மோட்டார்சைக்கிள் வரலாற்றில் புதிய முயற்சி!! ஹோண்டா கோல்டுவிங் பைக்கில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல்

மோட்டார்சைக்கிள்கள் வரலாற்றில் அடுத்த தலைமுறைக்கான அப்டேட்டாக ஹோண்டா கோல்டுவிங் க்ரூஸர் பைக்கில் அடாப்டிப் க்ரூஸ் கண்ட்ரோல் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மோட்டார்சைக்கிள் வரலாற்றில் புதிய முயற்சி!! ஹோண்டா கோல்டுவிங் பைக்கில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல்

ரேடார் சார்ந்த பாதுகாப்பு வசதிகள் கார்களில் தான் வழங்கப்படுகின்றன. ஆனால் மோட்டார்சைக்கிள்களில் வழங்கப்படுவது இல்லை. ஆனால் சில இருசக்கர வாகன நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளில் இத்தகைய பாதுகாப்பு வசதிகளில் ஏதேனும் ஒன்றை கொண்டுவருவதில் முனைப்புடன் உள்ளன.

மோட்டார்சைக்கிள் வரலாற்றில் புதிய முயற்சி!! ஹோண்டா கோல்டுவிங் பைக்கில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல்

இந்த வகையில் முன் மற்றும் பின்பக்கத்தில் ரேடார் சிஸ்டங்களுடன் முதல் மோட்டார்சைக்கிளாக டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 வெளிவந்திருந்தது. தங்களது எதிர்கால மாடல்களில் புதிய ஆக்டிவ் க்ரூஸ் கண்ட்ரோலை கொண்டுவரவுள்ளதாக பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனமும் ஏற்கனவே கூறியிருந்தது.

மோட்டார்சைக்கிள் வரலாற்றில் புதிய முயற்சி!! ஹோண்டா கோல்டுவிங் பைக்கில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல்

இந்த வகையில் ஹோண்டா நிறுவனம் அதன் எதிர்கால கோல்டுவிங் க்ரூஸர் மோட்டார்சைக்கிளில் ரேடார்-சார்ந்த அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோலை வழங்கவுள்ளது. பென்னெட்ஸ் என்ற இணையத்தள பக்கத்தில் கசிந்துள்ள காப்புரிமை படங்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன.

மோட்டார்சைக்கிள் வரலாற்றில் புதிய முயற்சி!! ஹோண்டா கோல்டுவிங் பைக்கில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல்

ஏனெனில் இந்த படங்களில் ரேடார்-சார்ந்த அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை பைக்கில் பார்க்க முடிகிறது. பைக்கின் முன்பக்க ஹெட்லேம்ப் அமைப்பின் மையத்தில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் பொருத்தப்பட்டுள்ளது.

மோட்டார்சைக்கிள் வரலாற்றில் புதிய முயற்சி!! ஹோண்டா கோல்டுவிங் பைக்கில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல்

ரேடார் சென்சார் பொருத்துவதற்கு தேவையான இடம் உள்ளது, மேலும் இந்த சதுர வடிவிலான சென்சார் முன்பக்க பேனலினால் மறைக்கப்பட்டுள்ளது. இது எந்த விதத்திலும் சென்சாரின் செயல்பாட்டிற்கு தடையாகவோ அல்லது தோற்றத்தை கெடுக்கும் விதத்திலோ இல்லை.

மோட்டார்சைக்கிள் வரலாற்றில் புதிய முயற்சி!! ஹோண்டா கோல்டுவிங் பைக்கில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல்

பேனலுக்கும் ரேடார் சென்சாருக்கும் இடையே சிறிய இடைவெளி உள்ளதால் இயக்கத்தின்போது அதிர்வினால் இரைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளதால், அந்த இடத்தை தயாரிப்பு நிறுவனம் ஸ்பான்ச்-வகையிலான மெட்ரீயல் மூலம் அடைத்துள்ளது.

மோட்டார்சைக்கிள் வரலாற்றில் புதிய முயற்சி!! ஹோண்டா கோல்டுவிங் பைக்கில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல்

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 மற்றும் விரைவில் அறிமுகமாகவுள்ள பிஎம்டபிள்யூ பைக்குகளில் போஸ்ச் உடன் அந்தந்த தயாரிப்பு நிறுவனங்கள் தனித்தனியாக வடிவமைத்த ரேடார் சென்சார்கள் பொருத்தப்படவுள்ளன. அதேபோல் ஹோண்டா கோல்டுவிங் மோட்டார்சைக்கிளிலும் போஸ்ச் ரேடார் சென்சார் பொருத்தப்படலாம்.

மோட்டார்சைக்கிள் வரலாற்றில் புதிய முயற்சி!! ஹோண்டா கோல்டுவிங் பைக்கில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல்

ஏனெனில் ஹோண்டா நிறுவனம் தனது கார்களிலும் போஸ்ச் ரேடார் சென்சார்களை பொருத்தி வருகிறது. 2022ஆம் ஆண்டில் நாமும் புதிய கோல்டுவிங் க்ரூஸரை வாங்கலாம் என வதந்திகள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்த எந்த வார்த்தையையும் ஹோண்டா நிறுவனம் இதுவரை தெரிவிக்கவில்லை. ஹோண்டா கோல்டுவிங் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்குள்ளாக வேறு சில நிறுவனங்களும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோலை அதன் தயாரிப்புகளில் கொண்டுவரலாம்.

Most Read Articles

English summary
Honda Goldwing to get radar cruise
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X