அமெரிக்கர்களை கவர வருகின்றன இரு புதிய இந்தியன் மோட்டார்சைக்கிள்கள்... விலைதான் எங்கயோ இருக்கு...

இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியன் விண்டேஜ் டார்க் ஹார்ஸ் மற்றும் ரோட்மாஸ்டர் லிமிடேட் என்ற இரு புதிய மாடல்களுடன் தனது தயாரிப்பு மாடல்களின் வரிசையை விரிவுப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

அமெரிக்கர்களை கவர வருகின்றன இரு புதிய இந்தியன் மோட்டார்சைக்கிள்கள்... விலைதான் எங்கயோ இருக்கு...

அமெரிக்காவை சேர்ந்த இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்திற்கு இந்த வருடம் அவ்வளவு மோசமானதாக இல்லை. ஏனெனில் 2020ஆம் ஆண்டின் முதல் பாதியில் வலுவான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்த இந்நிறுவனம் தற்போது புதிய இரு பைக் மாடல்களின் வருகையை அறிவித்துள்ளது.

அமெரிக்கர்களை கவர வருகின்றன இரு புதிய இந்தியன் மோட்டார்சைக்கிள்கள்... விலைதான் எங்கயோ இருக்கு...

இதில் இந்தியன் விண்டேஜ் டார்க் ஹார்ஸ் பைக் மாடலானது நிறுவனத்தின் 2021ஆம் ஆண்டிற்கான க்ரூஸர் லைன்அப்பில் இணைந்துள்ளது. இந்த புதிய மாடல் அச்சுறுத்தும் அணுகுமுறையுடன் பைக்கின் ஸ்டைலிங் பாகங்களை பற்றி பெரிதாக கண்டுகொள்ளாத ரைடர்ஸுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கர்களை கவர வருகின்றன இரு புதிய இந்தியன் மோட்டார்சைக்கிள்கள்... விலைதான் எங்கயோ இருக்கு...

அதன் பெயரில் குறிப்பிடுவது போலவே, இந்தியன் விண்டேஜ் டார்க் ஹார்ஸ் மென்மையான கருப்பு தோல் பைகளால் நிரப்பப்பட்டபடி, முழுக்க முழுக்க கறுப்பு நிறத்தில் ஸ்டைலிங் பாகங்களை கொண்டுள்ளது. மறுப்புறம், இந்தியன் மோட்டார் சைக்கிளின் டூரிங் வரிசையில் புதிய ரோட்மாஸ்டர் லிமிடெட் இணைந்துள்ளது.

அமெரிக்கர்களை கவர வருகின்றன இரு புதிய இந்தியன் மோட்டார்சைக்கிள்கள்... விலைதான் எங்கயோ இருக்கு...

இந்த புதிய மாடல் ஒரு பளபளப்பான பூச்சு, குரோம் மற்றும் நவீன தரத்திலான வடிவமைப்பு, அத்துடன் திறந்த முன் ஃபெண்டர் மற்றும் ஸ்லாம் சாடில் பேக்குகள் மூலம் அடையாளம் குறிக்கப்பட்டுள்ளது. அனைத்து ரோட்மாஸ்டர்களைப் போலவே, ரோட்மாஸ்டர் லிமிடெட் பைக்கும் ஏர்-கூல்ட் தண்டர்ஸ்ட்ரோக் 116 மற்றும் மெட்ஸெலர் க்ரூசெடெக் டயர்களுடன் வழங்கப்படவுள்ளது.

அமெரிக்கர்களை கவர வருகின்றன இரு புதிய இந்தியன் மோட்டார்சைக்கிள்கள்... விலைதான் எங்கயோ இருக்கு...

சுவாரஸ்யமாக, 2021 ரோட்மாஸ்டர் லிமிடெட் மற்றும் ரோட்மாஸ்டர் டார்க் ஹார்ஸ் மாடல்கள் அனைத்தும் புதிய க்ளைமா-கமெண்ட் ரோக் இருக்கைகளுடன் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இது ஓட்டுனரின் கட்டளையை ஏற்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மூலம் இருக்கையை சூடாக்க மற்றும் குளிரூட்டலை சரிசெய்ய ஓட்டுனரை அனுமதிக்கும்.

அமெரிக்கர்களை கவர வருகின்றன இரு புதிய இந்தியன் மோட்டார்சைக்கிள்கள்... விலைதான் எங்கயோ இருக்கு...

அனைத்து 2021 ரோட்மாஸ்டர் மாடல்களும் இப்போது தொழிற்சாலையிலேயே நிறுவப்பட்ட ஆப்பிள் கார்ப்ளேவுடன் வழங்கப்படுகின்றன. ஏனெனில் இந்த தொழிற்நுட்பம் ஆனது 2021 சீஃப்டயின் மற்றும் இந்திய சேலஞ்சர் மாடல்களில் ரைட் கமெண்ட் நாவிகேஷன் உடன் ஏற்கனவே நிலையாக வழங்கப்பட்டு வருகிறது.

அமெரிக்கர்களை கவர வருகின்றன இரு புதிய இந்தியன் மோட்டார்சைக்கிள்கள்... விலைதான் எங்கயோ இருக்கு...

விற்பனை விலைகளை பொறுத்தவரையில் இந்தியன் விண்டேஜ் டார்க் ஹார்ஸ் பைக்கின் விலை 19,499 டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.14.35 லட்சமாகும். அதேநேரம் ரோட்மாஸ்டர் லிமிடெட் பைக்கை சொந்தமாக்க அமெரிக்கர்கள் 30,749 டாலர்களை செலவழித்தாக வேண்டும்.

அமெரிக்கர்களை கவர வருகின்றன இரு புதிய இந்தியன் மோட்டார்சைக்கிள்கள்... விலைதான் எங்கயோ இருக்கு...

இதன் இந்திய ரூபாய் மதிப்பு ரூ.22.64 லட்சமாகும். அதேநேரம் ரோட்மாஸ்டர் டார்க் ஹார்ஸின் விலை இதனை காட்டிலும் சற்று குறைவாக 29,999 டாலர்கள் என்ற அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியன் மோட்டார்சைக்கிள்கள் என்ன இவ்வளவு விலைகளில் உள்ளது என அதிர்ச்சியாக வேண்டாம் ஏனெனில் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.6.6 லட்சத்தில் கூட இந்நிறுவனத்தின் ஸ்காட் மாடல்கள் கிடைக்கின்றன.

Most Read Articles
English summary
Indian motorcycle unveiled 2021 Indian Vintage Dark Horse and 2021 Roadmaster limited. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X