கேடிஎம் பைக்கின் அதி வேகமாக ஓடும் திறனை குறைத்த இளைஞர்.. எப்படி? ஏன்? தெரிஞ்சா ஷாக் ஆயிரூவிங்க..!

இளைஞர் ஒருவர் தனது புத்தம் புதிய கேடிஎம் 390 அட்வென்சர் பைக்கை மாடிஃபை செய்து திறனை குறைத்திருக்கின்றார். இதற்கான காரணத்தை இந்த பதிவில் காணலாம்.

மாடிஃபை செய்து பைக்கின் திறனை குறைத்த இளைஞர்... ஏன் தெரிஞ்சா ஷாக் ஆயிரூவிங்க..!

இந்தியாவில் வாகன பிரியர்கள் பலர் தங்களின் குறைந்த திறனுடைய வாகனங்களை அதிக திறனை வெளிப்படுத்தும் வகையில் மாடிஃபை செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், இங்கு ஓர் இளைஞர், தனது அதிகம் திறனை வெளிப்படுத்தும் கேடிஎம் 390 அட்வென்சர் பைக்கை குறைந்த திறனுக்கு மாடிஃபை செய்திருக்கின்றார்.

மாடிஃபை செய்து பைக்கின் திறனை குறைத்த இளைஞர்... ஏன் தெரிஞ்சா ஷாக் ஆயிரூவிங்க..!

பொதுவாக, அட்வென்சர் டூரர் ரக பைக்குகள் அதிக திறனை விரைவில் வெளிப்படுத்தும் என்ற காரணத்தால் இளைஞர்களின் பிடித்தமான வாகனங்களில் ஒன்றாக அவை மாறியிருக்கின்றன. ஆகையால், இந்தியாவில் அட்வென்சர் டூரர் ரக மோட்டார்சைக்கிளுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.

மாடிஃபை செய்து பைக்கின் திறனை குறைத்த இளைஞர்... ஏன் தெரிஞ்சா ஷாக் ஆயிரூவிங்க..!

குறிப்பாக கடந்த சில நாட்களாக இந்த ரக பைக்குகளுக்கான டிமாண்ட் கூடுதலாக சூடிபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. இதனை உறுதி செய்யும் வகையில் இந்திய இருசக்கர வாகன சந்தையில் ஹீரோ எக்ஸ்பல்ஸ், ராயல் என்பீல்டு ஹிமாலயன், பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் உள்ளிட்ட அட்வென்சர் பைக்குகளின் அறிமுகம் இருக்கின்றது.

மாடிஃபை செய்து பைக்கின் திறனை குறைத்த இளைஞர்... ஏன் தெரிஞ்சா ஷாக் ஆயிரூவிங்க..!

இந்த வரிசையில் கேடிஎம் நிறுவனமும் அதன் பங்காக புத்தம் புதிய 390 அட்வென்சர் பைக்கை சமீபத்தில் களமிறக்கியது. இந்த பைக், மேற்கூறப்பட்ட மற்ற பைக்குகளைக் காட்டிலும் அதிக திறன் மற்றும் கூடுதல் ஸ்டைலிஸான வடிவமைப்பைக் கொண்ட மாடலாக இருக்கின்றது.

இதனை கேடிஎம் நிறுவனம் ரூ. 2.99 லட்சம் என்ற விலையில் விற்பனைச் செய்து வருகின்றது. இது, எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

மாடிஃபை செய்து பைக்கின் திறனை குறைத்த இளைஞர்... ஏன் தெரிஞ்சா ஷாக் ஆயிரூவிங்க..!

கேடிஎம் நிறுவனத்தின் இந்த 390 அட்வென்சர் பைக் நேரடியாக அதிக விலைக் கொண்ட பிஎம்டபிள்யூ ஜி 310 மாடலுக்கு போட்டியை வழங்கி வருகின்றது. இதற்கு சான்றாக 390 அட்வென்சர் பைக்கிற்கு குவிந்து வரும் புக்கிங்குகள் இருக்கின்றன.

மாடிஃபை செய்து பைக்கின் திறனை குறைத்த இளைஞர்... ஏன் தெரிஞ்சா ஷாக் ஆயிரூவிங்க..!

இந்தநிலையில், அண்மையில் இந்த பைக்கை வாங்கிய இளைஞர் ஒருவர், அதனை லேசாக மாடிஃபிகேஷனுக்கு உட்படுத்தியுள்ளார். இந்த செய்கையால், இந்தியாவின் முதல் மாடிஃபைட் கேடிஎம் 390 அட்வென்சராக அது மாறியிருக்கின்றது.

மாடிஃபை செய்து பைக்கின் திறனை குறைத்த இளைஞர்... ஏன் தெரிஞ்சா ஷாக் ஆயிரூவிங்க..!

பைக்கில் என்னவிதமான மாடிஃபிகேஷன்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதை விளக்கும் வகையில் வீடியோ ஒன்றையும் அவர் வெளியாகியிருக்கின்றது. இதனை, அபினவ் பாத் என்ற யுடியூப் தளம் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ, பைக் சாலையில் உலா வருவதைப் போன்று காட்சிகளைக் கொண்டு ஆரம்பிக்கின்றது.

தொடர்ந்து, பைக்கில் செய்யப்பட்டு மாற்றங்களைப் பற்றி அந்த பைக்கின் உரிமையாளரே பைக்கை ஓட்டியவாறு கூறுகின்றார்.

மாடிஃபை செய்து பைக்கின் திறனை குறைத்த இளைஞர்... ஏன் தெரிஞ்சா ஷாக் ஆயிரூவிங்க..!

அதில், அந்த இளைஞர் கேடிஎம் 390 அட்வென்சர் பைக்கை அண்மையிலேயே வாங்கியதாக கூறுகின்றார். மேலும், சில நாட்களாக முன்பாகவே அந்த பைக்கை அவர் முதல் சர்வீஸுக்கும் விட்டு எடுத்திருக்கின்றார். அப்போது, தான்குறிப்பிட்ட மாற்றங்களை அவர் செய்திருக்கின்றார்.

மாடிஃபை செய்து பைக்கின் திறனை குறைத்த இளைஞர்... ஏன் தெரிஞ்சா ஷாக் ஆயிரூவிங்க..!

இதன்படி, 390 அட்வென்சர் பைக்கில் பயன்படுத்தப்படும் மினரல் ஆயிலுக்கு பதிலாக சிந்தெடிக் ஆயிலை அவர் பயன்படுத்தியிருக்கின்றார்.

இந்த மாற்றத்தினால், வின்ட் ஷீல்டை தவிர மற்ற அனைத்து பாகங்களின் வைப்ரஷேன்களும் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்திருக்கின்றது.

மாடிஃபை செய்து பைக்கின் திறனை குறைத்த இளைஞர்... ஏன் தெரிஞ்சா ஷாக் ஆயிரூவிங்க..!

இதனை வீடியோ வாயிலாக அவரே கூறுகின்றார். தொடர்ந்து, ஸ்பிராக்கெட்டையும் அவர் மாற்றியிருக்கின்றார். இதற்காக கேடிஎம் ட்யூக் 250 பைக்குகளில் காணப்படும் ஸ்பிராக்கெட்டுகள் 390 அட்வென்சர் பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

மாடிஃபை செய்து பைக்கின் திறனை குறைத்த இளைஞர்... ஏன் தெரிஞ்சா ஷாக் ஆயிரூவிங்க..!

முன்னதாக இருந்த ஸ்பிராக்கெட்டுகள் 15 பற்களைக் கொண்டவை ஆகும். ஆனால், தற்போது மாற்றப்பட்டிருக்கும் ஸ்பிராக்கெட்டுகள் 14 பற்களைக் கொண்ட ஸ்பிராக்கெட்.

இந்தவகையிலான ஸ்பிராக்கெட்டுகளே கேடிஎம் ட்யூக் 250 போன்ற சிறிய ரக பைக்குகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

மாடிஃபை செய்து பைக்கின் திறனை குறைத்த இளைஞர்... ஏன் தெரிஞ்சா ஷாக் ஆயிரூவிங்க..!

இதைத்தொடர்ந்து, கியர் அமைப்பையும் தினசரி பயணத்திற்கேற்பவாறு சற்றே சிறியதாக மாற்றியிருக்கின்றார். இது நெரிசல் மிகுந்த சாலைகளில் எளிதாக கியரை மாற்ற உதவும்.

தற்போது செய்யப்பட்டிருக்கும் இந்த மாற்றங்கள் அனைத்தும் கேடிஎம் 390 அட்வென்சர் பைக்கை சற்றே திறன் குறைந்த மாடலாக மாற்றியிருக்கின்றது.

மாடிஃபை செய்து பைக்கின் திறனை குறைத்த இளைஞர்... ஏன் தெரிஞ்சா ஷாக் ஆயிரூவிங்க..!

குறிப்பாக, ஸ்பிராக்கெட்டை மாற்றியது மற்றும் கியர்களை ஷார்ட் செய்தது உள்ளிட்ட நடவடிக்கைகள் எஞ்ஜின் திறனை லேசாக பாதித்திருக்கின்றது. ஆகையால், முன்பு இருந்த அதிர்வு பல மடங்கு தற்போது குறைந்திருக்கின்றது. இதனை அந்த இளைஞர் மிகவும் உற்சாகத்துடன் தெரிவிக்கின்றார்.

மாடிஃபை செய்து பைக்கின் திறனை குறைத்த இளைஞர்... ஏன் தெரிஞ்சா ஷாக் ஆயிரூவிங்க..!

இதைவைத்து பார்க்கையில் பைக்கில் அதிகம் அதிர்வு இருப்பதன் காரணத்தினாலயே அதிக திறன் கொண்ட அட்வென்சர் 390 பைக்கை அந்த இளைஞர் லேசான மாடிஃபிகேஷனுக்கு உட்படுத்தியிருக்கின்றார் என்பது தெரியவருகின்றது.

மாடிஃபை செய்து பைக்கின் திறனை குறைத்த இளைஞர்... ஏன் தெரிஞ்சா ஷாக் ஆயிரூவிங்க..!

இந்த மாற்றத்தினால் முதல் இரு கியர்களில் அதிக டார்க்கை இவை வெளிப்படுத்துகின்றது. மாற்றம் செய்யப்பட்டதற்கு முன்பிருந்ததைக் காட்டிலும் இது சற்று அதிகம். ஆனால், அடுத்தடுத்த கியர்களில் திறன் கணிசமாக குறைகின்றது. இந்த மிகப்பெரிய மாற்றத்தை அதிக வைப்ரேஷனின் காரணமாகவே அந்த இளைஞர் செய்திருக்கின்றார்.

கேடிஎம் நிறுவனத்தின் 390 அட்வென்சர் பைக் அதிக தொழில்நுட்பத்தை ஏந்திய மாடலாக இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கின்றது. குறிப்பாக, டிராக்சன் கன்ட்ரோல், நேவிகேஷன் சிஸ்டம், மை ரைட் ஸ்மார்ட்ஃபோன் ஆப், முழு நிற திறனுடைய டிஎஃப்டி டிஸ்பிளே உள்ளிட்டவை இந்த பைக்கில் இடம்பெற்றிருக்கின்றன.

மாடிஃபை செய்து பைக்கின் திறனை குறைத்த இளைஞர்... ஏன் தெரிஞ்சா ஷாக் ஆயிரூவிங்க..!

இத்துடன், பைக்கின் பிரிமியம் மற்றும் அட்வென்சர் தோற்றத்திற்காக அலாய் வீல், ஏபிஎஸ் அம்சம் கொண்ட இரு டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும், மிக முக்கியமாக பை-டைரக்ஷனல் குயிக் ஷிஃப்டர் தொழில்நுட்பம் இந்த பைக்கில் இடம்பெற்றிருக்கின்றது.

இந்த வகையிலான அம்சத்தை வேறெந்த போட்டி நிறுவனங்களும் அதன் தயாரிப்புகளில் வழங்கவில்லை. குறிப்பாக இந்த 390 அட்வென்சர் போட்டி மாடல்களில் இடம்பெறவில்லை.

மாடிஃபை செய்து பைக்கின் திறனை குறைத்த இளைஞர்... ஏன் தெரிஞ்சா ஷாக் ஆயிரூவிங்க..!

கேடிஎம் 390 அட்வென்சர் பைக்கில் 373 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது இது, அதிகபட்சமாக 43 பிஎச்பி மற்றும் 37 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இந்த பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாகும்.

Most Read Articles
English summary
Indias First Modified KTM 390 Adventure. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X