி ரக ஸ்கூட்டர் என்ற பெருமையை இந்த ஃபோர்ஷா 300 பெற்றிருக்கின்றது.

அதேசமயம், இது இந்தியாவின் முதல் விலையுயர்ந்த ஸ்கூட்டராகவும் உள்ளது. இந்த ஸ்கூட்டருக்கு ஹோண்டா நிறுவனம் ரூ. 8.5 லட்சம் என்ற விலையை நிர்ணயித்துள்ளது.

ஹோண்டா ஃபோர்ஷா 300 மேக்ஸி ஸ்கூட்டர் டெலிவரி ஆரம்பம்.. இந்தியாவின் முதல் அதிக விலையுடைய ஸ்கூட்டர் இதுதான்..

இந்த விலையில் இந்தியாவில் ஸ்கூட்டர் விற்பனைக்கு வருவது இதுவே முதல் முறையாகும். இந்த அதீத விலையும், அறிமுகம் செய்யப்பட்டுள்ள விதமும் இந்த ஸ்கூட்டரில் அப்படி என்னதான் இருக்கின்றது என்ற கேள்வியைக் கேட்கத்தூண்டுகின்ற வகையிலான ஆவலை வாகன ஆர்வலர்கள் மத்தியில் இந்த ஸ்கூட்டர் ஏற்படுத்தியுள்ளது.

ஹோண்டா ஃபோர்ஷா 300 மேக்ஸி ஸ்கூட்டர் டெலிவரி ஆரம்பம்.. இந்தியாவின் முதல் அதிக விலையுடைய ஸ்கூட்டர் இதுதான்..

இந்த ஸ்கூட்டர் சிறப்பு விற்பனையாக பிக்விங் ஷோரூம்களில் மட்டுமே விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இந்த ஷோரூம்களை ஹோண்டா நிறுவனம் விரிவுப்படுத்த திட்டமிட்டு வருகின்றது. இதனை ஃபோர்ஷா 300 ஸ்கூட்டரின் அறிமுகத்தின்போது அந்நிறுவனம் அறிவித்தது. இத்துடன், இந்த ஃபோர்ஷா300 மாடலில் கூடுதல் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யவும் அது திட்டமிட்டிருக்கின்றது.

ஹோண்டா ஃபோர்ஷா 300 மேக்ஸி ஸ்கூட்டர் டெலிவரி ஆரம்பம்.. இந்தியாவின் முதல் அதிக விலையுடைய ஸ்கூட்டர் இதுதான்..

இந்த ஸ்கூட்டர் முழுக்க முழுக்க ஸ்டைல் மற்றும் அதிக திறனை வெளிப்படுத்தும் நோக்கத்திலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இளைஞர்களை குறி வைத்தே இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் களமிறக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா ஃபோர்ஷா 300 மேக்ஸி ஸ்கூட்டர் டெலிவரி ஆரம்பம்.. இந்தியாவின் முதல் அதிக விலையுடைய ஸ்கூட்டர் இதுதான்..

இதன் தொடர்ச்சியாக, அறிமுக தினமான நேற்றைய (பிப். 18) நாளிலேயே அதன் டெலிவரியையும் ஹோண்டா துவங்கியுள்ளது. இந்த ஸ்கூட்டரின் முதல் டெலிவரியை டெல்லியைச் சேர்ந்த ஓர் இளைஞர் பெற்றிருக்கின்றார். ஆகையால், இந்த ஸ்கூட்டரை இந்தியாவில் முதலாவதாக பயன்படுத்தும் நபராக அவர் மாறியிருக்கின்றார்.

ஹோண்டா ஃபோர்ஷா 300 மேக்ஸி ஸ்கூட்டர் டெலிவரி ஆரம்பம்.. இந்தியாவின் முதல் அதிக விலையுடைய ஸ்கூட்டர் இதுதான்..

ஹோண்டாவின் இந்த ஃபோர்ஷா300 ஸ்கூட்டரில் அதன் பெயருக்கு ஏற்ப அதிதிறன் கொண்ட 279சிசி லிக்யூடு கூல்ட் ப்யூவல் இன்ஜெக்ட் எஸ்ஓஎச்சி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 24.8 பிஎச்பி பவரை 7,000 ஆர்பிஎம்பிலும், 27.5 என்எம் டார்க்கை 5,250 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

ஹோண்டா ஃபோர்ஷா 300 மேக்ஸி ஸ்கூட்டர் டெலிவரி ஆரம்பம்.. இந்தியாவின் முதல் அதிக விலையுடைய ஸ்கூட்டர் இதுதான்..

இந்த எஞ்ஜின் வி-மேட்டிக் டிரான்ஸ்மிஷன் அமைப்பில் பெல்டைக் கொண்டு ஸ்கூட்டருக்கு அதிவேக திறனை வழங்கும்.

இந்த அதீத திறனின்போது ஸ்கூட்டரில் அசௌகரியமான உணர்வு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக 1510மிமீ வீல் இந்த மேக்ஸி ஸ்கூட்டருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஹோண்டா ஃபோர்ஷா 300 மேக்ஸி ஸ்கூட்டர் டெலிவரி ஆரம்பம்.. இந்தியாவின் முதல் அதிக விலையுடைய ஸ்கூட்டர் இதுதான்..

இதுமட்டுமின்றி சிறப்பான சஸ்பென்ஷனுக்காக 33மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்பக்கத்திற்கும், 7 விதமாக அட்ஜஸ்ட் செய்து கொள்ளக்கூடிய ட்வின் ஷாக் அப்சார்பர் பின்பக்கத்திலும் வழங்கப்பட்டுள்ளது.

ஹோண்டா ஃபோர்ஷா 300 மேக்ஸி ஸ்கூட்டர் டெலிவரி ஆரம்பம்.. இந்தியாவின் முதல் அதிக விலையுடைய ஸ்கூட்டர் இதுதான்..

தொடர்ந்து, பாதுகாப்பு வசதியாக 256மிமீ டிஸ்க் பிரேக் முன்பக்க வீலுக்கும், 240மிமீ டிஸ்க் பிரேக் பின்பக்கத்திலும் இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன், கூடுதல் பாதுகாப்பு அம்சமாக ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இரு வீல்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்த ஸ்கூட்டரின முன் பக்க வீல் 14 இன்சிலும், பின் பக்க வீல் 15 இன்சிலும் காணப்படுகின்றது.

ஹோண்டா ஃபோர்ஷா 300 மேக்ஸி ஸ்கூட்டர் டெலிவரி ஆரம்பம்.. இந்தியாவின் முதல் அதிக விலையுடைய ஸ்கூட்டர் இதுதான்..

இதுதவிர, இந்த மேக்ஸி ரக ஸ்கூட்டரில் பிரிமியம் வசதியாக பல்வேறு தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அனலாக் ஸ்பீடோ மீட்டர் மற்றும் டிஜிட்டர் ரெவ்-கவுண்டருடன் கூடிய நடுத்தர டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் சிறப்பு வாய்ந்த ஒன்றாக உள்ளது. இது, ஸ்கூட்டரைப் பற்றிய பல்வேறு தகவலை ரைடருக்கு வழங்கும்.

ஹோண்டா ஃபோர்ஷா 300 மேக்ஸி ஸ்கூட்டர் டெலிவரி ஆரம்பம்.. இந்தியாவின் முதல் அதிக விலையுடைய ஸ்கூட்டர் இதுதான்..

இதேபோன்று, ஸ்கூட்டரின் கவர்ச்சியான தோற்றத்திற்காக எல்இடி மின் விளக்குகளே அனைத்திற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், டிஆர்எல்கள், ஹெட்லேம்ப் மற்றும் வால் பகுதி போன்றவற்றில் எல்இடி மின் விளக்குகள் கூடுதல் அலங்கரிப்பை வழங்குகின்றது.

ஹோண்டா ஃபோர்ஷா 300 மேக்ஸி ஸ்கூட்டர் டெலிவரி ஆரம்பம்.. இந்தியாவின் முதல் அதிக விலையுடைய ஸ்கூட்டர் இதுதான்..

தொடர்ந்து, கூடுதல் தொழில்நுட்ப வசதியாக ஸ்மார்ட் கீ, அதிகளவு இடவசதி கொண்ட ஸ்டோரேஜ் (இதில் இரண்டு ஹெல்மெட்டுகளை வைத்துக் கொள்ள முடியும்), அட்ஜெஸ்டபிள் வின்ட்ஸ்கிரீன் மற்றும் மொபைல் போன்களை சார்ஜ்செய்து கொள்ள ஏதுவாக 12வோல்ட் சார்ஜிங் பாயிண்ட் உள்ளிட்டவை ஹோண்டா ஃபோர்ஷா 300 ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன.

ஹோண்டா ஃபோர்ஷா 300 மேக்ஸி ஸ்கூட்டர் டெலிவரி ஆரம்பம்.. இந்தியாவின் முதல் அதிக விலையுடைய ஸ்கூட்டர் இதுதான்..

இந்த உலக தரம் வாய்ந்த தோற்றம் இந்திய ஸ்கூட்டர் சந்தையை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும். இதற்கான வழியை ஹோண்டா ஏற்படுத்தியிருப்பதாக அந்நிறுவனத்தின் சிஇஓ மற்றும் எம்டியான மினோரு கடோ பெருமிதம் தெரிவித்தார்.

Most Read Articles
English summary
Honda Forza 300 Maxi Scooter Deliveries Begin In India: Part Of Its BigWing Portfolio Expansion. Read In Tamil.
Story first published: Wednesday, February 19, 2020, 16:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X