ஹோண்டாவின் புதிய நான்கு சிபி1300 பைக்குகள்- விரைவில் உலகளவில் வெளியாகவுள்ளன

புதிய ஹோண்டா சிபி1300 வரிசை மோட்டார்சைக்கிள்கள் பிராண்டின் ஜப்பானிய இணைத்தள பக்கத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹோண்டாவின் புதிய நான்கு சிபி1300 பைக்குகள்- விரைவில் உலகளவில் வெளியாகவுள்ளன

ஹோண்டாவின் இந்த புதிய வரிசையில் சிபி1300 சூப்பர் ஃபோர் (நான்கு), சிபி1300 சூப்பர் ஃபோர் எஸ்பி, சிபி1300 சூப்பர் போல்ட்'ஆர் மற்றும் சிபி1300 சூப்பர் போல்ட்'ஆர் எஸ்பி என மொத்தம் 4 மோட்டார்சைக்கிள் மாடல்கள் அடங்குகின்றன.

ஹோண்டாவின் புதிய நான்கு சிபி1300 பைக்குகள்- விரைவில் உலகளவில் வெளியாகவுள்ளன

இவை அனைத்தும் வருகிற டிசம்பர் 21ஆம் தேதி உலகளவில் வெளியிடப்படவுள்ளன. மேற்கூறிய நான்கு பைக் மாடல்களிலும் ஒரே இன்-லைன் 4-சிலிண்டர் என்ஜின் வழங்கப்படவுள்ளது. இந்த என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகள் குறித்த விபரங்கள் உலகளாவிய அறிமுகத்தின்போதுதான் வெளியிடப்படும்.

ஹோண்டாவின் புதிய நான்கு சிபி1300 பைக்குகள்- விரைவில் உலகளவில் வெளியாகவுள்ளன

இந்த மோட்டார்சைக்கிள்களில் 4-இன்-1 எக்ஸாஸ்ட் சிஸ்டம், மிருதுவான மற்றும் துல்லியமான செயல்பாட்டிற்காக ரைடு-பை-வயர், வெவ்வேறான 3 ரைடிங் மோட்கள் மற்றும் தரமான மற்றும் சவுகரியமான பயணத்திற்கு க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக வழங்கப்பட வாய்ப்புள்ளது.

ஹோண்டாவின் புதிய நான்கு சிபி1300 பைக்குகள்- விரைவில் உலகளவில் வெளியாகவுள்ளன

இந்த புதிய ஹோண்டா பைக் மாடல்கள் தொடர்பான டீசர் படத்தில் ஒற்றை-துண்டு இருக்கை அமைப்பை பார்க்க முடிகிறது. நான்கு மாடல்களில் சிபி1300 சூப்பர் ஃபோர் மற்றும் சிபி1300 சூப்பர் ஃபோர் எஸ்பி பைக்குகள் வட்ட வடிவிலான ஹெட்லேம்ப்களை எந்தவொரு கூடுதல் பேனல்களும் இன்றி கொண்டுள்ளன.

ஹோண்டாவின் புதிய நான்கு சிபி1300 பைக்குகள்- விரைவில் உலகளவில் வெளியாகவுள்ளன

மேலே உள்ள படத்தில் முதல் இரு மாடல்கள் தங்க நிறத்திலும் அடுத்து உள்ள மாடல்கள் இரண்டும் கருப்பு நிறத்திலும் அலாய் சக்கரங்களை கொண்டுள்ளன. ஒவ்வொரு பைக்கும் வெவ்வேறான விதத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் எஸ்பி மாடல்கள் தரமான மற்றும் செயல்திறன்மிக்க சஸ்பென்ஷன் அமைப்புகளை பெற்றுவரும் என எதிர்பார்க்கிறோம்.

ஹோண்டாவின் புதிய நான்கு சிபி1300 பைக்குகள்- விரைவில் உலகளவில் வெளியாகவுள்ளன

ப்ரேக்கிங் பணியினை கவனிக்க நான்கின் முன் சக்கரங்களிலும் இரட்டை ரோடார்கள் உள்ளன. பின் சக்கரத்தில் இவை சிங்கிள் ரோடாரை கொண்டிருக்கலாம். எப்படியிருந்தாலும் இந்த நான்கு ஹோண்டா 1300சிசி பைக்குகளை பற்றிய முழு விபரங்கள் வரும் டிசம்பர் 21ஆம் தேதி தெரிந்துவிடும்.

Most Read Articles

English summary
New Honda CB1300 series teased, will have 4 models, global reveal soon
Story first published: Friday, December 4, 2020, 22:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X