மதி மயக்கும் தோற்றம், ஆர்பரிக்கும் அம்சம்! அறிமுகமானது புதிய ஹோண்டா கிரேஸியா பிஎஸ் 6... என்னா ஸ்டைலு

மதி மயக்கும் தோற்றம், ஆர்பரிக்கும் அம்சங்களுடன் ஹோண்டா நிறுவனத்தின் பிஎஸ்-6 மாடல் கிரேஸியா ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

மதி மயக்கும் தோற்றம், ஆர்பரிக்கும் அம்சம்... அறிமுகமானது புதிய ஹோண்டா கிரேஸியா பிஎஸ் 6... என்னா ஸ்டைலு!

இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும் அதன் தயாரிப்புகளை பிஎஸ்-6 தரத்திற்கு அப்கிரேட் செய்வதில் தற்போது தீவிரம் காட்டி வருகின்றன. அந்தவகையில், ஜப்பானிய நாட்டு இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டாவும் அதன் புகழ்வாய்ந்த மாடல்களை புதிய மாசு உமிழ்வு விதிக்கு ஏற்ப அப்கிரேட் செய்து வருகின்றது.

மதி மயக்கும் தோற்றம், ஆர்பரிக்கும் அம்சம்... அறிமுகமானது புதிய ஹோண்டா கிரேஸியா பிஎஸ் 6... என்னா ஸ்டைலு!

முன்னதாக, பிஎஸ்-6 தரத்தில் குறிப்பிட்ட மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டநிலையில், தற்போது அதன் பிரபல ஸ்கூட்டர்களில் ஒன்றான கிரேஸியா மாடலை பிஎஸ்-6 தரத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்கூட்டரை புதிய மாசு உமிழ்வு விதிக்கு ஏற்ப அப்கிரேட் செய்ததுடன், லேசான உருமாற்றத்தையும் ஹோண்டா வழங்கியிருக்கின்றது.

மதி மயக்கும் தோற்றம், ஆர்பரிக்கும் அம்சம்... அறிமுகமானது புதிய ஹோண்டா கிரேஸியா பிஎஸ் 6... என்னா ஸ்டைலு!

அந்தவையில், ஹோண்டா டியோ ஸ்கூட்டரைப் போல் லேசான ஸ்போர்ட்டி லுக் கிரேஸியா ஸ்கூட்டருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அதேசமயம், ஆக்டிவா 125 மாடலைத் தழுவி இந்த ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் டீசர் வீடியோ ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தது ஹோண்டா. இதைத்தொடர்ந்தே, இன்று (ஜூன் 24) அது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மதி மயக்கும் தோற்றம், ஆர்பரிக்கும் அம்சம்... அறிமுகமானது புதிய ஹோண்டா கிரேஸியா பிஎஸ் 6... என்னா ஸ்டைலு!

இது ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் இருக்கும் டிவிஎஸ் என்டார்க் 125, அப்ரில்லா எஸ்ஆர் 125, சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஆகிய ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ளது. சரி வாங்க இந்த ஸ்கூட்டர்ல என்னென்ன அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பது பற்றிய தகவலை பார்க்கலாம்.

மதி மயக்கும் தோற்றம், ஆர்பரிக்கும் அம்சம்... அறிமுகமானது புதிய ஹோண்டா கிரேஸியா பிஎஸ் 6... என்னா ஸ்டைலு!

ஹோண்டா நிறுவனம், பிஎஸ்-6 தரத்திற்கு கிரேஸியாவை உயர்த்தும்போது அதன் அம்சங்கள் சிலவற்றையும் மாற்றியிருந்ததாக மேலே கூறியிருந்தோம். அந்தவகையில், நாம் கவனிக்க வேண்டியதாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் இருக்கின்றது. இது முழு டிஜிட்டல் தரம் கொண்டதாகும். இத்துடன், எஞ்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் ஸ்விட், ப்யூவல் இன்ஜெக்சன் மற்றும் பன்முக பங்க்ஷன் ஸ்விட்சுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

மதி மயக்கும் தோற்றம், ஆர்பரிக்கும் அம்சம்... அறிமுகமானது புதிய ஹோண்டா கிரேஸியா பிஎஸ் 6... என்னா ஸ்டைலு!

இத்துடன், இருக்கை மற்றும் ப்யூவல் டேங்க் மூடியை திறப்பதற்கும் தனி ஸ்விட்சுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. தற்போது சேர்க்கப்பட்டிருக்கும் இந்த புதிய அம்சங்களில் அதிக ஈர்ப்பைப் பெறும் வகையில் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் இருக்கின்றது. இது ரைடருக்கு தேவையான பல்வேறு தகவல்களை டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வாயிலாக வழங்கும். அதாவது, ரியல் டைம் வேகம், ப்யூவல் அளவு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அது வழங்கும்.

மதி மயக்கும் தோற்றம், ஆர்பரிக்கும் அம்சம்... அறிமுகமானது புதிய ஹோண்டா கிரேஸியா பிஎஸ் 6... என்னா ஸ்டைலு!

இதேபோன்று ஸ்கூட்டரின் ஸ்டோரேஜ் மற்றும் குளோவ் பாக்ஸ் அமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால், முந்தைய மாடலைக் காட்டிலும் இதன் லிட்டர் அளவு சற்றே அதிகரித்துள்ளது.

தொடர்ந்து, கொள்ளளவை மாற்றியமைத்ததைப் போன்று கிரவுண்ட் கிளியரன்ஸைக் கூட்டியமைக்கும் விதமாக டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனின் உயரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மதி மயக்கும் தோற்றம், ஆர்பரிக்கும் அம்சம்... அறிமுகமானது புதிய ஹோண்டா கிரேஸியா பிஎஸ் 6... என்னா ஸ்டைலு!

இதனால், 16 மிமீட்டராக அதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் உயர்ந்திருக்கின்றது. ஆனால், வீல் அமைப்பில் எந்தவொரு மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, 12 இன்ச் அலாய் வீலே அதில் காணப்படுகின்றது. இது முன் பக்க வீலின் அளவாகும், பின் பக்க வீலில் 10 இன்ச் யூனிட் பொருத்தப்பட்டுள்ளது.

மதி மயக்கும் தோற்றம், ஆர்பரிக்கும் அம்சம்... அறிமுகமானது புதிய ஹோண்டா கிரேஸியா பிஎஸ் 6... என்னா ஸ்டைலு!

இந்த ஸ்கூட்டரில் டிஸ்க் பிரேக் மற்றும் டிரம் பிரேக் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இத்துடன், சிபிஎஸ் அம்சமும் வழங்கப்படுகின்றது. இது அதிக பிரேக் திறனை வீல்களுக்கு வழங்க உதவும்.

மதி மயக்கும் தோற்றம், ஆர்பரிக்கும் அம்சம்... அறிமுகமானது புதிய ஹோண்டா கிரேஸியா பிஎஸ் 6... என்னா ஸ்டைலு!

எனவே, டிஸ்க் மற்றும் டிரம் என இரு வேரியண்டுகளில் இது தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், வழக்கமான மாடலுக்கு ரூ. 73,336 என்ற விலையும், டீலக்ஸ் வெர்ஷனுக்கு ரூ. 80,978 என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மதி மயக்கும் தோற்றம், ஆர்பரிக்கும் அம்சம்... அறிமுகமானது புதிய ஹோண்டா கிரேஸியா பிஎஸ் 6... என்னா ஸ்டைலு!

மேற்கண்டவை அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும். அதேசமயம், முந்தைய மாடலின் விலையைக் காட்டிலும் இது மிக உயர்ந்த விலையாகும். பிஎஸ்-4 வெர்ஷன் தற்போதைய புதிய மாடலைக் காட்டிலும் ரூ. 13 ஆயிரம் குறைந்த விலையிலேயே விற்கப்பட்டு வந்தது. ஆனால், புதிய மாற்றங்கள் மற்றும் அம்சங்கள் சேர்ப்பின் காரணமாக இந்த விலையை மடமடவென உயர்ந்துள்ளது.

மதி மயக்கும் தோற்றம், ஆர்பரிக்கும் அம்சம்... அறிமுகமானது புதிய ஹோண்டா கிரேஸியா பிஎஸ் 6... என்னா ஸ்டைலு!

வேரியண்டில் மட்டுமில்லைங்க இந்த ஸ்கூட்டரில் நிறத்திலும் பல தேர்வுகளை வழங்குகின்றது. அதாவது, மஞ்சள், சிவப்பு, நீளம் மற்றும் கிரே ஆகிய நிறத் தேர்வுகளில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கின்றது. எல்லாத்தையுமே சொன்னீங்களே எஞ்ஜினைப் பற்றி எதுவுமே இன்னும் சொல்லல என நினைக்கிறீர்களா? அதுகுறித்த தகவல் பின்வருமாறு...

மதி மயக்கும் தோற்றம், ஆர்பரிக்கும் அம்சம்... அறிமுகமானது புதிய ஹோண்டா கிரேஸியா பிஎஸ் 6... என்னா ஸ்டைலு!

ஹோண்டா கிரேஸியா 125 பிஎஸ்-6 மாடலில் 124 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 8.29 பிஎஸ் பவரையும், 10.3 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்த உதவும். இதே தரம் கொண்ட எஞ்ஜின்தான் ஹோண்டா ஆக்டிவா 125 மாடலிலும் பயன்படுத்தப்படுகின்றது. இது, குறைந்த மாசு மற்றும் அதிக மைலேஜே வழங்கும் திறன் கொண்டதாகும்.

Most Read Articles
English summary
Honda Grazia 125 BS6 Scooter Launched In India: Prices Start At Rs 73,336. Read In Tamil.
Story first published: Wednesday, June 24, 2020, 17:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X