Just In
- 4 hrs ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 6 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 8 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 8 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா... இந்திய நேரப்படி இன்றிரவு 10 மணிக்கு நேரடி ஒளிபரப்பு..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
குளிர்சாதன பெட்டியைவிட இது கூலா இருக்கும்! டூ-வீலர்களுக்கான குளு-குளு இருக்கை அறிமுகம்... இது நெசமா?
வெயில் எத்தனை செல்சியஸில் இருந்தாலும் இந்த இருக்கையில் அமரும்போது ஃபிரிட்ஜ்-க்கு உள்ளே அமர்ந்திருப்பதைப் போல் உணர்வீர்கள்.

இந்தியாவில் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் அனுபவிக்கக் கூடிய கஷ்டமான விஷயங்களில் ஒன்று 'பேக் பர்னிங்'. தெளிவாக கூற வேண்டுமானால், நம்ம இந்தியாவுல அடிக்கிற வெயில்ல 5 நிமிஷம்கூட டூ-வீலர திறந்தவெளி பகுதியில் விட்டுவிட்டு போக முடியாது. அப்படியே விட்டுவிட்டுப் போனாலும், திரும்பி வரும்போது மீண்டும் அதில் உடனே உட்கார முடியாது.

ஏனென்றால், பல டிகிரி செல்சியஸில் இருக்கும் தோசைக் கல்லைவிட உச்சபட்ச சூடுடன் பைக்கின் இருக்கை இருக்கும். இதை மீறி உட்கார்ந்தால் அவ்ளோதான் நம்ம ___ பகுதியை மற்ற இடத்தில் வைப்பது மிகுந்த சிரமம் ஆகிவிடும். எனவேதான் வெயிலில் விட்டுச் சென்ற பைக்கின்மீது உடனே அமர இளைஞர்கள் தயங்குகின்றனர். மேலும், பைக்கை நிறுத்த நிழலான பகுதியைத் தேடி அலைகின்றனர்.

மாமன்னர் அசோகர் சாலையோரத்தில் மரத்தை நடச் சொன்னது எதற்கு உதவுகின்றதோ, இல்லையோ. இளைஞர்கள் வாகனத்தை நிறுத்த நிச்சயம் உதவுகின்றது. ஆனால், தற்போது உள்ள அரசுகளோ சாலை விரிவாக்கம் என்ற பெயரில் சாலையோர மரங்களை வெட்டிச் சாய்த்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல் சில காடுகளையும் அழித்து வருகின்றன.

இதனால், வாகனங்களை நிறுத்த மட்டுமல்ல வெயிலில் சற்று இளைப்பாரக் கூட பெருவாரியான சாலைகளில் மரங்கள் இல்லாத நிலையே காணப்படுகின்றது. இதனால், வாகன ஓட்டிகள், முக்கியமாக இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில்தான் இந்த 'பேக் பர்ன்' விஷயத்திற்கு முட்டுக் கட்டைப் போடும் விதமாக பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான இந்தியன் மோட்டார்சைக்கிள் அதன் இருசக்கர வாகனத்தில் குளு குளு இருக்கையை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

எந்த மாதிரியான கடும் வெப்பநிலையில் பைக்கை நிறுத்தி வைத்திருந்தாலும், அதன் உரிமையாளர் மீண்டும் வந்து அமரும்போது குளிர்ச்சியான அனுபவத்தையே அந்த இருக்கை வழங்கும் என கூறப்படுகின்றது.
இந்த அம்சம், இந்தியாவின் அதிக வெப்பம் நிறைந்த பகுதிகளுக்கு ஓகே, ஆனா, அண்டார்டிகா மற்றும் இந்தியாவின் பனி பிரதேசங்களான ஜம்மு அண்ட் காஷ்மீர் மற்றும் ஷிம்லா போன்ற பகுதிகளில் இருப்பவர்களுக்கான பயன் என்ன என்று கேள்வி பலர் மத்தியில் தோன்றுகின்றது.

அதற்கான வழியையும் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் அதில் வழங்கியுள்ளது. அதாவது, குளிர்பிரதேச வாசிகளுக்கு கதகதப்பான அனுபவத்தை வழங்குகின்ற அம்சமும் அதில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. எனவே, இந்த இருக்கையை குளிர் மற்றும் வெப்பம் நிறைந்த ஆகிய காலச்சூழ்நிலையிலும் பயன்படுத்த முடியும் என்பது தெரியவந்துள்ளது.

இந்த அம்சம் வெளியானதும், ஆஹா இதையல்லவா இத்தனை நாட்களாக நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் என்ற எண்ணம் நம்ப ஊர் இளண் காளையர்கள் மத்தியில் தென்படத் தொடங்கியுள்ளது. ஆனால், இந்த அம்சம் இந்தியின் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் குறிப்பிட்ட தயாரிப்புகளில் மட்டுமே கிடைக்க இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் லேசான சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த இருக்கைக்கு 'கிளைமாகமேண்ட்' என்ற பெயரை இந்திய மோட்டார்சைக்கிள் நிறுவனம் வைத்துள்ளது. இந்த இருக்கை இருசக்கர வாகனத்தை ஓட்டுபவருக்கு மட்டுமின்றி பின்னால் அமர்ந்து வருபவருக்கும் குளிர்ச்சியான மற்றும் கதகதப்பான பயண அனுபவத்தை வழங்க உதவும். இதற்காக நவீன தெர்மா சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக கார்களில் மட்டுமே இதுமாதிரியான ஓஇஎம் அம்சம் கொண்ட இருக்கைகள் வழங்கப்பட்டு வந்தன. எனவே, இந்த அம்சத்தைப் பெறும் முதல் மோட்டார்சைக்கிளாக இந்தியன் நிறுவனத்தின் தயாரிப்பு இருக்கின்றது. இந்த அம்சம் வெளிச்சந்தையில் கிடைக்கிறதா என்பதுகூட கேள்விக்குறியாக இருக்கின்றது.

பொதுவாக, சில பிரிமியம் வசதிக்கொண்ட கருவிகளை ஓர் வாகன தயாரிப்பு நிறுவனத்தைக் காட்டிலும் ஆஃப்டர் மார்க்கெட்டில் எளிதில் நம்மால் பெற முடியும். ஆனால், இந்த அம்சம் தற்போது வரை பெரும்பாலான சந்தையில் விற்பனைக்கு வரவில்லை. எனவே, இந்த அம்சத்தைப் பெற்று விற்பனைக்கு வரவிருக்கும் இந்தியன் மோட்டார்சைக்கிளின் மீதான எதிர்பார்ப்பு உலகளாவிய நீடித்து வருகின்றது.

அதேசமயம், இந்த இருக்கை அமெரிக்கா போன்ற நாடுகளில் முன்னோட்டமாக அக்ஸசெரீஸாக இந்தியன் மோட்டார்சைக்கில் நிறுவனம் விற்பனைச் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, சீஃப்டெயின் மற்றும் ரோட்மாஸ்டர் ஆகிய மாடல்களுக்கு மட்டும் பிரத்யேகமாக வழங்கப்பட்டு வருவதாக அதில் கூறப்படுகின்றது.

இதற்கு அதிகபட்சமாக அந்நாட்டு டாலர்கள் மதிப்பில் 1,200 என்ற தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 90,800 ஆகும். இந்த விலைக்கு நம்ப ஊர்ல ஒரு புத்தம் புதிய பைக்கையே வாங்கிவிடலாம் என்பது குறிப்பிடத்தகுந்தது.