நாம் நினைப்பதை விடவும் பெரிய உருவத்துடன் வரும் புதிய ஹோண்டா ஃபோர்ஸா 750... டீசர் வீடியோ வெளியீடு...

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் புதிய ஃபோர்ஸா மேக்ஸி-ஸ்கூட்டரின் இரண்டாவது டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

நாம் நினைப்பதை விடவும் பெரிய உருவத்துடன் வரும் புதிய ஹோண்டா ஃபோர்ஸா 750... டீசர் வீடியோ வெளியீடு...

இந்த புதிய டீசர் வீடியோ ஆனது ஹோண்டாவின் புதிய தயாரிப்பான ஃபோர்ஸா 750, வருகிற அக்டோபர் 14ஆம் தேதி அறிமுகவுள்ளதை உறுதிப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி ஸ்கூட்டரில் எல்இடி டிஆர்எல்களுடன் பொருத்தப்பட்டிருக்கும் இரட்டை-எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி டெயில்லேம்பையும் வெளிக்காட்டுகிறது.

நாம் நினைப்பதை விடவும் பெரிய உருவத்துடன் வரும் புதிய ஹோண்டா ஃபோர்ஸா 750... டீசர் வீடியோ வெளியீடு...

இவற்றுடன் எரிபொருள் நுகர்வு, வேகமானி, எரிபொருள் அளவு, ரெவ் கவுண்டர், கியர் நிலை காட்டி உள்ளிட்டவற்றை காட்டும் வண்ண டிஎஃப்டி திரையும் இந்த ஸ்கூட்டர் கொண்டிருப்பதையும் இந்த டீசர் மூலமாக அறிய முடிகிறது.

நாம் நினைப்பதை விடவும் பெரிய உருவத்துடன் வரும் புதிய ஹோண்டா ஃபோர்ஸா 750... டீசர் வீடியோ வெளியீடு...

மேலும் ஸ்கூட்டரின் சிறப்பம்சமாக வழங்கப்பட்டுள்ள ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான் மற்றும் ரைடிங் மோட்களையும் வீடியோவில் கவனித்திருப்பீர்கள். மற்றப்படி புதிய ஃபோர்ஸா 750-ன் என்ஜின் அமைப்பு குறித்த எந்த தகவலும் தற்போதைக்கு கிடைக்க பெறவில்லை.

நமக்கு தெரிந்தவரை புத்தம் புதிய என்ஜினை இந்த புதிய மேக்ஸி-ஸ்கூட்டரில் ஹோண்டா நிறுவனம் பயன்படுத்தி இருக்கலாம். தற்சமயம் ஃபோர்ஸா வரிசையில் ஃபோர்ஸா 125 மற்றும் ஃபோர்ஸா 300 உள்ளிட்ட மாடல்களை ஐரோப்பிய சந்தையில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் பிராண்ட் சந்தைப்படுத்தி வருகிறது.

நாம் நினைப்பதை விடவும் பெரிய உருவத்துடன் வரும் புதிய ஹோண்டா ஃபோர்ஸா 750... டீசர் வீடியோ வெளியீடு...

இதில் ஃபோர்ஸா 300 இன்னும் சில வருடங்களில் இந்திய சந்தைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் மாடலில் 279சிசி, லிக்யூடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. எஸ்ஒஎச்சி உள்ளமைவு மற்றும் ஃப்யூல்-இன்ஜெக்டட் தொழிற்நுட்பம் உள்ளிட்டவை இந்த என்ஜின் அமைப்பில் வழங்கப்படுகின்றன.

நாம் நினைப்பதை விடவும் பெரிய உருவத்துடன் வரும் புதிய ஹோண்டா ஃபோர்ஸா 750... டீசர் வீடியோ வெளியீடு...

தானியங்கி மையவிலக்கு கிளட்ச் மற்றும் வி-பெல்ட் உள்ளிட்டவற்றை கொண்ட சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகின்ற இந்த என்ஜின் மூலமாக அதிகப்பட்சமாக 7000 ஆர்பிஎம்-ல் 24.8 பிஎச்பி பவரையும், 5750 ஆர்பிஎம்-ல் 27.2 என்எம் டார்க் திறனையும் பெற முடியும்.

நாம் நினைப்பதை விடவும் பெரிய உருவத்துடன் வரும் புதிய ஹோண்டா ஃபோர்ஸா 750... டீசர் வீடியோ வெளியீடு...

முக்கிய சிறப்பம்சமாக, முன் மற்றும் பின்புற சக்கர வேகங்களுக்கு இடையிலான வித்தியாசத்தை உணர்ந்து பின்புற சக்கர ட்ராக்‌ஷனை மீண்டும் பெற அனுமதிக்கும் ஹோண்டா தேர்ந்தெடுக்கப்பட்ட டார்க் கண்ட்ரோல் (HSTC) உடன் ஃபோர்ஸா 300 வருகிறது. இந்த அமைப்பானது ஸ்லிப் விகிதத்தைக் கணக்கிடுவதன் மூலம் ஃப்யூல்-இன்ஜெக்டட் சிஸ்டம் வழியாக என்ஜினின் டார்க்கை கட்டுப்படுத்த உதவுகிறது.

Most Read Articles
English summary
Honda motorcycle dropped Forza 750 Teaser video. Read in Telugu.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X