Just In
- 1 hr ago
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- 2 hrs ago
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
- 3 hrs ago
முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்!
- 3 hrs ago
சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- News
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று... ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை
- Sports
இனிமே இவரை டீமை விட்டு ஒதுக்க முடியாது.. என்ன செய்யப் போகிறார் கேப்டன் கோலி?
- Finance
பட்ஜெட்டுக்கு முன் எதில் முதலீடு செய்யலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..!
- Movies
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பழமையும், புதுமையும் கலந்த கலவை... ராயல் என்பீல்டுக்கு டஃப் கொடுக்க வந்த ஹோண்டா ஹைனெஸ் சிபி350...
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், புத்தம் புதிய ஹைனெஸ் சிபி350 பைக்கை இந்திய சந்தையில் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மாடர்ன்-கிளாசிக் மோட்டார்சைக்கிள் செக்மெண்ட்டில் ஹோண்டா நிறுவனம் நுழைந்துள்ளது.
புதிய ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள், 2 லட்ச ரூபாய்க்கும் குறைவான எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த சவாலான விலை நிர்ணயம், ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கை கவர்ச்சிகரமான தயாரிப்பாக மாற்றுகிறது. ஆனால் ராயல் என்பீல்டு என்ற அரசன் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக்கும் செக்மெண்ட் இது.
ஹைனெஸ் சிபி350 மூலம், அதற்கு ஹோண்டா சவால் அளிக்குமா? என்பதே தற்போது எல்லோர் மனதிலும் இருக்கும் கேள்வி. அந்த கேள்விக்கு விடை காணும் எண்ணத்துடன், பெங்களூரில் உள்ள ஹோண்டா நிறுவனத்தின் பிரீமியம் பிக்விங் டீலர்ஷிப்பில், ஹைனெஸ் சிபி350 பைக்குடன் கொஞ்ச நேரத்தை நாங்கள் செலவிட்டோம். இதில், நாங்கள் என்ன தெரிந்து கொண்டோம்? என்பதை இந்த செய்தியின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறாம்.

டிசைன் & ஸ்டைலிங்
குறைந்த அளவிலான கிராபிக்ஸ், எளிமையான லைன்கள் உடன், கிளாசிக் ரெட்ரோ டிசைனில், ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் உருவாக்கப்பட்டுள்ளது. தங்களது பழைய சிபி மோட்டார்சைக்கிள்களை மனதில் வைத்து, புதிய ஹைனெஸ் சிபி350 பைக்கை ஹோண்டா நிறுவனம் மிகவும் வசீகரமாக உருவாக்கியுள்ளது.

முதலில் முன் பகுதியில் இருந்து தொடங்குவோம். எல்இடி லைட்கள் உடன் வட்ட வடிவ ஹெட்லேம்ப் யூனிட்டை ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பெற்றுள்ளது. இதன் இருபுறமும் பக்கவாட்டில், செக்மெண்ட்டிலேயே முதல் முறையாக ரிங்-டைப் விங்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. ரெட்ரோ டிசைன் என்பதை மனதில் வைத்து, ஹைனெஸ் சிபி350 பைக்கை சுற்றிலும், க்ரோம் பூச்சுக்களை சற்று தூக்கலாகவே வழங்கியுள்ளது ஹோண்டா. முன் பகுதியில் க்ரோம் பூச்சுடன் கூடிய ஃபெண்டர் வழங்கப்பட்டிருப்பது அதற்கு ஒரு உதாரணம்.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கில், 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் இருபுறமும் ஹோண்டா பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஹைனெஸ் சிபி350 பேட்ஜ், இருக்கைக்கு கீழே சைடு பேனலில் இடம்பெற்றுள்ளது.

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கில், சிங்கிள்-பீஸ் சீட் வழங்கப்பட்டுள்ளது. இந்த இருக்கை போதுமான அளவிற்கு பெரிதாகவே உள்ளது. எனவே பைக்கை ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர் என இருவருக்கும் சௌகரியமான பயணம் கிடைக்கும். கால்களை வைக்க கூடிய ஃபுட்ரெஸ்ட்டும், ஹேண்டில்பாரும் சரியாக அமைக்கப்பட்டிருப்பதால், ரிலாக்ஸான ரைடிங் பொஷிஷன் கிடைக்கிறது.

பக்கவாட்டை பொறுத்தவரை இன்ஜின் கவர் மற்றும் புகைபோக்கி குழாய் ஆகிய பாகங்களில், அதிகப்படியான க்ரோம் பூச்சுக்களை காண முடிகிறது. இந்த பைக்கின் முன் பகுதியில் 19 இன்ச், பின் பகுதியில் 18 இன்ச் கருப்பு நிற அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

பின் பகுதியை பொறுத்தவரை, இங்கேயும் க்ரோம் பூசப்பட்ட ஃபெண்டர் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் எல்இடி டெயில்லைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் இருபுறமும் பக்கவாட்டில், செக்மெண்ட்டிலேயே முதல் முறையாக ரிங்-டைப் டர்ன் இன்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

வேரியண்ட்கள் & வசதிகள்
டிஎல்எக்ஸ் மற்றும் டிஎல்எக்ஸ் ப்ரோ என மொத்தம் இரண்டு வேரியண்ட்களில், ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் கிடைக்கும். இந்த இரண்டு வேரியண்ட்களும் பெரும்பாலான வசதிகளை பகிர்ந்து கொள்கின்றன. என்றாலும் டாப் வேரியண்ட் என்பதை குறிக்கும் வகையில், டிஎல்எக்ஸ் ப்ரோ மாடலில், ஒரு சில வசதிகள் பிரேத்யேகமாக வழங்கப்பட்டுள்ளன.
கிளாசிக் ரெட்ரோ டிசைனில் இருந்தாலும், பல்வேறு அதிநவீன வசதிகளையும் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பெற்றுள்ளது. இந்த பைக்கில், சிறிய டிஜிட்டல் டிஸ்ப்ளே உடன் வட்ட வடிவ அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் உள்ள இந்த சிறிய ஸ்க்ரீன் மூலம், நிகழ் நேர மைலேஜ், சராசரி எரிபொருள் சிக்கனம், இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் பயணம் செய்ய முடியும்? என்பது போன்ற தகவல்களை பெறலாம்.

அதே சமயம் இந்த பைக்கின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி வசதியுடன் வருகிறது. இதன் மூலம் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், கால் மற்றும் மெசேஜ் அலர்ட்கள் மற்றும் மியூசிக் கண்ட்ரோல்கள் ஆகிய வசதிகளை பெற முடியும். ஹெச்எஸ்விசி எனப்படும் ஹோண்டா ஸ்மார்ட்போன் வாய்ஸ் கண்ட்ரோல் (HSVC - Honda Smartphone Voice Control) அமைப்பு மூலமாக, இந்த வசதிகளை கட்டுப்படுத்த முடியும்.
இதுதவிர ஹெச்எஸ்டிசி எனப்படும் ஹோண்டா செலக்டபிள் டார்க் கண்ட்ரோல் சிஸ்டமும் (HSTC - Honda Selectable Torque Control) இந்த பைக்கில் இடம்பெற்றுள்ளது. அத்துடன் அஸிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச், ட்யூயல் சேனல் ஏபிஎஸ், சைடு-ஸ்டாண்டு இன்டிகேட்டர் உள்ளிட்ட வசதிகளும், ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கில் வழங்கப்படுகின்றன.

இன்ஜின், சஸ்பென்ஸன் & பிரேக்கிங்
ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கை நாங்கள் இன்னும் ஓட்டி பார்க்கவில்லை. என்றாலும் இன்ஜின் பவர் மற்றும் டார்க் திறன்கள் சிறப்பாக உள்ளன. இந்த பைக்கில் புதிய 348.36 சிசி, ஏர்கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5500 ஆர்பிஎம்மில் 20.8 பிஎச்பி பவரையும், 3000 ஆர்பிஎம்மில் 30 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
தனது முக்கிய போட்டியாளர்களை காட்டிலும் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கின் எடை குறைவானது. இதன் எடை 181 கிலோ மட்டுமே. குறைவான எடையில், இந்த அளவிற்கான பவர் மற்றும் டார்க் திறன்கள் கிடைக்கும்போது, சிறப்பான பெர்ஃபார்மென்ஸ் வெளிப்படும் என எதிர்பார்க்கலாம்.
இந்த பைக்கின் முன் பகுதியில் ஸ்டாண்டர்டு டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின் பகுதியில் ட்யூயல் ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்பட்டுள்ளன. முன் பகுதியில் 310 மில்லி மீட்டர் டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 240 மில்லி மீட்டர் டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன.

வண்ணங்கள், விலை மற்றும் போட்டியாளர்கள்
ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் ஒட்டுமொத்தமாக 6 விதமான வண்ண தேர்வுகளில் கிடைக்கும். இதில், டிஎல்எக்ஸ் வேரியண்ட்டில் வழங்கப்படும் 3 சிங்கிள்-டோன் வண்ண தேர்வுகளும் அடங்கும். டிஎல்எக்ஸ் வேரியண்ட்டானது, சிகப்பு, பச்சை மற்றும் கருப்பு என 3 சிங்கிள்-டோன் வண்ண தேர்வுகளில் கிடைக்கும்.
இதுதவிர 3 ட்யூயல்-டோன் வண்ண தேர்வுகளும், ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கில் வழங்கப்படுகின்றன. ஆனால் டிஎல்எக்ஸ் ப்ரோ டாப் வேரியண்ட்டில் மட்டுமே ட்யூயல்-டோன் வண்ண தேர்வுகள் கிடைக்கும். கருப்பு/சாம்பல், நீலம்/வெள்ளை, கருப்பு/சில்வர் ஆகிய மூன்று ட்யூயல்-டோன் வண்ண தேர்வுகளில், டிஎல்எக்ஸ் ப்ரோ வேரியண்ட்டை நீங்கள் பெறலாம்.
ஹோண்டா நிறுவனம், ஹைனெஸ் சிபி350 பைக்கை தற்போதுதான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. 1.85 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில், ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350, ஜாவா ஸ்டாண்டர்டு மற்றும் பெனெல்லி இம்பீரியல் 400 உள்ளிட்ட பைக்குகளுக்கு, ஹோண்டா ஹைனெஸ் சிபி350 கடுமையான போட்டியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?
ராயல் என்பீல்டு நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வரும் செக்மெண்ட்டில், தற்போது ஹோண்டா ஹைனெஸ் சிபி350 நுழைந்துள்ளது. இந்த புதிய பைக், வசீகரமாக உள்ளது என்பதில் சந்தேகமில்லை. போட்டியாளர்களை எதிர்கொள்வதற்கு இது உதவும். எனினும் சாலையில் இது எப்படி செயல்படுகிறது? என்பதை பொறுத்தே இதன் வெற்றி அமையும். இதனை தெரிந்து கொள்ள நாம் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும்.