புதிய க்ரூஸர் பைக்கின் பெயரை பதிவு செய்து கொண்டது ஹோண்டா... வருகிற 30ஆம் தேதி அறிமுகம்...

ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் புதிய க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிளை வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த புதிய மோட்டார்சைக்கிள் பிராண்டின் பிக்விங் ப்ரீமியம் மோட்டார்சைக்கிள் லைன்-அப்பில் இணையவுள்ளது.

புதிய க்ரூஸர் பைக்கின் பெயரை பதிவு செய்து கொண்டது ஹோண்டா... வருகிற 30ஆம் தேதி அறிமுகம்...

இந்த நிலையில் இந்த புதிய அறிமுகத்திற்கு முன்னதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் பிராண்ட் புதியதாக எச்'னெஸ் (H'Ness) என்ற பெயரை இந்தியாவில் பதிவு செய்துள்ளதாக அரசாங்க ஆவணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

புதிய க்ரூஸர் பைக்கின் பெயரை பதிவு செய்து கொண்டது ஹோண்டா... வருகிற 30ஆம் தேதி அறிமுகம்...

இந்த புதிய பெயர் அநேகமாக விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய ஹோண்டா க்ரூஸர் பைக்கிற்காக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் சமீபத்தில் வெளியாகி இருந்த இந்த பைக்கின் முதல் டீசர் வீடியோவில் இந்த க்ரூஸர் பைக்கின் பெயர் ஹைனெஸ் (highness) என குறிப்பிடப்பட்டிருந்தது.

புதிய க்ரூஸர் பைக்கின் பெயரை பதிவு செய்து கொண்டது ஹோண்டா... வருகிற 30ஆம் தேதி அறிமுகம்...

இதனால் எச்'னெஸ் என்பது ஏன் ஹைனெஸ் என்ற பெயரை குறிக்க கூடாது என்ற கேள்வி நம்முள் எழுகிறது. ஹோண்டாவின் புதிய தயாரிப்பான இந்த க்ரூஸர் மோட்டார்சைக்கிள் முழுக்க முழுக்க இந்திய வாடிக்கையாளர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதன் முதல் டீசர் வீடியோவில் பைக்கின் தோற்றம் சிறிதளவு கூட காட்டப்படவில்லை. வெறும் க்ரூஸர் பைக்குகளுக்கு உண்டான எக்ஸாஸ்ட் சத்தம் மட்டும்தான் வெளிக்காட்டப்பட்டது. எச்'னெஸ் க்ரூஸர் பைக்கில் 300சிசி-ல் இருந்து 500சிசி-க்கு இடையிலான என்ஜின் பொருத்தப்படலாம்.

புதிய க்ரூஸர் பைக்கின் பெயரை பதிவு செய்து கொண்டது ஹோண்டா... வருகிற 30ஆம் தேதி அறிமுகம்...

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், இதன் பிஎஸ்6 இணக்கமான என்ஜின் எதிர்காலத்தில் இதுபோன்ற அதிக ஆற்றல் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் அதிகமாக இந்தியாவுக்கு வருகை தர வழி வகுக்கும். மற்றப்படி பைக்கை பற்றிய எந்த தகவலையும் ஹோண்டா நிறுவனம் தற்போதைக்கு வெளியிடவில்லை.

புதிய க்ரூஸர் பைக்கின் பெயரை பதிவு செய்து கொண்டது ஹோண்டா... வருகிற 30ஆம் தேதி அறிமுகம்...

ஹோண்டாவின் இந்த புதிய க்ரூஸர் பைக், ராயல் என்பீல்டின் 350சிசி பைக்குகளுக்கு நேரடி போட்டியாக விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. டீசரில் இதன் எக்ஸாஸ்ட் சத்தத்தை வைத்து பார்த்தால், இதில் இணையான-இரட்டை 500சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம்.

புதிய க்ரூஸர் பைக்கின் பெயரை பதிவு செய்து கொண்டது ஹோண்டா... வருகிற 30ஆம் தேதி அறிமுகம்...

இதனால் இந்த க்ரூஸர் பைக், ராயல் என்பீல்டின் 650சிசி மோட்டார்சைக்கிளுக்கு போட்டியாக விளங்கும் என தெரிகிறது. சர்வதேச சந்தையில் ரீபெல் 300, ரீபெல் 500 உள்ளிட்ட எண்ட்ரீ-லெவல் க்ரூஸர் மோட்டார்சைக்கிள்களை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

புதிய க்ரூஸர் பைக்கின் பெயரை பதிவு செய்து கொண்டது ஹோண்டா... வருகிற 30ஆம் தேதி அறிமுகம்...

இதில் ரீபெல் 300-ல் லிக்யூடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் 286சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் 30 பிஎச்பி மற்றும் 27.4 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. அதுவே ரீபெல் 500 பைக்கில் லிக்யூடு-கூல்டு இணையான-இரட்டை 471சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது.

புதிய க்ரூஸர் பைக்கின் பெயரை பதிவு செய்து கொண்டது ஹோண்டா... வருகிற 30ஆம் தேதி அறிமுகம்...

இந்த என்ஜின் 45.9 பிஎச்பி பவரையும், 43.25 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக பைக்கிற்கு வழங்குகிறது. இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இதில் எந்த என்ஜின் புதிய எச்'னெஸ் பைக்கில் பொருத்தப்படும் என்பதுதான் கேள்வி.

புதிய க்ரூஸர் பைக்கின் பெயரை பதிவு செய்து கொண்டது ஹோண்டா... வருகிற 30ஆம் தேதி அறிமுகம்...

இதற்கான பதிலை அறிய நீங்கள் செப்டம்பர் 30ஆம் தேதி வரையில் காத்திருக்க வேண்டும். விற்பனையை அதிகரிக்க புதிய எச்'னெஸ் க்ரூஸர் பைக்கை பிராண்டின் புதிய எண்ட்ரீ-லெவல் ப்ரீமியம் மோட்டார்சைக்கிளாக ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Honda Hness Trademark Cruiser Motorycycle
Story first published: Friday, September 25, 2020, 16:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X