இது என்ன ஏலியன் ஸ்கூட்டரா? யமஹா ஆர்15 பைக்கையே மிஞ்சும் வேகம்... ஆனா, விலைதான் காரை மிஞ்சுகிறது!

இதுவரை ஸ்கூட்டர் உலகம் சந்தித்திராத முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் இடால்ஜெட் டிராக்ஸ்டர் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. என்ன, இந்த ஸ்கூட்டரின் விலைதான் புதிய ஹேட்ச்பேக் காரின் விலையையே மிஞ்சும் வகையில் இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இது என்ன ஏலியன் ஸ்கூட்டரா? யமஹா ஆர்15 பைக்கையே மிஞ்சும் வேகம்... ஆனா, விலைதான் காரை மிஞ்சுகிறது!

இன்றைய காலத்து இளைஞர்களின் மிகவும் பிடித்தமான பைக்குகளில் ஒன்றாக யமஹா நிறுவனத்தின் ஆர்15 பைக் இருக்கின்றது. ஒரு சில இளைஞர்கள் இந்த பைக்கின்மீது தீராத காதலை வைத்த வண்ணம் இருக்கின்றனர். இதற்கு இந்த பைக்கின் கவர்ச்சியான உடல் அமைப்பு மட்டுமின்றி சாலையில் சீறிப் பாயும் எஞ்ஜின் திறனைப் பெற்றிருப்பதும் ஓர் முக்கிய காரணமாக இருக்கின்றது.

இது என்ன ஏலியன் ஸ்கூட்டரா? யமஹா ஆர்15 பைக்கையே மிஞ்சும் வேகம்... ஆனா, விலைதான் காரை மிஞ்சுகிறது!

அதேசமயம், பல விலையுயர்ந்த பைக்குகளின் மத்தியில் யமஹா ஆர்15 சென்றாலும் பார்வையளர்களைக் கவர அது தவிர்வதில்லை. அந்தளவிற்கு இந்தியர்களை ஆர்15 பைக் கவர்ந்திருக்கின்றது. இந்த பைக்கின் வேகத்திற்கு ஈடு கொடுப்பதற்கு சில மோட்டார்சைக்கிள்களே திணறுகின்ற நிலையில், இதன் வேகத்தையை மிஞ்சுகின்ற திறனில் ஸ்கூட்டர் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது என்ன ஏலியன் ஸ்கூட்டரா? யமஹா ஆர்15 பைக்கையே மிஞ்சும் வேகம்... ஆனா, விலைதான் காரை மிஞ்சுகிறது!

ஆம், இத்தாலி நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் இடால்ஜெட் மோட்டோ, அதன் புகழ்வாய்ந்த இடால்ஜெட் டிராக்ஸ்டர் என்னும் புதுரக ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.

இந்த அறிமுகம் இந்தியாவில் நடைபெற்றிருக்கின்றது என ஆவலுடன் எதிர்பார்த்துள்ளீர்களா..? மன்னித்துவிடுங்கள், ஜப்பான் நாட்டில்தான் இந்த ஸ்கூட்டர் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது என்ன ஏலியன் ஸ்கூட்டரா? யமஹா ஆர்15 பைக்கையே மிஞ்சும் வேகம்... ஆனா, விலைதான் காரை மிஞ்சுகிறது!

அதேசமயம், இந்த ஸ்கூட்டர் ஏற்கனவே விற்பனையில் இருந்த மாடல் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா..? ஆம், இடால்ஜெட் மோட்டோ இந்த ஸ்கூட்டரை கடந்த 1995ம் ஆண்டு வரை உலக நாடுகள் பலவற்றில் விற்பனைச் செய்து வந்தது. இதன் பின் ஒரு சில காரணங்களால் அது சந்தையை விட்டு பின் வாங்கப்பட்டது. இதைத்தொடர்ந்தே, சுமார் 25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அந்த ஸ்கூட்டருக்கு புது உயிரோட்டம் வழங்கப்பட்டு, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது என்ன ஏலியன் ஸ்கூட்டரா? யமஹா ஆர்15 பைக்கையே மிஞ்சும் வேகம்... ஆனா, விலைதான் காரை மிஞ்சுகிறது!

அதாவது, டிராக்ஸ்டர் ஸ்கூட்டருக்கு தற்காலத்து டிசைன் மற்றும் அம்சங்களை வழங்கி இடால்ஜெட் மோட்டோ மீண்டும் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. எனவே, இந்த ஸ்கூட்டர் வெகுவிரைவில் விற்பனைக்கு வருவதற்கும் தயாராக இருக்கின்றது. ஆனால், இந்த ஆண்டின் முடிவிற்கு பின்னரே அது களமிறங்கும் என தெரிகின்றது. இந்த ஸ்கூட்டர்குறித்த புகைப்படத்தை யஹ்மெஷின் என்ற தளம் வெளியிட்டுள்ளது.

இது என்ன ஏலியன் ஸ்கூட்டரா? யமஹா ஆர்15 பைக்கையே மிஞ்சும் வேகம்... ஆனா, விலைதான் காரை மிஞ்சுகிறது!

முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தைக் கொண்டிருக்கும் இந்த ஸ்கூட்டர் இரு விதமான எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றது. அதாவது, 125 சிசி மற்றும் 200சிசி திறனில் இந்த ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் மூன்று விதமான நிறத் தேர்வில் டிராக்ஸ்டருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

இது என்ன ஏலியன் ஸ்கூட்டரா? யமஹா ஆர்15 பைக்கையே மிஞ்சும் வேகம்... ஆனா, விலைதான் காரை மிஞ்சுகிறது!

ஆனால், இதன் விலைதான் கொஞ்சம் அதிகமாக உள்ளது. இடால்ஜெட் டிராக்ஸ்டர் ஸ்கூட்டருக்கு இந்திய மதிப்பில் அதிபட்சமாக ரூ. 4.52 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை 125சிசி மாடலுடையதாகும். இதேபோன்று, 200சிசி ஸ்கூட்டருக்கு 4.89 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது.

இது என்ன ஏலியன் ஸ்கூட்டரா? யமஹா ஆர்15 பைக்கையே மிஞ்சும் வேகம்... ஆனா, விலைதான் காரை மிஞ்சுகிறது!

இந்த விலைக்கு ஆரம்பநிலையில் விற்பனையில் இருக்கும் ஹேட்ச்பேக் கார் ஒன்றையே இந்தியாவில் வாங்கிவிடலாம் என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது, ஜப்பானில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ள இடால்ஜெட் டிராக்ஸ்டர் விரைவில் உலக நாடுகள் பலவற்றிலும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது என்ன ஏலியன் ஸ்கூட்டரா? யமஹா ஆர்15 பைக்கையே மிஞ்சும் வேகம்... ஆனா, விலைதான் காரை மிஞ்சுகிறது!

அந்தவகையில், இந்தியாவிலும் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இந்த ஸ்கூட்டரின் அதிவேக திறன் மற்றும் உடல் தோற்றம் இந்தியச் சாலைகளுக்கு பொருந்துமா., என்ற ஆய்விற்கு பின்னரே இடால்ஜெட் டிராக்ஸ்டர் ஸ்கூட்டர் அறிமுகம் குறித்த தகவல் வெளியிடப்படும்.

இது என்ன ஏலியன் ஸ்கூட்டரா? யமஹா ஆர்15 பைக்கையே மிஞ்சும் வேகம்... ஆனா, விலைதான் காரை மிஞ்சுகிறது!

சரி கார்களுக்கு இணையான விலையை இந்த ஸ்கூட்டருக்கு வெச்சிருக்காங்களே, அப்படி என்னதான் அதுல சிறப்பு இருக்குனு உங்களுக்கு கேட்கத் தோன்றலாம். வாருங்கள் அதுகுறித்த தகவலையும் தொடர்ச்சியாக பார்த்துவிடலாம்...

இடால்ஜெட் டிராக்ஸ்டர் ஸ்கூட்டரின் சிறப்பம்சமே, முற்றிலும் மாறுபட்ட தோற்றம்தான்.

இது என்ன ஏலியன் ஸ்கூட்டரா? யமஹா ஆர்15 பைக்கையே மிஞ்சும் வேகம்... ஆனா, விலைதான் காரை மிஞ்சுகிறது!

இந்த ஸ்கூட்டரின் உருவ அமைப்பானது, கண்ணாடி மீன்களைப் போன்று உடலின் உட்கூறுகள் அனைத்தும் மிகவும் தெள்ளத் தெளிவாக தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதாவது, ஆபத்தை ஏற்படுத்தும் எந்திர கூறுகளும்கூட மிகவும் அசால்டாக காட்சியளிக்கின்ற வகையில் உருவமைப்பை அது பெற்றுள்ளது.

இது என்ன ஏலியன் ஸ்கூட்டரா? யமஹா ஆர்15 பைக்கையே மிஞ்சும் வேகம்... ஆனா, விலைதான் காரை மிஞ்சுகிறது!

குறிப்பிட்டு கூற வேண்டுமானால், வழக்கமான ஸ்கூட்டர்களைப் போன்று உடல் பேனல் எதுவும் இல்லாமல், ஃபிரேம்களால் மட்டுமே மறைக்கப்பட்டு, கட்டமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, சில விநோதமான உடற்கூறுகளையும் அது பெற்றிருக்கின்றது.

இது என்ன ஏலியன் ஸ்கூட்டரா? யமஹா ஆர்15 பைக்கையே மிஞ்சும் வேகம்... ஆனா, விலைதான் காரை மிஞ்சுகிறது!

அந்தவகையில், டிராக்ஸ்டரின் முன்பக்கத்தில் வழக்கமான சஸ்பென்ஷன்களுக்கு பதிலாக ஸ்கூட்டரின் மையப் பகுதியில் இருந்து இணைக்கப்பட்ட சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டிருக்கின்றது. இத்தகைய வித்தியாசமான அமைப்பே இந்தியச் சாலைகளுக்கு டிராக்ஸ்டர் ஏதுவானதாக அமையுமா., என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றது. மேலும், இதன் இந்திய அறிமுகத்தையும் சந்தேகத்திற்கு இடமாக்கியுள்ளது.

இது என்ன ஏலியன் ஸ்கூட்டரா? யமஹா ஆர்15 பைக்கையே மிஞ்சும் வேகம்... ஆனா, விலைதான் காரை மிஞ்சுகிறது!

இடால்ஜெட் டிராக்ஸ்டர் ஸ்கூட்டரில் எந்தவிதமான சாலையையும் சமாளிக்கின்ற வகையில் 14 இன்ச் வீல் மற்றும் அதில் பைரெல்லி டையப்ளோ ரோஷோ டயர்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன.

இதேபோன்று, இந்த ஸ்கூட்டரின் எஞ்ஜின் திறனும் நம்மை அசர வைக்கின்ற வகையில் இருக்கின்றது. அதாவது, இரு வேரியண்டிலும் சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்ட் எஞ்ஜினே காணப்படுகின்றன.

இது என்ன ஏலியன் ஸ்கூட்டரா? யமஹா ஆர்15 பைக்கையே மிஞ்சும் வேகம்... ஆனா, விலைதான் காரை மிஞ்சுகிறது!

ஆனால், இவற்றின் திறன் மட்டுமே மாறுபடுகின்றது. அதாவது, 125 சிசி வெர்ஷன் அதிகபட்சமாக 14.9பிஎஸ் பவரையும், 12.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் வகையில் திறனைப் பெற்றிருக்கின்றது. இதேபோன்று, 200சிசி வேரியண்ட் அதிகபட்சமாக 19.8 பிஎஸ் பவரையும், 17என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. இந்த அதிகபட்ச திறன் யமஹா ஆர்15 பைக்கிற்கே டஃப் கொடுக்கும் வெளிப்பாடாகும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Italjet Dragster Launched In Japan. Read In Tamil.
Story first published: Saturday, May 9, 2020, 14:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X