கூடுதல் கம்பீரத்துடன் அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு வரும் புதிய இந்தியன் ஸ்கவுட் பாபர் சிக்ஸ்டி...

அமெரிக்காவில் உள்ள இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான இந்தியன் மோட்டார்சைக்கிளின் ஸ்கவுட் சிக்ஸ்டி பைக் மாடல் அமெரிக்காவை தாண்டி இந்தியாவிலும் பிரபலமானது. இந்த நிலையில் இந்த மாடலின் வரிசையில் ஸ்கவுட் பாபர் சிக்ஸ்டி என்ற புதிய பைக் இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய இந்தியன் பைக்கை குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கூடுதல் கம்பீரத்துடன் அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு வரும் புதிய இந்தியன் ஸ்கவுட் பாபர் சிக்ஸ்டி...

ஸ்கவுட் சிக்ஸ்டி பைக் மாடலானது, இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் பிரியர்களுக்கும், லைட்-பேக் க்ரூஸர் வகை பைக்குகளை விரும்புவோருக்கும் மிகவும் பிடித்தமான மோட்டார்சைக்கிளாக விளங்குகிறது.

கூடுதல் கம்பீரத்துடன் அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு வரும் புதிய இந்தியன் ஸ்கவுட் பாபர் சிக்ஸ்டி...

தற்போது இதன் எடை குறைவான வெர்சனாக அறிமுகமாகவுள்ள ஸ்கவுட் பாபர் சிக்ஸ்டி மாடல் முந்தைய மாடலை விட எடையை குறைவாக பெற்றிருந்தாலும் அதனை விட தோற்றத்தில் பெரியது.

கூடுதல் கம்பீரத்துடன் அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு வரும் புதிய இந்தியன் ஸ்கவுட் பாபர் சிக்ஸ்டி...

தற்போதைய இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி பைக்கை போன்று முழுக்க முழுக்க கருப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த புது வெர்சன் பைக்கிலும் ஒற்றை இருக்கை, குறைவான நீளத்தில் ஃபெண்டர்கள், தாழ்வான டிசைன் அமைப்பு, பழமையான ரெட்ரோ டிசைன் உள்ளிட்டவை தொடர்ந்துள்ளன.

கூடுதல் கம்பீரத்துடன் அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு வரும் புதிய இந்தியன் ஸ்கவுட் பாபர் சிக்ஸ்டி...

ஆனால் ஸ்கவுட் சிக்ஸ்டி பைக், விருப்பத்திற்கு ஏற்றாற்போல் திருப்பக்கூடிய பின்புறம் பார்க்கும் கண்ணாடியையும், ஹௌசிங் பெறாத ஹெட்லேம்ப்பையும் பெற்றிருந்தது. புதிய ஸ்கவுட் பாபர் சிக்ஸ்டி பைக்கில் 999சிசி வி-ட்வின் என்ஜினை இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் பொருத்தியுள்ளது.

கூடுதல் கம்பீரத்துடன் அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு வரும் புதிய இந்தியன் ஸ்கவுட் பாபர் சிக்ஸ்டி...

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 7,300 ஆர்பிஎம்-ல் 74 பிஎச்பி பவரையும், 5,800 ஆர்பிஎம்-ல் 88.8 என்எம் டார்க் திறனையும் பைக்கிற்கு வழங்கும். இந்த என்ஜின் அமைப்பு மட்டுமின்றி, புதிய ஸ்கவுட் பாபர் சிக்ஸ்டி பைக்கில் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக வழங்கப்பட்டுள்ள 6-ஸ்பீடு கியர்பாக்ஸை தற்போதைய ஸ்கவுட் சிக்ஸ்டி பைக்கும் கொண்டுள்ளது.

கூடுதல் கம்பீரத்துடன் அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு வரும் புதிய இந்தியன் ஸ்கவுட் பாபர் சிக்ஸ்டி...

மேலும் இந்தியன் ஸ்கவுட் பாபர் சிக்ஸ்டி பைக்கை பளப்பளப்பான கருப்பு மற்றும் மேட் ப்ளாக் ஃபினீஷ் என்ற இரு நிறங்களில் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கலாம். இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்த புதிய ஸ்கவுட் சிக்ஸ்டி வரிசை பைக்கை ஏற்கனவே அமெரிக்காவில் அறிமுகப்படுத்திவிட்டது.

கூடுதல் கம்பீரத்துடன் அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு வரும் புதிய இந்தியன் ஸ்கவுட் பாபர் சிக்ஸ்டி...

இந்த புதிய 1000சிசி பைக்கின் இந்திய அறிமுகம் அடுத்த ஆண்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க சந்தையில் இந்த பைக்கின் விலை $8,999-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.6.67 லட்சமாகும்.

கூடுதல் கம்பீரத்துடன் அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு வரும் புதிய இந்தியன் ஸ்கவுட் பாபர் சிக்ஸ்டி...

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி பைக்கின் விலை ரூ.10.99 லட்சமாக உள்ளது. இதனால் புதிய ஸ்கவுட் பாபர் சிக்ஸ்டி பைக் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் போது அமெரிக்க சந்தை விலையை விட சில லட்சங்கள் கூடுதலாக பெறும் என கூறப்படுகிறது.

தற்சமயம் இந்தியாவில் விற்பனையாகும் ஸ்கவுட் சிக்ஸ்டி பைக் மாடலுக்கும் அமெரிக்க மாடலுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. அதாவது அமெரிக்காவில் விற்பனையாகும் ஸ்கவுட் சிக்ஸ்டி பைக்கில் 1133சிசி என்ஜின் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Indian motorcycle unveils Scout Bobber Sixty details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X