இதுதான் முதல் முறை! இந்த ஸ்கூட்டரை பாக்காதவங்க எல்லாம் பாத்துக்கோங்க! டீசர் வீடியோ வெளியிட்ட ஹோண்டா!

ஹோண்டா நிறுவனம் அதன் புதிய ஸ்கூட்டர் பற்றிய டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

இதுதான் முதல் முறை... இந்த ஸ்கூட்டரை பாக்காதவங்க எல்லாம் பாத்துக்கோங்க... டீசர் வீடியோ வெளியிட்ட ஹோண்டா!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனம், அதன் புகழ்வாய்ந்த தயாரிப்புகளை பிஎஸ்-6 தரத்திற்கு அப்கிரேட் செய்யும் பணியில் அண்மைக் காலங்களாக ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், ஆக்டிவா, ஆக்டிவா 125 மற்றும் டியோ உள்ளிட்ட மாடல்களை அது பிஎஸ்-6 தரத்தில் அண்மையில் அறிமுகம் செய்தது.

இதுதான் முதல் முறை... இந்த ஸ்கூட்டரை பாக்காதவங்க எல்லாம் பாத்துக்கோங்க... டீசர் வீடியோ வெளியிட்ட ஹோண்டா!

இந்தநிலையில், மேற்கூறிய ஸ்கூட்டர்களுடன் புதியதாக ஓர் மாடலை இணைக்கும் விதமாக கிரேஸியா மாடலையும் அந்நிறுவனம் பிஎஸ்-6 தரத்திற்கு உயர்த்தியுள்ளது. இந்த ஸ்கூட்டர் விரைவில் விற்பனைக்கும் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இதனையொட்டி, ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர்குறித்த டீசர் வீடியோ ஒன்றை முதல் முறையாக அது வெளியிடப்பட்டுள்ளது.

இதுதான் முதல் முறை... இந்த ஸ்கூட்டரை பாக்காதவங்க எல்லாம் பாத்துக்கோங்க... டீசர் வீடியோ வெளியிட்ட ஹோண்டா!

இந்த டீசர் வீடியோவில் கிரேஸியா ஸ்கூட்டரை வெளிப்படுத்துகின்ற வகையிலான காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பிட்டு கூற வேண்டுமானால், முகப்பு மின் விளக்கு, டே லைட், டிஸ்க் பிரேக், பக்கவாட்டு தோற்றம், டிஜிட்டல் மீட்டர், ரியர் பகுதி உள்ளிட்டவை காட்சிக்குள்ளாகியுள்ளன.

இதுதான் முதல் முறை... இந்த ஸ்கூட்டரை பாக்காதவங்க எல்லாம் பாத்துக்கோங்க... டீசர் வீடியோ வெளியிட்ட ஹோண்டா!

இந்த காட்சியின்படி, ஹோண்டா கிரேஸியா வேற லெவல் ஸ்டைலுக்கு அப்கிரேட்டாகியிருப்பது உறுதியாகியுள்ளது. அதாவது, பிஎஸ்-6 தர உயர்வை செய்யும்போதே லேசான ஸ்டைல் மாற்றத்தையும் ஹோண்டா நிறுவனம் கிரேஸியாவிற்கு வழங்கியுள்ளது. இதன்காரணத்தினாலயே மற்ற ஸ்கூட்டர்களைக் காட்டிலும் ஹோண்டா கிரேஸியா 125 அறிமுகமாவதற்கு சற்று கால தாமதமாகியுள்ளது.

இதுதான் முதல் முறை... இந்த ஸ்கூட்டரை பாக்காதவங்க எல்லாம் பாத்துக்கோங்க... டீசர் வீடியோ வெளியிட்ட ஹோண்டா!

ஹோண்டா நிறுவனம் கிரேஸியாவை அதன் புகழ்வாய்ந்த ஆக்டிவா 125 மாடலைத் தழுவி உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. அதாவது, எஞ்ஜின் திறன் மற்றும் பயன்பாட்டு அம்சம் ஆகியவற்றில் இரண்டும் ஒரே மாதிரியானதாக காட்சியளிக்கின்றன. அதேசமயம், இதன் லுக்கைப் பற்றி பேசுமேயானால், இந்த ஸ்கூட்டர் ஸ்போர்ட்டி லுக்கைக் கொண்டிருக்கின்றது.

இதுதான் முதல் முறை... இந்த ஸ்கூட்டரை பாக்காதவங்க எல்லாம் பாத்துக்கோங்க... டீசர் வீடியோ வெளியிட்ட ஹோண்டா!

இந்த தோற்றத்தை வெளிக்காட்டி ஆவலைத் தூண்டுவதற்காகதான் தற்போது டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ மூலம் அதன் தோற்றம் மட்டுமின்றி புதிதாக இடம்பெற்றுள்ள டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரும் காட்சிக்குள்ளாகியுள்ளது.

இதுதான் முதல் முறை... இந்த ஸ்கூட்டரை பாக்காதவங்க எல்லாம் பாத்துக்கோங்க... டீசர் வீடியோ வெளியிட்ட ஹோண்டா!

இதில், நேரத்தைக் காண்பிக்கும் கடிகாரம் மற்றும் ரேஞ்ஜ் இன்டிகேட்டர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி, ரியல் நேர வேகம், ஓடோ மீட்டர், ப்யூவல் அளவு உள்ளிட்டவற்றையும் அது காட்சிப்படுத்தும். இந்த மாற்றமே ஹோண்டா கிரேஸியாவில் செய்யப்பட்ட மிக முக்கியமான சேஞ்ஜஸ்களாக உள்ளன.

இதுதான் முதல் முறை... இந்த ஸ்கூட்டரை பாக்காதவங்க எல்லாம் பாத்துக்கோங்க... டீசர் வீடியோ வெளியிட்ட ஹோண்டா!

இந்த ஸ்கூட்டரில் ஹோண்டா நிறுவனம் 124சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், ப்யூவல் இன்ஜெக்சன் திறன் கொண்ட எஞ்ஜினைப் பயன்படுத்தி வருகின்றது. இதே எஞ்ஜினைதான் ஹோண்டா ஆக்டிவா 125 மாடலிலும் அது பயன்படுத்து வருகின்றது.

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 8.29 பிஎஸ் பவரையும், 10.3 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இந்த எஞ்ஜினில் ஏசிஜி ஸ்டார்டர் அம்சமும் வழங்கப்படுகின்றது. இத்துடன், எஞ்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம் மற்றும் சைடு ஸ்டாண்டு உள்ளிட்ட அம்சங்களும் கூடுதலாக வழங்கப்படுகின்றன.

இதுதான் முதல் முறை... இந்த ஸ்கூட்டரை பாக்காதவங்க எல்லாம் பாத்துக்கோங்க... டீசர் வீடியோ வெளியிட்ட ஹோண்டா!

இதேபோன்று பிரேக்கிங் அம்சத்தைப் பற்றி பார்ப்போமேயானால், ஹோண்டா கிரேஸியா டிஸ்க் பிரேக் தேர்வு சேர்க்கப்பட்டுள்ளது. ஆகையால், டிரம் பிரேக் ஆப்ஷனுடன் டிஸ்க் பிரேக் தேர்விலும் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுதான் முதல் முறை... இந்த ஸ்கூட்டரை பாக்காதவங்க எல்லாம் பாத்துக்கோங்க... டீசர் வீடியோ வெளியிட்ட ஹோண்டா!

இதுமட்டுமின்றி, சிறப்பான சஸ்பென்ஷன் அம்சத்தையும் ஹோண்டா கிரேஸியா 124 பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், கிரேஸியா ஸ்கூட்டரில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் த்ரீ-ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் அப்சார்பர் இடம்பெற்றிருக்கின்றன.

இதுதான் முதல் முறை... இந்த ஸ்கூட்டரை பாக்காதவங்க எல்லாம் பாத்துக்கோங்க... டீசர் வீடியோ வெளியிட்ட ஹோண்டா!

தற்போது பிஎஸ்-6 தரத்தில் உருவாகியிருக்கும் ஹோண்டா கிரேஸியா 125 இந்தியாவில் டிவிஎஸ் என்டார்க் 125, அப்ரில்லா எஸ்ஆர் 125 மற்றும் சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 உள்ளிட்ட ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக இருக்கும். இதற்கேற்ப அந்த ஸ்கூட்டர் ரூ. 70 ஆயிரம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பு: கடைசி 3 படங்கள் பழைய கிரேஸியா மாடலுடையது...

Most Read Articles
English summary
Honda Revealed Grazia 125 BS6 Teaser Video Ahead Of Launch. Read In Tamil.
Story first published: Wednesday, June 17, 2020, 20:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X