விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்த ஒரே பைக் நிறுவனம் இதுதான்... எதுன்னு தெரிஞ்சா ஆச்சரியம் உறுதி!

விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்த ஒரே பைக் நிறுவனம் இதுதான். அது எந்த பைக் நிறுவனம் என தெரிந்தால் கண்டிப்பா ஆச்சரியப்படுவீங்க.

விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்த ஒரே பைக் நிறுவனம் இதுதான்... எதுன்னு தெரிஞ்சா ஆச்சரியம் உறுதி!

2020ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் அதிக இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்த டாப்-10 நிறுவனங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், வழக்கம் போல ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் 4,88,069 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்த ஒரே பைக் நிறுவனம் இதுதான்... எதுன்னு தெரிஞ்சா ஆச்சரியம் உறுதி!

ஆனால் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 5,69,962 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்தது. அதாவது கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை 81,893 குறைந்துள்ளது. இது 14.37 சதவீத வீழ்ச்சியாகும்.

விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்த ஒரே பைக் நிறுவனம் இதுதான்... எதுன்னு தெரிஞ்சா ஆச்சரியம் உறுதி!

இந்த பட்டியலில் ஹோண்டா நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. ஹோண்டா நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் 3,74,114 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 4,00,695 டூவீலர்களை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை 26,581 குறைந்துள்ளது. இது 6.63 சதவீத வீழ்ச்சியாகும்.

விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்த ஒரே பைக் நிறுவனம் இதுதான்... எதுன்னு தெரிஞ்சா ஆச்சரியம் உறுதி!

இந்த பட்டியலில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. டிவிஎஸ் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் 1,63,007 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் டிவிஎஸ் நிறுவனம் 2,28,654 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்தது. டிவிஎஸ் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை 65,647 குறைந்துள்ளது. இது 28.71 சதவீத வீழ்ச்சியாகும்.

விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்த ஒரே பைக் நிறுவனம் இதுதான்... எதுன்னு தெரிஞ்சா ஆச்சரியம் உறுதி!

இந்த பட்டியலில் 4வது இடத்தை பஜாஜ் பிடித்துள்ளது. பஜாஜ் நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 2,03,358 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 1,57,796 டூவீலர்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. அதாவது அந்த நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை 45,562 குறைந்துள்ளது. இது 22.40 சதவீத வீழ்ச்சியாகும்.

விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்த ஒரே பைக் நிறுவனம் இதுதான்... எதுன்னு தெரிஞ்சா ஆச்சரியம் உறுதி!

இந்த பட்டியலில் 5வது இடத்தை ராயல் என்பீல்டு பிடித்துள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 70,872 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த ஜனவரி மாதம் 61,292 ஆக குறைந்துள்ளது. 9,580 டூவீலர்கள் குறைவாக விற்பனையாகியுள்ளன. இது 13.52 சதவீத வீழ்ச்சியாகும்.

விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்த ஒரே பைக் நிறுவனம் இதுதான்... எதுன்னு தெரிஞ்சா ஆச்சரியம் உறுதி!

6வது இடத்தை சுஸுகி பிடித்துள்ளது. சுஸுகி நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் 56,012 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 63,209 டூவீலர்களை விற்பனை செய்திருந்தது. சுஸுகி நிறுவனத்தை பொறுத்தவரை 7,197 டூவீலர்கள் குறைவாக விற்பனையாகியுள்ளன. இது 11.39 சதவீத வீழ்ச்சியாகும்.

விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்த ஒரே பைக் நிறுவனம் இதுதான்... எதுன்னு தெரிஞ்சா ஆச்சரியம் உறுதி!

இந்த பட்டியலில் 7வது இடத்தை யமஹா பிடித்துள்ளது. யமஹா நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் விற்பனை செய்த டூவீலர்களின் எண்ணிக்கை 55,355. இது கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 35,913 ஆக குறைந்துள்ளது. அதாவது 19,442 டூவீலர்கள் குறைவாக விற்பனையாகியுள்ளன. இது 35.12 சதவீத வீழ்ச்சியாகும்.

விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்த ஒரே பைக் நிறுவனம் இதுதான்... எதுன்னு தெரிஞ்சா ஆச்சரியம் உறுதி!

இந்த பட்டியலில் 8வது இடத்தை பியாஜியோ பிடித்துள்ளது. பியாஜியோ நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் 4,358 டூவீலர்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் பியாஜியோ நிறுவனம் விற்பனை செய்திருந்த டூவீலர்களின் எண்ணிக்கை 4,655. அதாவது 297 டூவீலர்கள் குறைவாக விற்பனையாகியுள்ளன. இது 6.38 சதவீத வீழ்ச்சியாகும்.

விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்த ஒரே பைக் நிறுவனம் இதுதான்... எதுன்னு தெரிஞ்சா ஆச்சரியம் உறுதி!

9வது இடத்தை ஹார்லி டேவிட்சன் நிறுவனம் பிடித்துள்ளது. ஹார்லி டேவிட்சன் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் 210 டூவீலர்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஏனெனில் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அந்நிறுவனம் வெறும் 107 டூவீலர்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. அதாவது 103 டூவீலர்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளன. இதன் மூலம் 96.26 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து ஹார்லி டேவிட்சன் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்த ஒரே பைக் நிறுவனம் இதுதான்... எதுன்னு தெரிஞ்சா ஆச்சரியம் உறுதி!

இந்த பட்டியலில் 10வது மற்றும் கடைசி இடத்தை கவாஸாகி பிடித்துள்ளது. கவாஸாகி நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் 151 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 348 இரு சக்கர வாகனங்களை கவாஸாகி விற்பனை செய்திருந்தது. அதாவது 197 டூவீலர்கள் குறைவாக விற்பனையாகியுள்ளன. இது 56.61 சதவீத வீழ்ச்சியாகும்.

விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்த ஒரே பைக் நிறுவனம் இதுதான்... எதுன்னு தெரிஞ்சா ஆச்சரியம் உறுதி!

பெரும்பாலான நிறுவனங்கள் வீழ்ச்சியைதான் பதிவு செய்துள்ளன. இந்தியாவில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் பிஎஸ்-6 விதிகள் அமலுக்கு வருகின்றன. எனவே பிஎஸ்-6 விதிகளுக்கு இணக்கமான மாடல்களை இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் தற்போது வரிசையாக விற்பனைக்கு அறிமுகம் செய்து வருவதால், மார்க்கெட் பிஸியாகவே உள்ளது.

விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்த ஒரே பைக் நிறுவனம் இதுதான்... எதுன்னு தெரிஞ்சா ஆச்சரியம் உறுதி!

ஆனால் இரு சக்கர வாகனங்களை வாங்கும் சாத்தியமுள்ள வாடிக்கையாளர்கள் பிஎஸ்-6 மாடல்களுக்காக காத்து கொண்டுள்ளனர். ஏனெனில் தற்போதுதான் பிஎஸ்-6 மாடல்கள் வரிசையாக வர தொடங்கியுள்ளன. இன்னும் பல்வேறு மாடல்களின் பிஎஸ்-6 வெர்ஷன்கள் வர வேண்டியுள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் வீழ்ச்சியை சந்தித்திருக்கலாம்.

Most Read Articles
English summary
India Two Wheeler Sales Report January 2020. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X