உங்கள் வாகனத்தின் கவர்ச்சி மற்றவர்களுக்கு பேராபத்து... எப்படி தெரியுமா..?

வாகனத்தின் கவர்ச்சியை அதிகரிக்கும் விதமாக நாம் பயன்படுத்தும் வாகன அலங்கார பொருட்கள் சக வாகன ஓட்டிகளுக்கு பேராபத்தை விளைவிக்கும் வகையில் அமைகின்றன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

உங்கள் வாகனத்தின் கவர்ச்சி மற்றவர்களுக்கு பேராபத்து... எப்படி தெரியுமா..?

இந்தியாவில் வாகனங்களை மாடிஃபை செய்வது மோட்டார் வாகன சட்டம்படி குற்றமாகும். இருப்பினும், ஒரு சில இளைஞர்கள், சாலையில் தங்களின் வாகனம் செல்லும்போது அநேகரின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக ஒரு வித்தியாசமான மாடிஃபிகேஷன்களை மேற்கொள்கின்றனர்.

அந்தவகையில் செய்யப்படும் ஒவ்வொரு மாடிஃபிகேஷன்களும் சக வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக அமைவது மட்டுமின்றி அச்சுறுத்தலாகவும் அமைகின்றன.

உங்கள் வாகனத்தின் கவர்ச்சி மற்றவர்களுக்கு பேராபத்து... எப்படி தெரியுமா..?

இதனாலயே, இந்திய மோட்டார் வாகன சட்டம் இதுபோன்ற மாடிஃபிகேஷன்களை ஆதரளிப்பதில்லை. இருப்பினும், இந்தியாவில் வாகனங்களுக்கு இணையாக ஆஃப்டர் மார்க்கெட் உதிரிபாகங்களுக்கான விற்பனையும் ஏகபோகமாக இருக்கின்றது.

பலர் தாங்கள் வாகனங்களில் நிருவப்படும் உதிரிபாகங்கள் என்ன மாதிரியான பின்விளைவை ஏற்படுத்தம், பயனளிக்கும் என்ற தகவல்களைகூட அறிந்திருப்பதில்லை.

உங்கள் வாகனத்தின் கவர்ச்சி மற்றவர்களுக்கு பேராபத்து... எப்படி தெரியுமா..?

அதற்கான நேரத்தையும் அவர்கள் ஒதுக்குவதில்லை. அவர்கள் சாலையில் கெத்து காட்ட வேண்டும் என்பதை மட்டுமே இலக்காக வைத்து, இந்த செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். அந்தவகையில், மிகவும் அபாயகரமான மற்றும் சுவாரஷ்யமான முறையில் செய்யப்பட்ட ஒரு சில மாடிஃபிகேஷன்களையும், போலீஸார் மாடிஃபிகேஷன்களுக்கு எடுத்த அதிரடி நடவடிக்கையும் கீழே காணலாம்.

உங்கள் வாகனத்தின் கவர்ச்சி மற்றவர்களுக்கு பேராபத்து... எப்படி தெரியுமா..?

அதிக நீளம் கொண்ட டயர் மற்றும் ஹேண்டில் பார்:

மிகப்பெரிய கனர வாகனங்களில் காணப்படுவதைப் போன்ற டயர்கள் சில இருசக்கர வாகனங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இவை சாலையில் மிக குறுகிய வலைவுகளில் பைக்கை திருப்புவதில் அதிகப்படியான சிரமத்தை ஏற்படுத்துகின்றது. அதுமட்டுமின்றி, பைக்கின் மைலேஜ் மற்றும் இழுவை திறனை அது பாதிக்கின்றது. இதேபோன்று, பைக்கின் ரம்மியமான தோற்றத்திற்கு பயன்படுத்தப்படும் ஹேண்டில் பாரும் ரைடருக்கு ஒரு சில தலைவலியை ஏற்படுத்துகின்றது.

உங்கள் வாகனத்தின் கவர்ச்சி மற்றவர்களுக்கு பேராபத்து... எப்படி தெரியுமா..?

குறிப்பாக நீண்டா அகலமானதாக நிறுவப்படும் ஹேண்டில்பார்கள் கை வலியை ஏற்படுத்துவதுடன், மிக எளிதில் கைகளுக்கு சோர்வான உணர்வை ஏற்படுத்த வழி வகுக்கின்றன. இதுமட்டுமின்றி, உயரம் குறைந்த ஹேண்டில் பார்களால் முதுகு வலி போன்ற பிரச்னைகளும் உருவாகின்றது.

உங்கள் வாகனத்தின் கவர்ச்சி மற்றவர்களுக்கு பேராபத்து... எப்படி தெரியுமா..?

பைக்கின் உண்மையான தோற்றத்தை மாற்றுதல்:

பைக் மட்டுமின்றி ஒரு சில நேரங்களில் கார்களும் அதன் உண்மையான தோற்றத்தில் இருந்து முற்றிலுமாக மாற்றம் செய்யப்படுகின்றன. இதனால், அந்த வாகனத்தின் உண்மைத் தன்மை அழிக்கப்படுவதுடன், அதனை இனம் காண்பதில் சிக்கல் ஏற்படுகின்றது. ஆகையால், மாற்றியமைக்கப்பட்ட அந்த வாகனம் முரண்பாடுகளில் ஈடுபடும் பட்சத்தில் அதை ஆய்வுகண்டு அறிவதில் பல்வேறு சிக்கல் ஏற்படுகின்றது. இதுவே, மாடிஃபிகேஷனை முற்றிலுமாக ஒடுக்குவதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

உங்கள் வாகனத்தின் கவர்ச்சி மற்றவர்களுக்கு பேராபத்து... எப்படி தெரியுமா..?

இதுமட்டுமின்றி, சாலையில் செல்லும்போது பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்துவதற்கான முக்கிய காரணியாக இருக்கின்றது. அண்மையில்கூட இதுபோன்ற அளவுக்கதிமாக மாடிஃபை செய்யப்பட்ட விலையுயர்ந்த கார்கள் நடுரோட்டில் தீ விபத்தைச் சந்தித்ததை நமது டிரைவ்ஸ்பார்க்தமிழ் குழு வெளியிட்டிருந்தது. இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது முதல் முறையல்ல.

உங்கள் வாகனத்தின் கவர்ச்சி மற்றவர்களுக்கு பேராபத்து... எப்படி தெரியுமா..?

பிரஷ்ஷர் ஹாரன்:

அதிக ஒலியை ஏற்படுத்தும் பிரஷ்ஷர் ஹாரன்கள் சாலையில் சக வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக அமைவதில் முதல் இடத்தில் இருக்கின்றது. குறிப்பாக, இந்த வகை ஹாரன்களைப் பயன்படுத்துவதனால் மற்ற வாகன ஓட்டிகள் அச்சுறுத்தலாவதுடன், விபத்தையும் சந்திக்கின்றனர்.

ஆகையால், அரசு நிர்ணயித்த அளவைக் காட்டிலும் அதிக ஒலியை எழுப்பும் பிரஷ்ஷர் ஹாரன்களின் பயன்பாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

உங்கள் வாகனத்தின் கவர்ச்சி மற்றவர்களுக்கு பேராபத்து... எப்படி தெரியுமா..?

அதிக வெளிச்சத்தை வழங்கும் எல்இடி மின் விளக்குகள்:

அதிகளவில் விபத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கினை இந்த எல்இடி மின் விளக்குகள் வகிக்கின்றன. இவை சாலையில் செல்லும் சக வாகன ஓட்டிகளின் பார்வை திறனைக் குறைப்பதுடன், எதிரில் இருக்கும் பாதையை அதிக வெளிச்சத்தால் மறைக்கின்றன. இதனால், எதிரில் வரும் வாகனம் மற்றும் சாலையை அறியாமல் விபத்து ஏற்படுகின்றது.

உங்கள் வாகனத்தின் கவர்ச்சி மற்றவர்களுக்கு பேராபத்து... எப்படி தெரியுமா..?

இதன்காரணமாவே, இதுபோன்று மின் விளக்குகளைப் பொருத்திய இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மீது போலீஸார் அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். குறிப்பாக, இதுபோன்ற விதிமுறை மீறி பொருத்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளரை வைத்தே, அந்த பிளாஷர் மின் விளக்குகள் அடித்து நொருக்கப்பட்டன.

உங்கள் வாகனத்தின் கவர்ச்சி மற்றவர்களுக்கு பேராபத்து... எப்படி தெரியுமா..?

ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள்:

அதிக ஒலியை ஏற்படுத்தும் எல்இடி மின் விளக்கு மற்றும் ஃபிளாஷர் மின் விளக்குகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையைப் போலவே ஆஃப்டர் மார்க்கெட் எக்சாஸ்ட் சிஸ்டத்திற்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. குறிப்பாக இதுபோன்ற விதிமுறை மீறப்பட்ட இருசக்கர வாகனங்களின் எக்சாஸ்டை ரோட் ரோலர் வைத்து சம்பவ இடங்களிலேயே அழிக்கப்பட்டன.

உங்கள் வாகனத்தின் கவர்ச்சி மற்றவர்களுக்கு பேராபத்து... எப்படி தெரியுமா..?

இந்த சட்டத்திற்கு புறம்பான ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் அதிக ஒலியை உருவாக்கி, காற்று மாசை ஏற்படுத்துகின்றன. அது மட்டுமின்றி, இதிலிருந்து உருவாகும் அதிக ஒலி சக வாகன ஓட்டிகளுக்கு கடும் தலைவலியை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது.

ஆகவே, போலீஸார் அத்தகைய வாகனங்களை இனம் கண்டால் சம்பவ இடத்திலேயே அதிரடி நடவடிக்கைகளை எடுக்கின்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Illegal Accessories Made Your Vehicle Into Too Harm. Read In Tamil.
Story first published: Monday, January 27, 2020, 14:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X