ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு நேர் போட்டியாக புதிய பைக்: ஹோண்டாவின் அதிரடி திட்டம்!

ராயல் என்ஃபீல்டு பைக் மாடல்களுக்கு நேர் போட்டியான ரகத்தில் புதிய பைக் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த ஹோண்டா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

 ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு நேர் போட்டியாக புதிய பைக்: ஹோண்டாவின் அதிரடி திட்டம்!

இந்திய இருசக்கர வாகன சந்தையில் ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக, ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஹோண்டா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பட்ஜெட் பைக் மார்க்கெட்டிலும், பிரிமீயம் ரக பைக் மார்க்கெட்டிலும் ஹோண்டா தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

 ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு நேர் போட்டியாக புதிய பைக்: ஹோண்டாவின் அதிரடி திட்டம்!

அதேநேரத்தில், வர்த்தக வளம் மிக்க நடுத்தர வகை பைக் மார்க்கெட்டில் சரியான மாடல்கள் எதுவும் இல்லாத நிலையில் ஹோண்டா உள்ளது. இந்தியாவின் நடுத்தர வகை பைக் மார்க்கெட் என்பது ராயல் என்ஃபீல்டு ஆதிக்கத்தின் கீழ் உள்ளது.

 ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு நேர் போட்டியாக புதிய பைக்: ஹோண்டாவின் அதிரடி திட்டம்!

இந்த சூழலில், நடுத்தர வகை பைக் மார்க்கெட்டில் உள்ள வர்த்தகத்தை வளத்தை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக புதிய மாடலை களமிறக்க ஹோண்டா திட்டமிட்டுள்ளதாக மணிகன்ட்ரோல் தள செய்தி தெரிவிக்கிறது.

 ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு நேர் போட்டியாக புதிய பைக்: ஹோண்டாவின் அதிரடி திட்டம்!

பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் சக்திவாய்ந்த எஞ்சின் தேர்வுடன் இந்த புதிய பைக் மாடல் வர இருக்கும். மேலும், இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பல்வேறு அம்சங்களுடன் இந்தியாவுக்கான மாடலாகவே இது உருவாக்கப்பட்டு இருக்கும் என்றும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

 ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு நேர் போட்டியாக புதிய பைக்: ஹோண்டாவின் அதிரடி திட்டம்!

இதுகுறித்து ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அட்சுஷி ஒகட்டா கூறுகையில்,"இந்தியாவில் பல்வேறு சூப்பர் பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறோம். ஆனால், நடுத்தர வகையில் இந்தியாவுக்கான சிறப்பம்சங்களுடன் கூடிய பைக் மாடல் எங்களிடம் இல்லை. நிச்சயம் இதற்கு விரைவில் பதில் அளிப்போம். புதிய வகை மாடலை களமிறக்குவது குறித்து பரிசீலிப்பது அவசியம்," என்று தெரிவித்துள்ளார்.

 ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு நேர் போட்டியாக புதிய பைக்: ஹோண்டாவின் அதிரடி திட்டம்!

இதனிடையே, ஹோண்டா நிறுவனம் ஷெர்பா அல்லது ஹன்ட்டர் என்ற பெயரில் புதிய ரோட்ஸ்டெர் வகை பைக் மாடலை களமிறக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த பைக் மாடலில் 250சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும் என்றும் தெரிய வருகிறது.

 ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு நேர் போட்டியாக புதிய பைக்: ஹோண்டாவின் அதிரடி திட்டம்!

கடந்த 2017ம் ஆண்டு வாக்கில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு போட்டியாக புதிய மாடலை களமிறக்குவது குறித்த தகவல்களை ஹோண்டா வெளியிட்டது. ஆனால், ராயல் என்ஃபீல்டு அளவுக்கு மிக சவாலாக விலையை நிர்ணயிக்க முடியாத சூழல் இருந்தததால் ஒத்திப்போட்டது.

 ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு நேர் போட்டியாக புதிய பைக்: ஹோண்டாவின் அதிரடி திட்டம்!

இந்த நிலையில், தற்போது ஜாவா, பெனெல்லி இம்பீரியல் 400 உள்ளிட்ட பைக் மாடல்கள் ராயல் என்ஃபீல்டு மார்க்கெட்டை குறிவைத்து களமிறக்கப்பட்டு இருக்கின்றன. இதற்கும் போதிய வரவேற்பு இருப்பதால், இந்த ரகத்தில் புதிய மாடலை களமிறக்குவது உசிதம் என்று ஹோண்டா கருத தொடங்கி இருப்பதாக தெரிகிறது.

Most Read Articles
English summary
Honda is planning to launch new retro style bike model to challenge Royal Enfield motorcycles in India.
Story first published: Tuesday, September 1, 2020, 12:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X