Just In
- 50 min ago
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- 2 hrs ago
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
- 3 hrs ago
முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்!
- 3 hrs ago
சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- News
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று... ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை
- Sports
ரஹானே மட்டும் அந்த முடிவை எடுத்து இருந்தால்.. ஆடிப் போன ஆஸி.. வெளியான ரகசியம்!
- Finance
பட்ஜெட்டுக்கு முன் எதில் முதலீடு செய்யலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..!
- Movies
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பைக்-ஸ்கூட்டர் தோற்றம் கொண்ட எக்ஸ்-ஏடிவி! முன்பைவிட அட்டகாசமான அம்சங்களுடன்... இது ஹோண்டா வெளியீடு!
முன்பைவிட அட்டகாசமான அம்சங்களுடன் ஹோண்டா எக்ஸ்-ஏடிவி புதுப்பிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஹோண்டா நிறுவனம், அதன் 2021 ஹோண்டா எக்ஸ்-ஏடிவி ஸ்கூட்டரை உலகளாவிய அளவில் வெளியீடு செய்துள்ளது. ஸ்கூட்டர் மற்றும் பைக்கின் உருவத்தை ஒத்தவாறு அமைப்பைப் பெற்றிருக்கும் இந்த ஸ்கூட்டர் என்சி750 எக்ஸ் மற்றும் ஃபோர்ஸா 750 ஆகிய ஸ்கூட்டர்களின் உருவத்தையும், திறனையும் ஒத்தவாறு காட்சியளிக்கின்றது.

இந்த ஸ்கூட்டரை சிட்டி அட்வென்சர் எனும் கான்செப்ட் மாடலில் ஹோண்டா அறிமுகம் செய்தபோது உலக இருசக்கர வாகனச் சந்தை இது சாத்தியமற்ற வாகனம் என புரணி பேசியது. ஆனால், ஹோண்டாவோ ஒரு சில வருடங்களுக்குள்ளாகவே இந்த ஸ்கூட்டரை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. தற்போது பல்வேறு புதுப்பித்தலைப் பெற்று மீண்டும் புத்துயிரையும் அது பெற்றிருக்கின்றது.

இந்த ஸ்கூட்டரில் 745 சிசி, பாரல்லல் ட்வின் எஞ்ஜினை ஹோண்டாய பயன்படுத்துகின்றது. இதே திறனுடைய எஞ்ஜினே என்சி750எக்ஸ் மற்றும் ஃபோர்ஸா 750 ஆகிய ஸ்கூட்டர்களிலும் இடம்பெற்றிருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 58.5 பிஎஸ் (இது முந்தைய மாடலைக் காட்டிலும் 4 பிஎஸ் அதிகம்) மற்றும் 69 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது.

புதுப்பித்தலின் அடிப்படையில் இந்த ஸ்கூட்டரின் டிசிடி-யில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அதாவது, எந்தவொரு சமரசத்திற்கும் இடம் வழங்காமல் அதிக வெளியேற்றத்தை வழங்கும் வகையில் இந்த கியரில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் முதல் மூன்று கியர்கள் அதிக வேகத்தை (Acceleration) வழங்கும் வகையிலும், அடுத்தடுத்த நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது கியர்கள் அதிக எரிபொருள் விரயத்தைத் தடுக்கும் வகையிலும் உள்ளது.

இந்த அப்கிரேட் செய்யப்பட்ட எஞ்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் மூலம் எக்ஸ்-ஏடிவி ஸ்கூட்டரில் ரைட்-பை-ஒயர் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது, வாகனத்தை கூடுதல் கட்டுப்பாடுக் கொண்டதாக மாற்ற உதவுகின்றது. குறிப்பாக, அதிக டிராக்சன் கன்ட்ரோல் மற்றும் பன்முக ரைடிங் மோட்களை இது வழங்குகின்றது. மழை, ஸ்போர்ட், கிராவல், வழக்கமானது மற்றும் பயனர் ஏற்றது என பன்முக மோட்கள் உள்ளன.

இதில், பயனர் மோடைக் கொண்டு த்ரோட்டில் ரெஸ்பான்ஸ், ஏபிஎஸ் மற்றும் டிராக்சன் கன்ட்ரோல்களைக் நமக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள முடியும். ஆனால், பிற மோட்கள் அனைத்திலும் ஒரே மாதிரியானதாக இது இருக்கும். இதில், கிராவல் மோட் மட்டும் சற்று அதிக ஆக்ரோஷமான திறனை வெளிப்படுத்தக்கூடிய மோடாக உள்ளது.

இதுதவிர, ஹோண்டா எக்ஸ்-ஏடிவி வாகனத்தின் உடல் அமைப்பிலும் சில மாற்றங்களைச் செய்திருக்கின்றது. அதாவது, டைமண்ட் ஸ்டீல் ட்யூப் ஃப்ரேமை அது பயன்படுத்தியுள்ளது. இது முந்தைய மாடலைக் காட்டிலும் 3 கிலோ எடைக் குறைவானதாக எக்ஸ்-ஏடிவி-யை மாற்றியிருக்கின்றது.

புதிய காஸ்மெட்டிக் மாற்றத்தால் எக்ஸ்-ஏடிவி முன்பைக் காட்டிலும் சற்று ஆக்ரோஷமான தோற்றத்திற்கு மாறியுள்ளது. இந்த தோற்றத்திற்கு ஏற்ப புதிய எல்இடி ஹெட்லைட் மற்றும் டிஆர்எல்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், தொழில்நுட்ப வசதிகளாக ப்ளூடூத் கனெக்டிவிட்டி வசதியுடன் கூடிய டிஎஃப்டி டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இதனை குரல் கட்டளை தேர்விலும் ஹோண்டா வழங்குகின்றது.

இதோடு புதுப்பித்தல் பணி முடிந்துவிட்டது என நினைத்துக் கொள்ளாதீர்கள். கூடுதலாக, 5 படி நிலைகளில் அட்ஜஸ்ட் செய்துகொள்ள கூடிய விண்ட்ஸ்கிரீன், புதிய யுஎஸ்பி சார்ஜிங் சாக்கெட், செல்ஃப் கேன்செல்லிங் இன்டிகேட்டர்கள் மற்றும் ஸ்மார்ட் கீ உள்ளிட்டவை இதில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இத்தகைய பல்வேறு சிறப்பு வசதிகளுடனேயே புதிய எக்ஸ்-ஏடிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் இந்திய வருகைப் பற்றிய தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால், எதிர்காலத்தில் ஹோண்டாவின் 'பிக்விங்' மூலம் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.