இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு போகும் ஹைனெஸ் சிபி350... ஏற்றுமதி பணிகளை தொடங்கியது ஹோண்டா...

இந்தியாவில் இருந்து ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளை ஹோண்டா நிறுவனம் தொடங்கியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு போகும் ஹைனெஸ் சிபி350... ஏற்றுமதி பணிகளை தொடங்கியது ஹோண்டா...

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு போட்டியாக புத்தம் புதிய ஹோண்டா ஹைனெஸ் சிபி350 (Honda H'Ness CB350) மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அத்துடன் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிளுக்கும், ஹோண்டா ஹைனெஸ் சிபி350 விற்பனையில் சவால் அளிக்கும்.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு போகும் ஹைனெஸ் சிபி350... ஏற்றுமதி பணிகளை தொடங்கியது ஹோண்டா...

புதிய ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிளை ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது. இதன்படி இந்தியாவில் இருந்து ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. கடந்த அக்டோபர் மாதத்தில் 30 பைக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு போகும் ஹைனெஸ் சிபி350... ஏற்றுமதி பணிகளை தொடங்கியது ஹோண்டா...

ஆரம்பத்தில் இந்தியாவின் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதில்தான் ஹோண்டா நிறுவனம் கவனம் செலுத்தவுள்ளது. இதன்படி கடந்த அக்டோபர் மாதத்தில், 30 ஹைனெஸ் சிபி350 பைக்குகளை மட்டும் ஹோண்டா நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது. அதே சமயம் கடந்த அக்டோபர் மாதம் ராயல் என்பீல்டு நிறுவனம் 906 கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள்களை ஏற்றுமதி செய்துள்ளது.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு போகும் ஹைனெஸ் சிபி350... ஏற்றுமதி பணிகளை தொடங்கியது ஹோண்டா...

தற்போதைய நிலையில் ஹோண்டா நிறுவனம் ஏற்றுமதி செய்த ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கைக்கும், ராயல் என்பீல்டு நிறுவனம் ஏற்றுமதி செய்ய கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கைக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. என்றாலும் வரும மாதங்களில் இந்த வித்தியாசம் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு போகும் ஹைனெஸ் சிபி350... ஏற்றுமதி பணிகளை தொடங்கியது ஹோண்டா...

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளுக்கு மாற்று எதிர்பார்ப்பவர்களை குறி வைத்து, ஹைனெஸ் சிபி350 பைக்கை ஹோண்டா நிறுவனம் விற்பனைக்கு களமிறக்கியுள்ளது. ஆனால் இது முற்றிலும் புதிய தயாரிப்பு என்பதால், வாடிக்கையாளர்கள் ஏற்று கொள்வதற்கும், அவர்கள் மத்தியில் பிரபலமடைவதற்கும் கொஞ்ச காலம் ஆகலாம்.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு போகும் ஹைனெஸ் சிபி350... ஏற்றுமதி பணிகளை தொடங்கியது ஹோண்டா...

வரும் மாதங்களில், சந்தையில் நிலவும் தேவையை பொறுத்து ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. உள்நாட்டு சந்தையை பொறுத்தவரை, ஹோண்டா நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் 1,290 ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு போகும் ஹைனெஸ் சிபி350... ஏற்றுமதி பணிகளை தொடங்கியது ஹோண்டா...

அதே சமயம் ஒட்டுமொத்தமாக 2,420 பைக்குகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்த செக்மெண்ட்டில் இவை சிறப்பான எண்ணிக்கைகள்தான் என்றாலும், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 அளவிற்கு இல்லை. ஏனெனில் ராயல் என்பீல்டு நிறுவனம் உள்நாட்டில் விற்பனை செய்த கிளாசிக் 350 பைக்குகளின் எண்ணிக்கை 41,953 யூனிட்களாக உள்ளது.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு போகும் ஹைனெஸ் சிபி350... ஏற்றுமதி பணிகளை தொடங்கியது ஹோண்டா...

ஆனால் அதிகம் விற்பனையாகும் 200-500 சிசி மோட்டார்சைக்கிள்களின் டாப்-10 பட்டியலில் நுழைந்திருப்பது, ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கின் சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் கடந்த அக்டோபர் மாதம் புதிய ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது.

Most Read Articles
English summary
Honda H’Ness CB350 Export Starts - Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X