ஹஸ்க்வர்னா 250 பைக்குகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு!

ஹஸ்க்வர்னா 250 பைக் மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹஸ்க்வர்னா 250 பைக்குகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு!

இந்தியாவின் ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் பஜாஜ் ஆட்டோவின் கூட்டணியில் செயல்படும் கேடிஎம் நிறுவனம் மிக வலுவான சந்தையை வைத்திருக்கிறது. இந்த நிலையில், தனது கீழ் செயல்பட்டு வரும் ஹஸ்க்வர்னா பைக் மாடல்களையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

ஹஸ்க்வர்னா 250 பைக்குகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு!

கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஹஸ்க்வர்னா பிராண்டில் முதலாவதாக விட்பிளேன் 250 மற்றும் ஸவர்ட்பிளேன் 250 பைக் மாடல்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. மிக ஸ்டைலான வடிவமைப்பில் வந்த இந்த பைக்குகள் இந்தியர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன.

ஹஸ்க்வர்னா 250 பைக்குகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு!

ரூ.1.80 லட்சம் என்ற அறிமுகச் சலுகை விலையில் வந்ததால், இந்திய இளைஞர்கள் இந்த பைக் மாடல்களை போட்டி போட்டு புக்கிங் செய்துள்ளனர். அறிமுகம் செய்யப்பட்டு முதல் மாதத்தில் இருந்த 4 நாட்களில் மட்டும் 163 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. இதையடுத்து, கடந்த மார்ச் மாதத்தில் 410 ஹஸ்க்வர்னா 250 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

ஹஸ்க்வர்னா 250 பைக்குகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு!

கடந்த மாதம் 375 கேடிஎம் 250 ட்யூக் பைக்குகள் விற்பனையான நிலையில், இந்த இரண்டு பைக்குகளுக்கும் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது. கேடிஎம் 250 ட்யூக் பைக்கைவிட ரூ.20,000 குறைவான விலையில் களமிறக்கப்பட்டதும் கைகொடுத்துள்ளது.

ஹஸ்க்வர்னா 250 பைக்குகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு!

கேடிஎம் 250 ட்யூக் பைக்கின் அடிப்படையிலேயே இந்த இரண்டு பைக்குளும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், வெவ்வேறு ரசனை கொண்ட வாடிக்கையாளர்களை குறிவைத்து ஸ்டைலில் வேறுபடுகிறது. ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 250 மாடலானது ஸ்க்ராம்ப்ளர் வகை மாடலாகவும், விட்பிளேன் 250 மாடல் கஃபே ரேஸர் வடிவமைப்பையும் பெற்றிருக்கின்றன.

ஹஸ்க்வர்னா 250 பைக்குகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு!

கேடிஎம் 250 ட்யூக் பைக்கில் பயன்படுத்தப்படும் அதே 248.8சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின்தான் இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 30 எச்பி பவரையும், 24 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஹஸ்க்வர்னா 250 பைக்குகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு!

இந்த இரண்டு பைக்குகளிலும் ட்ரெல்லிஸ் ஃப்ரேமில் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்த பைக்கில் எல்இடி லைட்டுகள், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

ஹஸ்க்வர்னா 250 பைக்குகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு!

இரண்டு பைக்குகளிலுமே முன்புறத்தில் 43 மிமீ WP அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் WP மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோன்று, முன்சக்கரத்தில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. 17 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஹஸ்க்வர்னா 250 பைக்குகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு!

கடந்த மாதம் 24ந் தேதி முதல் ஊரடங்கு அமலுக்கு வந்ததால், ஹஸ்க்வர்னா பைக்குகளின் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இல்லையனில், நிச்சயமாக இன்னும் கூடுதல் விற்பனையை பதிவு செய்வதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கும். மேலும், இது கேடிஎம் 250 ட்யூக் பைக்கிற்கே கடும் போட்டியை கொடுக்கும் என தெரிகிறது.

Most Read Articles
English summary
Husqvarna has received a good response from Indian customers and the Swartpilen 250 and Vitpilen 250 bikes have registered a total sale of 410 units in March 2020.
Story first published: Monday, April 27, 2020, 15:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X