2021ஆம் ஆண்டிற்கான இந்தியன் மோட்டார்சைக்கிள்களில் இப்படியொரு வசதியா!

அடுத்த 2021ஆம் ஆண்டிற்கான பைக்குகள் பற்றிய விபரங்களை அமெரிக்காவை சேர்ந்த இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

2021ஆம் ஆண்டிற்கான இந்தியன் மோட்டார்சைக்கிள்களில் இப்படியொரு வசதியா!

இந்தியன் பிராண்டின் 2021 லைன்அப்பில் ஸ்காட், சீஃப், எச்டிஆர் 1200, சேலஞ்சர், ரோட்மாஸ்டர் மற்றும் ஸ்ப்ரிங்ஃபீல்டு உள்ளிட்டவற்றின் வேரியண்ட்கள் அடங்குகின்றன. இதில் ஸ்காட் பாப்பர் ட்வெண்டி, ரோட்மாஸ்டர் லிமிடேட் மற்றும் சீஃப் விண்டேஜ் டார்க் ஹார்ஸ் உள்ளிட்டவற்றை ஏற்கனவே இந்தியன் நிறுவனம் உறுதிப்படுத்தி இருந்தது.

2021ஆம் ஆண்டிற்கான இந்தியன் மோட்டார்சைக்கிள்களில் இப்படியொரு வசதியா!

இந்நிறுவனத்தின் சேலஞ்சர் மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் விற்பனையில் இல்லை. இதனால் அடுத்த ஆண்டில்தான் முதன்முதலாக சேலஞ்சர் பிராண்ட் இந்தியாவில் களமிறங்கவுள்ளது. இந்த இந்தியன் பைக்குகள் இந்தியாவில் அறிமுகமாகும் உறுதியான தேதி குறித்த செய்தி எதுவும் வெளியாகவில்லை.

2021ஆம் ஆண்டிற்கான இந்தியன் மோட்டார்சைக்கிள்களில் இப்படியொரு வசதியா!

இந்த புதிய அறிமுகங்களுக்கு முன்னதாக இந்த வருட இறுதிக்குள்ளாக பிஎஸ்6 மோட்டார்சைக்கிள்களின் விற்பனையையும் இந்நிறுவனம் துவங்கவுள்ளது. இதுகுறித்து போலாரிஸ் இந்தியா நிறுவனத்தின் மேலாளர் லலித் சர்மா கூறுகையில், "இந்தியன் மோட்டார் சைக்கிளின் புதிய மற்றும் மேம்பட்ட வரிசையை இந்தியாவில் கொண்டுவருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

2021ஆம் ஆண்டிற்கான இந்தியன் மோட்டார்சைக்கிள்களில் இப்படியொரு வசதியா!

எங்கள் 2021 வரிசையில் பல புதிய சேர்த்தல்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இணைக்கப்படும், அவை நிச்சயமாக அழகை சேர்க்கும் மற்றும் ரைடர்ஸின் ஈர்ப்பைப் பெறும். தொற்றுநோய்களின் போது கூட நாங்கள் அனுபவித்த குறிப்பிடத்தக்க பிராண்ட் வேகமும், 2021 இல் நல்ல வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம்" என கூறினார்.

2021ஆம் ஆண்டிற்கான இந்தியன் மோட்டார்சைக்கிள்களில் இப்படியொரு வசதியா!

இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் அதன் புதிய லைன்-அப் மோட்டார்சைக்கிள்களுக்கான முன்பதிவுகளை விரைவில் துவங்கவுள்ளது. அதாவது இந்த முன்பதிவு பணிகள் வரப்போகும் தீபாவளியில் இருந்து துவங்கலாம். புதிய இந்தியன் பைக்குகள் பிஎஸ்6 தரத்திலான என்ஜின் உடன் கவர்ச்சிகர அம்சமாக ஆப்பிள் கார்ப்ளே வசதியையும் பெற்றுவரவுள்ளன.

Most Read Articles
English summary
Indian Motorcycle(R) India all set to roll out the new & advance 2021 lineup – Adds Scout Bobber Twenty, Roadmaster Limited & Vintage Dark Horse
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X