மிக மலிவான விலையில் வருகிறது ஹஸ்க்வர்னாவின் புதிய 200சிசி பைக்... புனேக்கு அருகே சோதனை ஓட்டம்...

ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் விலை குறைவான ஸ்வர்ட்பிளேன் 200 பைக் மாடல் புனேக்கு அருகே சோதனை ஓட்டத்தின் போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சோதனை குறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மிக மலிவான விலையில் வருகிறது ஹஸ்க்வர்னாவின் புதிய 200சிசி பைக்... புனேக்கு அருகே சோதனை ஓட்டம்...

ஹஸ்க்வர்னா மோட்டார்சைக்கிள் ப்ராண்ட் சமீபத்தில் தான் ஸ்வர்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 பைக் மாடல்களின் மூலமாக இந்திய சந்தைக்குள் நுழைந்தது. இந்த இரு குவார்டர்-லிட்டர் பைக்குகளின் விலைகள் எக்ஸ்ஷோரூமில் ரூ.1.80 லட்சம் அளவில் உள்ளது.

மிக மலிவான விலையில் வருகிறது ஹஸ்க்வர்னாவின் புதிய 200சிசி பைக்... புனேக்கு அருகே சோதனை ஓட்டம்...

கேடிஎம் 250 ட்யூக் மாடலின் என்ஜினை அப்படியே பெற்று வந்துள்ள இந்த இரு 250சிசி பைக்குகளின் மூலமாக பைக் பிரியர்கள் மத்தியில் மிகுந்த கவனத்தை ஹஸ்க்வர்னா நிறுவனம் ஈர்த்து வருகிறது. இதனால் தற்போது இந்நிறுவனத்தின் கவனம் விலை குறைவான பைக்குகளின் மீது விழுந்துள்ளது.

மிக மலிவான விலையில் வருகிறது ஹஸ்க்வர்னாவின் புதிய 200சிசி பைக்... புனேக்கு அருகே சோதனை ஓட்டம்...

இதன்படி ஸ்வர்க்பிளேன் பைக்கை 200சிசி-ல் கொண்டுவர திட்டமிட்டுள்ள இந்நிறுவனம் அதன் ஒரு பகுதியாக தற்போது அதனை சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தியுள்ளது. கேடிஎம் பைக்குகளை போல் ஹஸ்க்வர்னா ப்ராண்ட்டின் பைக்குகளும் பஜாஜ் நிறுவனத்தின் சாகான் தொழிற்சாலையில் தான் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

மிக மலிவான விலையில் வருகிறது ஹஸ்க்வர்னாவின் புதிய 200சிசி பைக்... புனேக்கு அருகே சோதனை ஓட்டம்...

இதன் காரணமாகவே ஸ்வர்ட்பிளேன் 200 பைக் தொழிற்சாலை அமைந்துள்ள புனேக்கு அருகே சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்ட ஸ்பை படங்கள் 91 வீல்ஸ் என்ற செய்தி தளம் மூலமாக நமக்கு கிடைத்துள்ளன. ஹஸ்க்வர்னாவின் இந்த 200சிசி பைக்கில் கேடிஎம் ட்யூக் 200-ன் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

மிக மலிவான விலையில் வருகிறது ஹஸ்க்வர்னாவின் புதிய 200சிசி பைக்... புனேக்கு அருகே சோதனை ஓட்டம்...

ஃப்யூல்-இன்ஜெக்டட் யூனிட் உடன் உள்ள இந்த 199சிசி, லிக்யூடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்இன் அதிகப்பட்சமாக 25 பிஎச்பி மற்றும் 19 என்எம் டார்க் திறனை கேடிஎம் ட்யூக் 200 பைக்கில் வெளிப்படுத்துகிறது. இதே ஆற்றலை அளவை ஸ்வர்ட்பிளேன் 200 பைக்கிலும் எதிர்பார்க்கலாம்.

மிக மலிவான விலையில் வருகிறது ஹஸ்க்வர்னாவின் புதிய 200சிசி பைக்... புனேக்கு அருகே சோதனை ஓட்டம்...

அதேபோல் இந்த 200சிசி ஹஸ்க்வர்னா பைக்கில் முக்கிய சிறப்பம்சங்களாக முழு-எல்இடி லைட்டிங் சிஸ்டம், தலைக்கீழான ஃபோர்க்குகள், ட்யூல்-சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்படலாம். இவை எல்லாவற்றையும் விட பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலையில் தயாரிப்பு நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தும்.

மிக மலிவான விலையில் வருகிறது ஹஸ்க்வர்னாவின் புதிய 200சிசி பைக்... புனேக்கு அருகே சோதனை ஓட்டம்...

இதனால் பஜாஜ் டோமினார் 250-க்கு இணையாக ரூ.1.50 லட்சம் என்ற அளவில் இந்த ஹஸ்க்வர்னா பைக்கை எதிர்பார்க்கலாம். சமீபத்தில் தான் சந்தையில் அறிமுகமான டோமினார் 250 பைக்கின் விலை ரூ.1.60 லட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Low-cost Husqvarna Svartpilen 200 spied testing: Likely to undercut Bajaj Dominar 250
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X