Just In
- 2 hrs ago ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- 3 hrs ago ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- 5 hrs ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 10 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
Don't Miss!
- Movies தளபதி 69 படத்தை இயக்குகிறேனா?.. வெற்றிமாறனே சொன்ன பதிலை பாருங்க.. வந்தது முற்றுப்புள்ளி
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- News பாமக டி-ஷர்ட் போட்ட 4 பேர்.. அம்பேத்கர் சிலை குண்டு வீச்சு விவகாரத்தில் வன்னி அரசு பரபரப்பு ட்வீட்!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இவ்வளவு ஈசியா EPF பாஸ்புக் டவுன்லோட் செய்ய முடியுமா.. சிம்பிள் ஸ்டெப்ஸ்!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே அணியில் குளறுபடி.. தீபக் சாஹரை நம்பாத ருதுராஜ்.. தோல்விக்கு காரணமே இதுதான்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்தியாவில் அதிக மைலேஜை தரும் பைக்குகள் எது தெரியுமா..? இதோ டாப் 10 பைக்குகளின் புதிய லிஸ்ட்!
அதிக மைலேஜ் தரும் பைக்குகள் பட்டியலை புள்ளி விவரங்களுடன் பார்க்கலாம்.
அதிகம் மைலேஜ் தரும் வாகனங்களுக்கே இந்தியாவில் வரவேற்பும் அதிகம். ஏனெனில் இந்தியர்கள் பெரும்பாலானோர் அதிகம் மைலேஜை தரும் வாகனங்களை அதிகளவில் விரும்புகின்றனர். குறிப்பாக, மலிவு விலை மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு ஆகிய அம்சங்களைக் கொண்ட வாகனங்களுக்கே இந்திய மக்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
அந்தவகையில் எந்தெந்த வாகனம் எந்தளவு மைலேஜ் தருகின்றது என்கிற தகவலையே இந்த பதிவில் நாம் காணவிருக்கின்றோம். பொதுவாக அதிக மைலேஜே தேடும் இருசக்கர வாகன விரும்பிகளின் முதல் தேர்வாக பஜாஜ் நிறுவனத்தின் சிடி110 பைக் இருக்கின்றது.
இந்த பைக் அராய் வெளியிட்ட தகவலின்படி, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 104 கிமீ வரை பயணிக்கும் என்பது தெரியவந்துள்ளது. இதன் விலையும் மிக குறைவாகும். அதாவது, இந்த பைக் இந்தியாவில் ரூ. 50 ஆயிரம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். எனவேதான் தினசரி பயணத்தை விரும்பும் இளைஞர்களின் மிகவும் விருப்பமான பைக்காக சிடி வரிசை பைக்குகள் இருக்கின்றன.
இதைத்தொடர்ந்து, அடுத்த இடத்தில் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பைக் இருக்கின்றது. இது பெட்ரோல் லிட்டர் ஒன்றிற்கு 85 கிமீ வரை செல்லும். இதன் விலை சுமார் ரூ. 62 ஆகும். இதற்கு அடுத்தபடியான இடத்தில் பஜாஜ் நிறுவனத்தின் மற்றுமொரு தயாரிப்பான பிளாட்டினா எச்கியர் பைக் இருக்கின்றது. 110 சிசி திறனுடைய இந்த பைக் அதிகபட்சமாக லிட்டர் ஒன்றிற்கு 84 கிமீ தூரம் வரை பயணிக்கும்.
டிவிஎஸ் ஸ்டார் மற்றும் பஜாஜ் பிளாட்டினா 110 எச் கியர் பைக்கிற்கும் பெரியளவில் வித்தியாசம் இல்லை. இவையிரண்டும் விலையிலும், மைலேஜிலும் கணிசமான வித்தியாசங்களை மட்டுமே கொண்டிருக்கின்றது. எனவேதான், இவையிரண்டிற்கும் இடையிலான போட்டியும் சற்று கூடுதலாகக் காட்சியளிக்கின்றது.
இந்த பைக்குகளுக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பைக்கும், ஐந்தாவது இடத்தை அதே ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கும் பிடித்திருக்கின்றன. இதில், சூப்பர் ஸ்பிளெண்டர் 83 கிமீ மைலேஜையும், ஸ்பிளெண்டர் பிளஸ் பைக் 80 கிமீ மைலேஜையும் வழங்குகின்றன.
ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பைக்கின் விலை ரூ. 71,650 ஆகும். மேலும், ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கின் விலை ரூ. 60,310 ஆகும். இதேபோன்று பிற நிறுவனங்களின் பைக்குகளும் அடுத்தடுத்த இடைத்தைப் பிடித்திருக்கின்றன. அதுகுறித்த தகவலைப் பட்டியலாக கீழே காணலாம்.
அதிகம் மைலேஜ் தரும் பட்டியல்: விலை மற்றும் மைலேஜ் வாரியாக...
எண். | மாடல் | மைலேஜ் விபரம் (ARAI Tested) | விலை |
1 | பஜாஜ் சிடி 110 | 104 kmpl | ₹48,704 |
2 | டிவிஎஸ் ஸ்டார் சிட்டி | 85 kmpl | ₹62,784 |
3 | பஜாஜ் பிளாட்டினா 110 எச் கியர் | 84 kmpl | ₹62,899 |
4 | ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்ட்ர் | 83 kmpl | ₹71,650 |
5 | ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் | 80 kmpl | ₹60,310 |
6 | ஹோண்டா சிடி110 ட்ரீம் | 74 kmpl | ₹65,505 |
7 | டிவிஎஸ் ரேடியான் | 69 kmpl | ₹59,742 |
8 | ஹோண்டா ஷைன் | 65 kmpl | ₹68,812 |
9 | ஹீரோ ஸ்பிளெண்டர் ஐ ஸ்மார்ட் | 61 kmpl | ₹65,672 |
10 | ஹீரோ பேஷன் ப்ரோ 110 | 60 kmpl | ₹65,750 |