கடும் விற்பனையில் போட்டியில் ஹோண்டா- ஹீரோ மோட்டோகார்ப்!! பாதி இந்தியாவில் இந்த பிராண்ட்தான் முதலிடம்...

15 மாநிலங்களில் விற்பனையில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்பை முந்தியுள்ளது.

கடும் விற்பனையில் போட்டியில் ஹோண்டா- ஹீரோ மோட்டோகார்ப்!! பாதி இந்தியாவில் இந்த பிராண்ட்தான் முதலிடம்...

ஹீரோ க்ரூப்பும் ஜப்பானை சேர்ந்த ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டடர் நிறுவனமும் இந்திய சந்தைக்காக கூட்டணியில் இருந்தன என்ற விஷயம் உங்களில் பல பேருக்கு தெரிந்திருக்கும். ஆனால் இவை இரண்டும் பிரிந்து கிட்டத்தட்ட 6 வருடங்களாகிவிட்டன.

கடும் விற்பனையில் போட்டியில் ஹோண்டா- ஹீரோ மோட்டோகார்ப்!! பாதி இந்தியாவில் இந்த பிராண்ட்தான் முதலிடம்...

ஒன்றாக இருக்கும்போது அசூர பலத்துடன் இருந்த இவை தனித்தனியான பின்பு விற்பனையில் பலத்த போட்டி போட்டு வருகின்றன. ஆனால் உண்மையில் இதில் ஹீரோவின் கைதான் சற்று ஓங்கியுள்ளது என்று சொல்ல வேண்டும்.

கடும் விற்பனையில் போட்டியில் ஹோண்டா- ஹீரோ மோட்டோகார்ப்!! பாதி இந்தியாவில் இந்த பிராண்ட்தான் முதலிடம்...

இருப்பினும் 15 மாநிலங்கள் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களில் ஹோண்டா விற்பனையில் முதலிடத்தில் உள்ளது. அதாவது, இந்திய சந்தையில் 52 சதவீத பகுதியில் ஹோண்டா முதலிட அரயணையில் வீற்றுள்ளது.

கடும் விற்பனையில் போட்டியில் ஹோண்டா- ஹீரோ மோட்டோகார்ப்!! பாதி இந்தியாவில் இந்த பிராண்ட்தான் முதலிடம்...

இந்த 15 மாநிலங்களில் தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா உள்ளிட்டவை முக்கியமான சந்தைகளாக உள்ளன. இந்த முதலிடம் 2018ஆம் நிதியாண்டின் ஏப்ரல்- செப்டம்பர் மாதத்தில் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சந்தையில் பதிவு செய்த விற்பனை எண்ணிக்கைகளின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ளது.

கடும் விற்பனையில் போட்டியில் ஹோண்டா- ஹீரோ மோட்டோகார்ப்!! பாதி இந்தியாவில் இந்த பிராண்ட்தான் முதலிடம்...
States/UT Industry Growth Honda Growth
Uttar Pradesh 12% 24%
Rajasthan 7% 22%
Madhya Pradesh 8% 22%
West Bengal 15% 34%
Bihar 17% 31%
Odisha 14% 35%
Haryana 6% 21%
Jharkhand 15% 39%
Chattisgarh 9% 28%

குறிப்பாக மேற்கு வங்காளம், ஜார்கண்ட், ஒடிசா போன்ற இந்திய வடகிழக்கு மாநிலங்களில் ஹோண்டா நிறுவனம் வேகமாக பிரபலமாகி வருகிறது. இதுகுறித்து ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் தலைவரும் சிஇஒ-வுமான மினோரு கடோ கருத்து தெரிவிக்கையில், வாடிக்கையாளர்களின் இன்றைய தேவைகள் மற்றும் நாளைய கனவுகளை பற்றி ஹோண்டா ஆழமான புரிதலில் உள்ளது.

கடும் விற்பனையில் போட்டியில் ஹோண்டா- ஹீரோ மோட்டோகார்ப்!! பாதி இந்தியாவில் இந்த பிராண்ட்தான் முதலிடம்...

இந்திய சமூகத்தின் இதயத்தை வெல்வதில் ஹோண்டா அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்கிறது. தரமான ஹோண்டா தயாரிப்புகளுக்கு ஏற்படும் தேவைகளை பூர்த்தி செய்ய முதலீடுகளை விரைவாக மேற்கொண்டு வருகிறோம்.

கடும் விற்பனையில் போட்டியில் ஹோண்டா- ஹீரோ மோட்டோகார்ப்!! பாதி இந்தியாவில் இந்த பிராண்ட்தான் முதலிடம்...

வெறும் ஆறு ஆண்டுகளில் ஒன்றிலிருந்து தொழிற்சாலையை நான்காக்கியது, புதிய கவர்ச்சிகரமான மாடல்களை அறிமுகப்படுத்தியது மற்றும் நெட்வொர்க்கை மும்மடங்கு அதிகரித்தது என ஏகப்பட்ட வழிகளில் இந்தியாவில் சந்தையை விரிவுப்படுத்த ஹோண்டா முயற்சிகளை மேற்கொண்டுவந்துள்ளது" என கூறினார்.

கடும் விற்பனையில் போட்டியில் ஹோண்டா- ஹீரோ மோட்டோகார்ப்!! பாதி இந்தியாவில் இந்த பிராண்ட்தான் முதலிடம்...

2011ல் ஹோண்டா தயாரிப்புகள் அருணாச்சல பிரதேசம் மற்றும் கோவாவில் மட்டும்தான் அதிகளவில் விற்பனையாகின. ஆனால் 2017ல் இது 15 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களாக அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சி உண்மையில் அசாத்தியமானதே.

Most Read Articles
English summary
Honda overtakes Hero MotoCorp in 15 states; becomes No 1 in half of India
Story first published: Saturday, November 28, 2020, 2:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X