Just In
- 1 hr ago
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- 2 hrs ago
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
- 3 hrs ago
முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்!
- 3 hrs ago
சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- News
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று... ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை
- Sports
இனிமே இவரை டீமை விட்டு ஒதுக்க முடியாது.. என்ன செய்யப் போகிறார் கேப்டன் கோலி?
- Finance
பட்ஜெட்டுக்கு முன் எதில் முதலீடு செய்யலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..!
- Movies
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
401சிசி இரட்டை-பைக்குகளை இந்தியாவிற்கு கொண்டுவர தயாராகும் ஹஸ்க்வர்னா!! கேடிஎம் லோகோவுடன் சோதனை ஓட்டம்
கேடிஎம் முத்திரை உடன் ஹஸ்க்வர்னா 401 பைக் புனேக்கு அருகே சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஸ்வீடனை சேர்ந்த மோட்டார்சைக்கிள் பிராண்டான ஹஸ்க்வர்னா இந்தியாவில் அதன் ஸ்வார்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 மூலம் கடந்த ஆண்டில் காலடி தடத்தை பதித்தது.

இவற்றை தொடர்ந்து ஸ்வார்ட்பிளேன் 401 மற்றும் விட்பிளேன் 401 என்ற இரட்டை பைக்குகளை இந்தியாவில் இந்நிறுவனம் அறிமுகம் செய்ய தயாராகி வருவதாக சமீபத்தில் கூறியிருந்தோம். இந்த நிலையில் இந்த இரட்டை பைக்குகளின் மாதிரி ஒன்று புனேவில் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கேடிஎம் மட்டுமின்றி ஹஸ்க்வர்னா பிராண்டையும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தான் நிர்வகித்து வருகிறது. இதனால் புனேவில் பஜாஜின் சாகான் தொழிற்சாலையில்தான் இந்த இரு பிராண்ட்களின் தயாரிப்புகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

தற்போது சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ள ஹஸ்க்வர்னா 401 பைக்கில் கேடிஎம் நிறுவனத்தின் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதனை ரஷ்லேன் செய்திதளம் மூலமாக கிடைத்துள்ள ஸ்பை படங்களை பார்த்தாலே உங்களுக்கே தெரியவரும். ஹஸ்க்வர்னா 250சிசி பைக்குகளில் கேடிஎம்-இன் 249சிசி என்ஜின்கள் தான் பொருத்தப்படுகின்றன.

இந்த வகையில் இந்த சோதனை மாதிரியில் 373.2சிசி, சிங்கிள்-சிலிண்டர் கூல்டு டிஒஎச்சி என்ஜின் ட்யூக்390-ல் இருந்து பெற்று பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 44 பிஎஸ் மற்றும் 37.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது.

ஸ்பை படங்களில் பைக்கின் வலதுபக்கத்தில் ஹஸ்க்வர்னா முத்திரையும், இடதுபக்கத்தில் கேடிஎம் பிராண்டின் முத்திரையும் பொறிக்கப்பட்டுள்ளது. மற்றப்படி பைக் முழுவதும் மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளதால் இந்த சோதனை மாடல் ஹஸ்க்வர்னா ஸ்வார்ட்பிளேன் 401-ஆ அல்லது விட்பிளேன் 401-ஆ என்பதை அறிய முடியவில்லை.

ஹஸ்க்வர்னாவின் ஸ்வார்ட்பிளேன் பொதுவாக நீண்டத்தூர பயணத்திற்கு ஏற்றதாக விளங்குகிறது. அதுவே விட்பிளேன் கேஃப் ரேஸராக பார்க்கப்படுகிறது. ஹஸ்க்வர்னா 401 ட்வின் பைக்குகள் சஸ்பென்ஷன், ட்ரெல்லிஸ் ஃப்ரேம் மற்றும் ப்ரேக்குகள் போன்ற முக்கியமான மெக்கானிக்கல் பாகங்களை கேடிஎம் 390 ட்யூக் பைக்கில் இருந்துதான் பெற்றுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹஸ்க்வர்னா 401 பைக்குகள் இந்தியாவில் ஷோரூம்களை அடுத்த மாதத்தில் இருந்து சென்றடைய துவங்கும் என தெரிகிறது. இவற்றின் விலை கேடிஎம் 390 ட்யூக்கின் ரூ.2.58 லட்சத்தை காட்டிலும் ரூ.20,000 அளவில் குறைவான விலையினை பெறலாம். விற்பனையில் இந்த 400சிசி பைக்குகளுக்கு கேடிஎம் 390 ட்யூக் மட்டுமின்றி, பஜாஜ் டோமினார் 400 மற்றும் பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்குகளும் போட்டியாக விளங்கும்.