இந்தியா வரும் 2 புதிய இந்தியன் பைக் மாடல்கள்... இணையதளத்தில் பட்டியலிடப்பட்டன!

இந்தியாவில் புதிய இந்தியன் எஃப்டிஆர் கார்பன் மற்றும் எஃப்டிஆர் ராலி பைக் மாடல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது உறுதியாகி இருக்கிறது. இந்தியன் நிறுவனத்தின் இந்திய இணையதளத்தில் இந்த இரண்டு புதிய மாடல்களும் இன்று பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்தியா வரும் இரண்டு புதிய இந்தியன் பைக் மாடல்கள்!

அமெரிக்காவை சேர்ந்த இந்தியன் பைக் தயாரிப்பு நிறுவனம் விலை உயர்ந்த க்ரூஸர் வகை மோட்டார்சைக்கிள்களை தயாரிப்பில் உலக அளவில் பிரபலமாக உள்ளது. இந்த நிறுவனத்தின் க்ரூஸர் மாடல்கள் தவிர்த்து, ஃப்ளாட் டிராக் ரேஸ் வகை பைக்குகள் தயாரிப்பிலும் மிகவும் பாரம்பரியம் மிக்கது.

இந்தியா வரும் இரண்டு புதிய இந்தியன் பைக் மாடல்கள்!

களில் ஃப்ளாட் டிராக் ரேஸ்களுக்காக உருவாக்கப்பட்ட பைக்குகளின் அடிப்படையில், சாதாரண சாலைகளில் பயன்படுத்தும் அம்சங்களுடன் கூடிய எஃப்டிஆர் பைக் மாடல்களை இந்தியன் நிறுவனம் விற்பனை செய்கிறது. இதில், ஆஃப்ரோடு பயன்பாட்டு அம்சங்களுடன் சில மாடல்கள் உள்ளன.

இந்தியா வரும் இரண்டு புதிய இந்தியன் பைக் மாடல்கள்!

இந்தியாவில் தற்போது இந்தியன் எஃப்டிஆர் குடும்ப வரிசையில் எஃப்டிஆர் 1200 எஸ் மற்றும் 1200 ரேஸ் ரெப்லிக்கா ஆகிய மாடல்கள் விற்பனையில் உள்ளன. இந்த நிலையில், எஃப்டிஆர் குடும்ப வரிசையில் இரண்டு புதிய மாடல்களை கடந்த 1ந் தேதி சர்வதேச அளவில் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் வெளியிட்டது.

இந்தியா வரும் இரண்டு புதிய இந்தியன் பைக் மாடல்கள்!

ஏற்கனவே விற்பனையில் உள்ள இந்தியன் எஃப்டிஆர் 1200 பைக் மாடல்கள் குடும்பத்தில் மிகவும் விலை உயர்ந்த மாடல்களாக இவை வர இருக்கின்றன இந்த நிலையில், உலகளாவிய வெளியீடு முடிந்து அடுத்த சில நாட்களில் இந்தியன் நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கான இணையதளப் பக்கத்திலும் இந்த இரண்டு பைக் மாடல்களும் இன்று பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்தியா வரும் இரண்டு புதிய இந்தியன் பைக் மாடல்கள்!

இதில், எஃப்டிஆர் கார்பன் மாடலானது பெயருக்கு ஏற்றாற்போல் ஏராளமான கார்பன் ஃபைபர் பாகங்களுடன் தனது தனித்துவத்தை காட்டுகிறது. எஃப்டிஆர் கார்பன் மாடலில் ஹெட்லைட் க்ளஸ்ட்டர், ஃபென்டர்கள், பெட்ரோல் டேங்க், ஏர்பாக்ஸ் கவர்கள், பின் இருக்கை கவுல் அமைப்பு ஆகியவை கார்பன் ஃபைபர் பாகங்களால் ஆனது.

இந்தியா வரும் இரண்டு புதிய இந்தியன் பைக் மாடல்கள்!

கார்பன் மாடலில் 4.3 அங்குல எல்இடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. புளூடூத், யுஎஸ்பி போர்ட் கனெக்ட்டிவிட்டி, ஃபாஸ்ட் சார்ஜர் உள்ளஇட்டவை இடம்பெற்றுள்ளன. இதில், புதிய டைட்டானியம் அக்ரபோவிக் சைலென்சர்கள் முக்கிய அம்சமாக இருக்கின்றன. பெட்ரோல் டேங்கில் எஃப்டிஆர் கார்பன் என்ற பிராண்டு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா வரும் இரண்டு புதிய இந்தியன் பைக் மாடல்கள்!

அடுத்து எஃப்டிஆர் ராலி மாடலானது ஸ்க்ராம்ப்ளர் வகை மாடலாக சில சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் ஹேண்டில்பார் அமைப்பு 50 மிமீ உயர்த்தப்பட்ட அமைப்பாக இருக்கிறது.

இந்தியா வரும் இரண்டு புதிய இந்தியன் பைக் மாடல்கள்!

மேலும், சிறிய விண்ட்ஸ்க்ரீன், ஸ்போக்ஸ் சக்கரங்கள், பைரெல்லி ஸ்கார்ப்பியான் டயர்கள், புதிய டைட்டானியம் ஸ்மோக் வண்ணக் கலவை, பழுப்பு வண்ண இருக்கை, இந்தியன் பிராண்டு சின்னம் ஆகியவை இதன் முத்திரை பதிக்கும் சிறப்பம்சங்களாக உள்ளன. செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. இரண்டு மாடல்களிலுமே க்ரூஸ் கன்ட்ரோல் வசதி உள்ளது. கார்பன் மாடலில் டிராக்ஷன் கன்ட்ரோல், வீலி மிட்டிகேஷன் கன்ட்ரோல், மூன்று டிரைவிங் மோடுகள் உள்ளன

இந்தியா வரும் இரண்டு புதிய இந்தியன் பைக் மாடல்கள்!

இந்த இரண்டு பைக் மாடல்களிலுமே வி ட்வின் சிலிண்டர் அமைப்புடைய 1,203 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. கார்பன் மாடலில் உள்ள இந்த எஞ்சின் அதிகபட்சமாக 125 பிஎச்பி பவரையும், 120 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ராலி மாடலில் உள்ள இதே எஞ்சின் 121 பிஎச்பி பவரையும், 120 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியும் உள்ளது.

இந்தியா வரும் இரண்டு புதிய இந்தியன் பைக் மாடல்கள்!

இந்தியன் எஃப்டிஆர் ராலி மாடலுக்கு ரூ.17 லட்சமும், கார்பன் மாடலுக்கு ரூ.18 லட்சமும் விலை நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆ்ண்டு இறுதியில் இந்த பைக் மாடல்கள் இந்தியாவில் கொண்டு வரப்பட வாய்ப்புகள் உள்ளன.

Most Read Articles
English summary
American bike manufacturer, Indian has listed FTR Carbon and FTR Rally bikes on the brand's India website today.
Story first published: Tuesday, May 5, 2020, 18:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X