இன்று வெளியாகிறது இந்தியன் எஃப்டிஆர் கார்பன் பைக்... புதிய டீசர் வீடியோ வெளியீடு..

அமெரிக்காவில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டு வரும் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் புதிய எஃப்டிஆர் கார்பன் பைக்கின் டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த புதிய இந்தியன் பைக்கை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

இன்று வெளியாகிறது இந்தியன் எஃப்டிஆர் கார்பன் பைக்... புதிய டீசர் வீடியோ வெளியீடு..

இந்நிறுவனம் புதிய எஃப்டிஆர் பைக்கை நாளை (மே1) உலகளவில் அறிமுகம் செய்யவுள்ளது. இதன் இந்த டீசர் வீடியோவில் இந்தியன் மோட்டார்சைக்கிளின் விலையுயர்ந்த தோற்றம் மற்றும் ட்ராக் ரேஸிங்கில் அவற்றின் ஈடுப்பாட்டை தான் ஹைலைட்டாக சுட்டி காட்டப்பட்டுள்ளது.

இன்று வெளியாகிறது இந்தியன் எஃப்டிஆர் கார்பன் பைக்... புதிய டீசர் வீடியோ வெளியீடு..

ஏனெனில் எஃப்டிஆர் 750 பைக்கானது சிறந்த ட்ராக் ரேஸர் பைக்காக பல விருதுகளை இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்திற்கு பெற்று கொடுத்துள்ளது. இதனை குறிக்கும் விதத்தில், ‘மூன்று முறை சாம்பியன் ஷிப் பட்டம் வென்ற எஃப்டிஆர்750 மாடலை நீங்கள் சொந்தமாக்கலாம்' என இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

MOST READ: ரிஷி கபூர் மரணம்... டெல்லியில் இருக்கும் மகள் லாக்டவுனுக்கு மத்தியில் எப்படி வரப்போகிறார் தெரியுமா?

இதை தவிர்த்து இந்த டீசர் வீடியோ விரைவில் அறிமுகமாகவுள்ள இந்தியன் எஃப்டிஆர் கார்பன் பைக்கை பற்றி வேறெந்த தகவலையும் வெளிப்படுத்தவில்லை. இருப்பினும் பைக் கார்பன்-ஃபைபர் எரிபொருள் டேங்க்கை பெற்றிருப்பதை இந்த வீடியோவின் மூலமாக அறிய முடிகிறது.

MOST READ: 480 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டிய இளைஞர்... வீட்டிற்கு வந்ததும் நடந்த ஷாக் சம்பவம்... என்னனு தெரியுமா

இன்று வெளியாகிறது இந்தியன் எஃப்டிஆர் கார்பன் பைக்... புதிய டீசர் வீடியோ வெளியீடு..

பெட்ரோல் டேங்க் மட்டுமல்லாமல் பைக்கின் பெயருக்கு ஏற்றாற்போல் பைக்கின் ஃபெண்டர்கள், பாடி பேனல்களுடன் சக்கரங்களும் கார்பனில் வழங்கப்பட்டிருக்கலாம். மேலும் பைக்கின் பெயர் எஃப்டிஆர் என உள்ளதால் இது இந்தியன் எஃப்டிஆர் 1200 பைக்கின் மற்றொரு வேரியண்ட்டாகவும் விளங்கவுள்ளது.

இன்று வெளியாகிறது இந்தியன் எஃப்டிஆர் கார்பன் பைக்... புதிய டீசர் வீடியோ வெளியீடு..

பைக்கை பற்றிய தகவல்கள் இப்போதைக்கு வெளியிடப்படாவிட்டாலும், எப்படியிருந்தாலும் நாளை பைக் அறிமுகமான பின்பு முழு தகவலும் வெளியிடப்பட்டுவிடும். க்ரூஸர் ப்ராண்டில், மோட்டார்சைக்கிள் சந்தையில் புதிய பிரிவில் நிலைநிறுத்தப்படவுள்ள இந்த பைக்கில் 1,203சிசி, வி-ட்வின், லிக்யூடு-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

MOST READ: ரிஷி கபூர் மரணம்... டெல்லியில் இருக்கும் மகள் லாக்டவுனுக்கு மத்தியில் எப்படி வரப்போகிறார் தெரியுமா?

இன்று வெளியாகிறது இந்தியன் எஃப்டிஆர் கார்பன் பைக்... புதிய டீசர் வீடியோ வெளியீடு..

பிஎஸ்4 தரத்தில் உள்ள இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 123 பிஎச்பி பவர் மற்றும் 120 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இந்த என்ஜின் தனித்துவமான மிட்-ரேஞ்ச் செயல்திறனை பைக்கிற்கு வழங்கும். எஃப்டிஆர் 750 ரேஸ் பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதால் நகர்புற சாலைகளில் அட்டகாசமான ஹேண்ட்லிங்கில் இந்த பைக் செயல்படும்.

MOST READ: நஷ்டங்களை சந்திந்த போதிலும் அரசாங்கத்திற்கு ரூ.41 லட்சத்தை வாரி வழங்கியுள்ள அசோக் லேலண்ட்...

இன்று வெளியாகிறது இந்தியன் எஃப்டிஆர் கார்பன் பைக்... புதிய டீசர் வீடியோ வெளியீடு..

இந்த புதிய பைக்கின் முன்னோடி மாடலான எஃப்டிஆர் 1200-ல் ஸ்போர்ட், ஸ்டாண்டர்ட் மற்றும் மழை என்ற 3 விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி இந்த 1200சிசி பைக்கில் முழு-எல்இடி லைட்டிங், ப்ளூடூத் இணைப்புடன் 4.3 இன்ச் எல்சிடி தொடுத்திரை, வேகமான சார்ஜ் திறனுடன் யுஎஸ்பி போர்ட் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவையும் உள்ளன.

Most Read Articles

English summary
Indian FTR Carbon teased, to be revealed tomorrow [Video]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X