பிஎஸ்6 ஹோண்டா சிடி110 ட்ரீம் பைக்கின் 12 முக்கியமான அம்சங்கள்... வாங்கும் முன் அவற்றை தெரிஞ்சிகோங்க

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் பிஎஸ்6 சிடி 110 ட்ரீம் பைக் மாடலை இந்திய சந்தையில் கடந்த ஜூன் மாதம் ரூ.64,505 என்ற விலையில் அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இந்த பைக்கின் புதிய டெலிவிஷன் கமர்ஷியல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதனை இந்த செய்தியில் பார்ப்போம்.

பிஎஸ்6 ஹோண்டா சிடி110 ட்ரீம் பைக்கின் 12 முக்கியமான அம்சங்கள்... வாங்கும் முன் அவற்றை தெரிஞ்சிகோங்க

மாசு உமிழ்வை குறைவாக வெளிப்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ள இந்த 110சிசி பைக் தான் ஹோண்டா நிறுவனத்தின் மிகவும் மலிவான மோட்டார்சைக்கிளாக தற்சமயம் இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள டிவிசி வீடியோவில் பிஎஸ்6 சிடி110 ட்ரீம் பைக்கின் முக்கியமான 12 சிறப்பம்சங்கள் ஹைலைட்டாக காட்டப்பட்டுள்ளன. அவற்றில் பிஎஸ்6 அப்டேட்டாக இதன் டேங்க் உள்ளிட்டவற்றில் ஹோண்டா நிறுவனம் கொண்டுவந்துள்ள கவர்ச்சிக்கரமான டிசைன் மற்றும் ஸ்டைலிஷ் கிராஃபிக்ஸ் முதன்மையானதாக உள்ளது.

பிஎஸ்6 ஹோண்டா சிடி110 ட்ரீம் பைக்கின் 12 முக்கியமான அம்சங்கள்... வாங்கும் முன் அவற்றை தெரிஞ்சிகோங்க

ஹோண்டாவின் ஸ்மார்ட் பவர் தொழிற்நுட்பம் உராய்வை குறைத்து பைக்கின் செயல்திறன் மற்றும் எரிபொருள் திறனை அதிகரிக்கிறது. ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்துடன் கொண்டுவரப்பட்டுள்ள இதன் 110சிசி பிஎஸ்6 என்ஜின் அதிகப்பட்சமாக 7,500 ஆர்பிஎம்-ல் 9.10 பிஎச்பி பவரையும், 5,500 ஆர்பிஎம்-ல் 9.30 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

பிஎஸ்6 ஹோண்டா சிடி110 ட்ரீம் பைக்கின் 12 முக்கியமான அம்சங்கள்... வாங்கும் முன் அவற்றை தெரிஞ்சிகோங்க

இதன் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 4-ஸ்பீடு யூனிட் வழங்கப்பட்டுள்ளது. நன்கு பெரியதாக 735மிமீ-ல் வடிவமைக்கப்பட்டுள்ள இருக்கை ஆனது டேங்க் உடன் கச்சிதமாக இணைக்கப்பட்டுள்ளதால் ரைடிங் சவுகரியம் சிறப்பானதாக இந்த பைக்கில் இருக்கும் எனவும் இந்த டிவிசி வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிஎஸ்6 ஹோண்டா சிடி110 ட்ரீம் பைக்கின் 12 முக்கியமான அம்சங்கள்... வாங்கும் முன் அவற்றை தெரிஞ்சிகோங்க

க்ரோம் மஃப்லர் பைக்கிற்கு ப்ரீமியம் தோற்றத்தை வழங்குகிறது. இதனுடன் கூடுதல் ப்ரீமியம் தோற்றத்திற்காக பொருத்தப்பட்டுள்ள சில்வர் அலாய் சக்கரங்களில் ட்யூப்லெஸ் டயர்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்புறம் பார்க்கும் கண்ணாடி பைக்கின் உடல் நிறத்தில் காட்சியளிக்கிறது.

பிஎஸ்6 ஹோண்டா சிடி110 ட்ரீம் பைக்கின் 12 முக்கியமான அம்சங்கள்... வாங்கும் முன் அவற்றை தெரிஞ்சிகோங்க

இவற்றுடன் பிரிவில் முதல் மோட்டார்சைக்கிளாக ஹோண்டாவின் நேர்த்தியான ஏசிஜி ஸ்டார்டர் மோட்டாரையும் இந்த பைக் கொண்டுள்ளது. இந்த ஏசிஜி ஸ்டார்டர் மோட்டார் ஆனது கியர் சத்தத்தை தவிர்பது மட்டுமல்லாமல் என்ஜினை எந்தவொரு திடீர் குலுக்கலுமின்றி ஸ்டார்ட் செய்யும். பிரிவில் முதல் மாடலாக என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் ஸ்விட்ச்சையும் இந்த பைக் பெற்றுள்ளது.

பிஎஸ்6 ஹோண்டா சிடி110 ட்ரீம் பைக்கின் 12 முக்கியமான அம்சங்கள்... வாங்கும் முன் அவற்றை தெரிஞ்சிகோங்க

இது போக்குவரத்து சிக்னலில் பைக்கை எளிதாக ஹேண்டிலிங் செய்ய பெரிதும் உதவும். பிஎஸ்6 அப்டேட்டாக இந்த பைக்கில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களுள் ஒன்று டிசி ஹெட்லேம்ப். இதுவும் இந்த வீடியோவில் ஹைலைட்டாக காட்டப்பட்டுள்ளது. இந்த ஹெட்லேம்ப்பின் பீம் குறைவாகவும் அதிகமாகவும் கட்டுப்படுத்தும் வசதியும் இந்த பைக்கில் உள்ளது.

Most Read Articles
English summary
Honda BS6 CD 110 Dream TVC
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X