பெட்ரோல் விலையுயர்வு கவலை இனி வேண்டாம்... இதோ இந்தியாவின் அதிக மைலேஜ் வழங்கும் பைக்குகள்!

இந்தியாவில் விற்பனையாகும் அதிக மைலேஜ் கொண்ட பைக்குகளின் பட்டியல் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

பெட்ரோல் விலையுயர்வு கவலை இனி வேண்டாம்... இதோ இந்தியாவின் அதிக மைலேஜ் வழங்கும் பைக்குகள்!

இந்த வண்டிக்கு பெட்ரோல் போட்டே என்னால முன்னுக்கு வர முடியலிங்க... பைக் உரிமையாளர்கள் பலர் இதுபோன்று புலம்புவதை நாம் பார்த்திருப்போம். ஏன், நம்மில் பலரே இத்தகைய புலம்பலை நமது நண்பர்களிடத்தில் முன் வைத்திருப்போம் அல்லது நமது நண்பர்கள் நம்மிடம் கூறியிருப்பார்கள்.

பெட்ரோல் விலையுயர்வு கவலை இனி வேண்டாம்... இதோ இந்தியாவின் அதிக மைலேஜ் வழங்கும் பைக்குகள்!

இதனால்தான் ஓர் புதிய பைக்கை தேர்வு செய்யும் முன்பு சிறந்த ஆட்டோ ஸ்பெஷலிஸ்ட் அல்லது இணையத்தின் உதவியை நாட வேண்டும் அறிவுறுத்தப்படுகின்றனர். இதனை நாங்கள் மட்டுமில்லைங்க உலக ஆட்டோ வல்லுநர்களே இதைதான் கூறுகிறார்கள். அதேசமயம், பைக்கிற்கு மட்டுமில்லைங்க அனைத்து விதமான வாகனங்களுக்கும் இது பொருந்தும்.

MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

பெட்ரோல் விலையுயர்வு கவலை இனி வேண்டாம்... இதோ இந்தியாவின் அதிக மைலேஜ் வழங்கும் பைக்குகள்!

உலகில் விற்கப்படும் பல இருசக்கர வாகனங்கள் எஞ்ஜின் திறன் மற்றும் தோற்ற அழகு ஆகியவற்றையே மைய கருத்தாகக் கொண்டு உருவாகியிருக்கின்றன. எனவே, அவற்றில் அதிக மைலேஜை எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், சந்தையில் பட்ஜெட் வாகன விரும்பிகளைக் கருத்தில் கொண்டு அதிக மைலேஜ் வழங்கும் வாகனங்களையும் வாகன உற்பத்தி நிறுவனங்கள் களமிறக்கி வருகின்றன.

பெட்ரோல் விலையுயர்வு கவலை இனி வேண்டாம்... இதோ இந்தியாவின் அதிக மைலேஜ் வழங்கும் பைக்குகள்!

அந்தவகையில், தற்போது இந்தியாவில் விற்பனையாகும் அதிக மைலேஜ் வழங்கும் டூ வீலர்களின் பட்டியலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். சரி வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

இந்த வரிசையில் நாம் முதலில் தினசரி வாகன ஓட்டிகளின் தேடல்களில் முதல் இடத்தை பிடித்திருக்கும் அதிக மைலேஜ் பைக்குகளைப் பற்றிப் பார்க்கலாம்.

MOST READ: இந்தியாவில் இன்று அறிமுகமாகுகிறது பிஎஸ்6 டட்சன் ரெடி-கோ... கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்கள் என்னென்ன..?

பெட்ரோல் விலையுயர்வு கவலை இனி வேண்டாம்... இதோ இந்தியாவின் அதிக மைலேஜ் வழங்கும் பைக்குகள்!

பஜாஜ் சிடி 110

தினசரி இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் இளைஞர்களின் தேடல்களில் பஜாஜ் சிடி 110 பைக்கே முதலிடத்தில் இருக்கின்றது. காரணம், இந்த பைக் அதிக மைலேஜே மற்றும் விலை குறைவான விலையைக் கொண்டதாக இருக்கிறது.

அராய் (ARAI) வெளியிட்ட அறிவிப்பின்படி, 4 ஸ்பீடு கியர்பாக்ஸைக் கொண்ட இந்த பைக் அதிகபட்சமாக லிட்டர் ஒன்றிற்கு 104 கிமீ வரை மைலேஜை வழங்கும் என தெரிகின்றது.

பெட்ரோல் விலையுயர்வு கவலை இனி வேண்டாம்... இதோ இந்தியாவின் அதிக மைலேஜ் வழங்கும் பைக்குகள்!

இந்தியாவிலேயே இதுதான் உச்சபட்ச அதிக மைலேஜே வழங்கும் திறன் ஆகும். இதனாலயே இந்திய சாலையில் இந்த பைக் தற்போது அதிகளவில் பயன்பாட்டில் இருக்கின்றது. இதன் விலையும் மிக மலிவானதாகும்.

ஆம், இந்த பைக் இந்தியாவில் ரூ. 46,413 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது. இந்த பைக்கில் பகல்நேர எல்இடி மின் விளக்கு, நடுத்தர க்னாப்பி டயர்கள், ஃபோர்க் கெய்டர்ஸ் மற்றும் அலாய் வீல்கள் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன.

MOST READ: அறிமுகத்திற்கு முன்னதாக இந்தியாவில் ஸ்கோடா கரோக் எஸ்யூவி சோதனை ஓட்டம்...

பெட்ரோல் விலையுயர்வு கவலை இனி வேண்டாம்... இதோ இந்தியாவின் அதிக மைலேஜ் வழங்கும் பைக்குகள்!

பஜாஜ் சிடி110 பைக்கில் 8.6 பிஎஸ் மற்றும் 9.81 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் 115சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதனை நகர் புறத்தின் உச்சபட்ச போக்குவரத்தில் வைத்து இயக்கும்போது 80 கிமீ வரை மட்டுமே மைலேஜை வழங்கும். சிக்னல் மற்றும் நெரிசலைப் பொருத்து எஞ்ஜினை இயக்கினால் இது அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பெட்ரோல் விலையுயர்வு கவலை இனி வேண்டாம்... இதோ இந்தியாவின் அதிக மைலேஜ் வழங்கும் பைக்குகள்!

டிவிஎஸ் ஸ்போர்ட்

இந்தியாவில் விற்பனையாகும் மிக மலிவான டூ-வீலர்களில் டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கும் ஒன்று. மைலேஜையும் இந்த பைக் வாரி வழங்குகின்றது. அராய் வெளியிட்ட தகவலின்படி, டிவிஎஸ் ஸ்போர்ட் அதிகபட்சமாக லிட்டர் ஒன்றிற்கு 95 கிமீ மைலேஜை வழங்குவது உறுதியாகியுள்ளது. ஆனால், நகர்ப்புற சாலையில் வைத்து இயக்கும்போது 77 கிமீ வரை மட்டுமே மைலேஜை வழங்கும்.

MOST READ: ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக் இந்திய அறிமுக விபரம்!

பெட்ரோல் விலையுயர்வு கவலை இனி வேண்டாம்... இதோ இந்தியாவின் அதிக மைலேஜ் வழங்கும் பைக்குகள்!

இந்த பைக்கிலும் பகல்நேர எல்இடி மின் விளக்கு அலாய் வீல் மற்றும் எகனாமிக் மீட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும், இந்த பைக்கில் டிவிஎஸ் நிறுவனம் 109 சிசி திறன் கொண்ட ப்யூவல் இன்ஜெக்டட் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 8.2 பிஎஸ் பவரையும், 8.7 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

இந்த பைக்கில் இந்தி ரூ. 52,500 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

பெட்ரோல் விலையுயர்வு கவலை இனி வேண்டாம்... இதோ இந்தியாவின் அதிக மைலேஜ் வழங்கும் பைக்குகள்!

ஹீரோ ஸ்பிளென்டர் ப்ளஸ்

இந்தியர்களின் வாழ்க்கையில் 1994ம் ஆண்டில் இருந்து பின்னி பிணைந்த பைக்காக ஹீரோ ஸ்பிளென்டர் ப்ளஸ் பைக் உள்ளது. இது, முன்பு ஹீரோ-ஹோண்ட ஆகிய நிறுவனங்களின் கூட்டணியில் கிடைத்து வந்தது. தற்போது ஹீரோ தயாரிப்பில் மட்டுமே வெளியிடப்பட்டு வருகின்றது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக்குகளுக்கு இதுவே தலைவன் ஆகும்.

பெட்ரோல் விலையுயர்வு கவலை இனி வேண்டாம்... இதோ இந்தியாவின் அதிக மைலேஜ் வழங்கும் பைக்குகள்!

இதன் நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் மைலேஜ் திறன் உள்ளிட்டவை இந்த இடத்தை அதற்கு பெற்றுக் கொடுத்துள்ளது. ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் பைக்கில் 97.2 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 8 பிஎஸ் மற்றும் 8 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். 4-ஸ்பீடு கியார்பாக்ஸில் இயங்கும் இந்த பைக் உச்சபட்சமாக 80 கிமீ வரை மைலேஜை வழங்கும் என அராய் தெரிவித்துள்ளது.

பெட்ரோல் விலையுயர்வு கவலை இனி வேண்டாம்... இதோ இந்தியாவின் அதிக மைலேஜ் வழங்கும் பைக்குகள்!

ஆனால், நெரிசல் நிறைந்த சாலையில் பயணிக்கும்போது இது வெறும் 65 கிமீ வரை மட்டுமே மைலேஜை வழங்கும். இந்த பைக் இந்தியாவில் ரூ. 59,600 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

பெட்ரோல் விலையுயர்வு கவலை இனி வேண்டாம்... இதோ இந்தியாவின் அதிக மைலேஜ் வழங்கும் பைக்குகள்!

இதுவரை தினசரி வாகனங்களை இயக்குபவர்களுக்கான அதிக மைலேஜை வழங்கும் இருசக்கர வாகனங்களின் பட்டியலை பார்த்தோம். அடுத்ததாக, ஸ்போர்ட்ஸ் லுக்கிலும் இருக்க வேண்டும், நல்ல மைலேஜையும் வழங்க வேண்டும் என எதிர் பார்ப்போர்களுக்கான பைக்கின் பட்டியலை தொடர்ச்சியாக பார்க்கலாம்.

பெட்ரோல் விலையுயர்வு கவலை இனி வேண்டாம்... இதோ இந்தியாவின் அதிக மைலேஜ் வழங்கும் பைக்குகள்!

பஜாஜ் பல்சர் 125

இந்தியர்களை அதிகம் கவர்ந்த ஸ்போர்ட்ஸ் ரக பைக்குகளில் பஜாஜ் பல்சர் முதல் இடத்தில் இருக்கின்றது. எனவே, இது இந்தியாவில் நீண்ட நாட்களாக உற்பத்தியில் இருந்து வருகின்றது. இந்த பைக் அதன் சகோதர மாடலான பல்சர் 150 மாடலின் ஸ்டைலை ஒத்தவாறு இருக்கின்றது. ஆனால், எஞ்ஜின் திறனில் மட்டும் மாற்றத்தைப் பெற்றிருக்கின்றது. அதாவது, பல்சர் 125 பைக்கில் 125சிசி திறன் கொண்ட ட்வின் ஸ்பார்க் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலையுயர்வு கவலை இனி வேண்டாம்... இதோ இந்தியாவின் அதிக மைலேஜ் வழங்கும் பைக்குகள்!

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 11.8 பிஎச்பி மற்றும் 11 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இந்த அதீத திறனை வேறெந்த 125சிசி பைக்கும் வெளிப்படுத்தாது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இந்த பைக் அராய் வெளியிட்ட தகவலின்படி, அதிகபட்சமாக 62 கிமீ மைலேஜை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு வழங்கும் என கூறப்படுகின்றது. ஆனால், நகர்ப்புறங்களில் 55 கிமீ மைலேஜை மட்டுமே வழங்கும். இது இந்தியாவில் ரூ. 69,997 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

பெட்ரோல் விலையுயர்வு கவலை இனி வேண்டாம்... இதோ இந்தியாவின் அதிக மைலேஜ் வழங்கும் பைக்குகள்!

பஜாஜ் பல்சர் 150

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்போர்ட்ஸ் ரக பைக்குகளில் பஜாஜ் பல்சர் 150 பைக்கே முதல் இடத்தில் இருக்கின்றது. அதுமட்டுமின்றி, வெகு நீண்ட நாட்களாக லேசான மாற்றங்களுடன் விற்பனையில் இருக்கும் பைக்குகளிலும் இது ஒன்று இருக்கிறது.

இந்த பைக் ஒரு லிட்டர் பெட்ரோலிற்கு 60 கிமீ வரை மைலேஜே வழங்கும் என கூறப்படுகின்றது. ஆனால், பலர் வெவ்வேறு விதமாக இதன் மைலேஜ் பற்றி கூறி வருகின்றனர்.

பெட்ரோல் விலையுயர்வு கவலை இனி வேண்டாம்... இதோ இந்தியாவின் அதிக மைலேஜ் வழங்கும் பைக்குகள்!

பஜாஜ் பல்சர் 150 பைக்கில் 150சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது அதிகபட்சமாக 14 பிஎஸ் மற்றும் 13.2 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இது இந்தியாவில், ரூ. 85,536 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இந்த விலைக்கேற்ப ஸ்பிட் இருக்கை, ஸ்போர்ட்டி கிராஃபிக்குகள், மேட் பெயிண்ட் ஸ்கீம், ட்வின் டிஸ்க் மற்றும் பரந்த டயர்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

பெட்ரோல் விலையுயர்வு கவலை இனி வேண்டாம்... இதோ இந்தியாவின் அதிக மைலேஜ் வழங்கும் பைக்குகள்!

ஆஃப் ரோடர் பைக்குகள்

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200

அதிகம் மைலேஜை தரும் ஆஃப் ரோடர் பைக்குகளில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கைப் பற்றிதான் முதலில் நாம் பார்க்கவிருக்கின்றோம். இந்தியாவில் ஆஃப் ரோடர் ரக பைக்குகளுக்கு அதிகரித்து வரும் எதிர்பார்ப்பை அடுத்து ஹீரோ நிறுவனம் களமிறக்கிய மலிவு விலை பைக்காக இது இருக்கின்றது. இந்த பைக் ட்வின் மாடல்களாக அறிமுகம் செய்யப்பட்டது.

பெட்ரோல் விலையுயர்வு கவலை இனி வேண்டாம்... இதோ இந்தியாவின் அதிக மைலேஜ் வழங்கும் பைக்குகள்!

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் ஆஃப் மற்றும் ஆன் ரோடுகளில் இயங்குவதற்கு ஏற்ப சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, டயர், உடற் தோற்றம், எஞ்ஜின் மற்றும் பாகங்கள் உள்ளிட்டவை ட்யூவல் திறனை வெளிப்படுத்தும் வகையில் இருக்கின்றன.

பெட்ரோல் விலையுயர்வு கவலை இனி வேண்டாம்... இதோ இந்தியாவின் அதிக மைலேஜ் வழங்கும் பைக்குகள்!

இந்த பைக்கில் 200 சிசி ஆயில் கூல்டு மற்றும் ப்யூவல் இன்ஜெக்டட் திறனுடைய எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 18.4 பிஎச்பியையும், 17.1 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இந்த பைக் அராய் அறிவிப்பின்படி, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 42.75 கிமீ வரை மைலேஜை வழங்கும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், நகர்புறச் சாலைகளில் 37 கிமீ வரை மட்டுமே மைலேஜை வழங்குகின்றது. இது இந்தியாவில் ரூ. 98,500 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

பெட்ரோல் விலையுயர்வு கவலை இனி வேண்டாம்... இதோ இந்தியாவின் அதிக மைலேஜ் வழங்கும் பைக்குகள்!

ராயல் என்பீல்டு ஹிமாலயன்

இந்திய ஆஃப் ரோடர் சந்தையை தற்போது ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் பைக்கே ஆளுகைச் செய்து வருகின்றது. இந்த பைக்கின் அதி திறன் மற்றும் ஆஃப் ரோடு பயணத்திற்கு தேவையான கூறுகள் அனைத்தும் மிகச் சிறப்பாக பெற்றிருப்பதன் காரணத்தால் மிக நீண்ட நாட்களாக இந்த இடத்தைத் தக்க வைத்து வருகின்றது.

பெட்ரோல் விலையுயர்வு கவலை இனி வேண்டாம்... இதோ இந்தியாவின் அதிக மைலேஜ் வழங்கும் பைக்குகள்!

இதில், 411சிசி திறனுடைய ப்யூவல் இன்ஜெக்டட் மற்றும் கவுண்டர் பேலன்ஸ்ட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 24.3 பிஎச்பி பவரையும், 32 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

இந்த பைக் அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 30 கிமீ வரை மைலேஜை வழங்கும். இது இந்தியாவில் ரூ. 1.89 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

பெட்ரோல் விலையுயர்வு கவலை இனி வேண்டாம்... இதோ இந்தியாவின் அதிக மைலேஜ் வழங்கும் பைக்குகள்!

நேக்கட் டூரர்/க்ரூஸர்

பஜாஜ் டோமினார்

நேக்கட் டூரர் மற்றும் க்ரூஸர் ரக பைக்கில் அதிக மைலேஜை வழங்கும் இருசக்கர வாகனமாக பஜாஜ் டோமினார் 400 மட்டுமே உள்ளது. இரு விதமான பயனை அளிக்கும் இந்த பைக் இந்திய இளைஞர்களின் மனம் கவர்ந்த பைக்காக இருக்கின்றது. இதனாலயே, அவ்வப்போது இந்த பைக்கில் லேசான அப்டேட்டுகளை பஜாஜ் நிறுவனம் வழங்கி வருகின்றது. இந்த பைக்கில் கேடிஎம் ட்யூக் 390 பைக்கிற்கு இணையான திறன் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

பெட்ரோல் விலையுயர்வு கவலை இனி வேண்டாம்... இதோ இந்தியாவின் அதிக மைலேஜ் வழங்கும் பைக்குகள்!

அதாவது, கேடிஎம் ட்யூக் 390 பைக்கில் காணப்படும் அதே 373 சிசி திறன் கொண்ட லிக்யூடு கூல்டு, ப்யூவல் இன்ஜெக்டட் எஞ்ஜின்தான் பஜாஜ் டோமினார் 400 பைக்கிலும் இடம்பெற்றிருக்கின்றது. 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் எஞ்ஜினில் இயங்கும் இந்த பைக் அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 27 கிமீ மைலேஜை வழங்கும். இது இந்தியாவில் ரூ. 1.95 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

பெட்ரோல் விலையுயர்வு கவலை இனி வேண்டாம்... இதோ இந்தியாவின் அதிக மைலேஜ் வழங்கும் பைக்குகள்!

ஸ்போர்ட்ஸ் டூரர்ஸ்

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310

ஸ்போர்ட்ஸ் டூரர் ரக பைக்கில் அதிக (கணிசமான) மைலேஜை வழங்கும் பைக்காக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 உள்ளது. பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கில் பயன்படுத்தப்படும் அதே எஞ்ஜின் இந்த பைக்கிலும் இடம்பெற்றிருக்கின்றது. அதாவது, 34பிஎஸ் மற்றும் 27 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் 312சிசி எஞ்ஜின் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கில் பொருத்தப்பட்டிருக்கின்றது.

பெட்ரோல் விலையுயர்வு கவலை இனி வேண்டாம்... இதோ இந்தியாவின் அதிக மைலேஜ் வழங்கும் பைக்குகள்!

இந்த பைக் அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 30 கிமீ மைலேஜை வழங்கும். இந்த பைக் இந்தியாவில் மிக அதிகபட்ச விலையாக ரூ. 2.40 லட்சத்திற்கு விற்பனைக்கு கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

இந்த அதிகபட்ச விலைக்கேற்ப டிஎஃப்டி வண்ண திரை, எல்இடி புரஜெக்டர் மின் விளக்கு, டிஸ்க் போன்ற பல்வேறு பிரிமியம் அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Indias Most Highest Mileage Bikes In Every Category. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X