கொரோனாவையே கதிகலங்க வைத்த ஹோண்டா.. இக்கட்டான சூழ்நிலையிலும் புதிய சாதனை.. போட்டி நிறுவனங்கள் வியப்பு

உலகையே கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்ற இக்கட்டான சூழ்நிலையில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனம் புதிய சாதனைப் படைத்து, போட்டி நிறுவனங்களை வாயடைக்கச் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

கொரோனாவையே கதிகலங்க வைத்த ஹோண்டா... இக்கட்டான சூழ்நிலையிலும் புதிய சாதனை.. போட்டி நிறுவனங்கள் வியப்பு!

இந்தியாவில் கார்களைக் காட்டிலும் இருசக்கர வாகனங்களுக்கே அதிகம் வரவேற்பு நிலவி வருகின்றது. ஹீரோ, ஹோண்டா மற்றும் பஜாஜ் ஆகிய நிறுவனங்களின் இரு சக்கர வாகனங்களுக்கு இங்கு ஏகபோகமான வரவேற்பு நிலவி வருகின்றது. ஆனால், அண்மைக் காலங்களாக இந்நிறுவனங்களின் வாகன விற்பனை மற்றும் உற்பத்திக்கு கொரோனா வைரஸ் முட்டுக் கட்டை போட்டுள்ளது.

கொரோனாவையே கதிகலங்க வைத்த ஹோண்டா... இக்கட்டான சூழ்நிலையிலும் புதிய சாதனை.. போட்டி நிறுவனங்கள் வியப்பு!

தற்போது கொரோனா வைரஸ் பரவலின் அச்சத்தின் காரணமாக நாடு முழுவதும் இயக்கமற்ற நிலையில் உள்ளது. தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு அமலுக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதால் இந்நிலையே நாடு முழுவதும் காணப்படுகின்றது. இதனால், மக்கள் அவரவர்களின் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர்.

கொரோனாவையே கதிகலங்க வைத்த ஹோண்டா... இக்கட்டான சூழ்நிலையிலும் புதிய சாதனை.. போட்டி நிறுவனங்கள் வியப்பு!

இதன் விளைவாக வழக்கமான இயக்கங்கள் அனைத்தும் முழுமையாக தடையாகியுள்ளது. இதில், வாகன உற்பத்தியும் அடங்கும்.

இதுமட்டுமின்றி, மக்கள் நடமாட்டத்திற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டிருப்பதால் ஒரே ஒரு யூனிட் வாகனத்தைகூட விற்க முடியாமல் டீலர்கள் தவித்து வருகின்றனர்.

கொரோனாவையே கதிகலங்க வைத்த ஹோண்டா... இக்கட்டான சூழ்நிலையிலும் புதிய சாதனை.. போட்டி நிறுவனங்கள் வியப்பு!

இந்நிலையை மாற்ற வேண்டும் என்பதற்கு சில முன்னணி நிறுவனங்கள் ஆன்லைனில் புக்கிங் செய்வதை ஊக்குவித்து வருகின்றன.

ஆனால், இம்மாதிரியான முயற்சிகளுக்கு முன்னரே ஹோண்டா நிறுவனம் மிகப்பெரிய சாதனையைச் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவையே கதிகலங்க வைத்த ஹோண்டா... இக்கட்டான சூழ்நிலையிலும் புதிய சாதனை.. போட்டி நிறுவனங்கள் வியப்பு!

இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஹோண்டா இருசக்கர வாகனங்களின் விற்பனை தகவல் வெளியாகியுள்ளது. இந்நிறுவனம், 2020 மார்ச் மாத விற்பனையில் 2,61,699 யூனிட்டுகளை விற்பனைச் செய்து, 5 சதவீத வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது.

கொரோனாவையே கதிகலங்க வைத்த ஹோண்டா... இக்கட்டான சூழ்நிலையிலும் புதிய சாதனை.. போட்டி நிறுவனங்கள் வியப்பு!

இதுவே, கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாத விற்பனையைப் பார்த்தோமேயானால் 2,49,136 யூனிட்டுகளை மட்டுமே அந்நிறுவனம் விற்பனைச் செய்திருக்கின்றது.

இந்த தகவல்களை வைத்து பார்க்கையில் கொரோனை வைரசின் அறிகுறி உலகம் முழுவதும் தெரிய ஆரம்பித்த பின்னரும் மக்கள் பலர் ஒன்று திரண்டு ஹோண்டா நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களை வாங்கி குவித்திருப்பது தெரியவந்துள்ளது.

கொரோனாவையே கதிகலங்க வைத்த ஹோண்டா... இக்கட்டான சூழ்நிலையிலும் புதிய சாதனை.. போட்டி நிறுவனங்கள் வியப்பு!

இதேபோன்று, உள்நாட்டு விற்பனையிலும் ஹோண்டா நிறுவனம் 11 சதவீத வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது.

அதாவது, கடந்த வருட மார்ச் 2,22,325 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைச் செய்த ஹோண்டா நடப்பாண்டில் 2,45,699 யூனிட்டுகளை விற்பனைச் செய்து சாதித்துள்ளது.

கொரோனாவையே கதிகலங்க வைத்த ஹோண்டா... இக்கட்டான சூழ்நிலையிலும் புதிய சாதனை.. போட்டி நிறுவனங்கள் வியப்பு!

கொரோனா அச்சம் காரணாக பல நிறுவனங்கள் தங்களின் ஆபரேஷன்கள் அனைத்தையும் நிறுத்தின. இதேபோன்று ஹோண்டா நிறுவனம் வைரஸ் காரணமாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. அப்படியிருந்தும், மக்கள் தங்களின் புதிய வாகனத்திற்கான தொகையைச் செலுத்தியுள்ளனர்.

கொரோனாவையே கதிகலங்க வைத்த ஹோண்டா... இக்கட்டான சூழ்நிலையிலும் புதிய சாதனை.. போட்டி நிறுவனங்கள் வியப்பு!

இதனாலயே ஹோண்டாவால் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் சாதிக்க முடிந்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஹோண்டா நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக இலவச சேவைகள் சிலவற்றை அறிவித்துள்ளது. இத்துடன், வாரண்டி மற்றும் சர்வீஸ் காலவதியை நாட்களைக் கூடுதலாக அதிகரித்து வழங்கியுள்ளது. இதேபோன்ற நடவடிக்கையைதான் மேலும் சில வாகன உற்பத்தி நிறுவனங்கள் எடுத்து வருகின்றன.

கொரோனாவையே கதிகலங்க வைத்த ஹோண்டா... இக்கட்டான சூழ்நிலையிலும் புதிய சாதனை.. போட்டி நிறுவனங்கள் வியப்பு!

இதேபோல், புதிய மாசு உமிழ் பிஎஸ்-6 இன் காரணமாக பல நிறுவனங்கள் இக்கட்டான சூழலில் சிக்கியிருக்கின்ற வேலையில், ஹோண்டா நிறுவனம் ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்பாகவே தயாராகிவிட்டது. இந்நிறுவனம், சரியாக புதிய விதி அமலுக்கு வரவிருப்பதற்கு ஒரு மாதம் முன்னதாகவே பிஎஸ் 6 தர இரு சக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய தொடங்கிவிட்டது. அதன்படி, முதல் மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா ஆக்டிவா 125 எஃப்ஐ பிஎஸ்-6 ஸ்கூட்டருக்கு இந்தியாவில் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

Most Read Articles

English summary
Bike Sales Report In India In March 2020: Honda Two-Wheeler Registers Growth Amidst Lockdown. Read In Tamil.
Story first published: Friday, April 3, 2020, 17:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X