எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கும் ஜாவா? - பரபரப்புத் தகவல்கள்!

இந்தியாவுக்காக ஜாவா பிராண்டில் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் உருவாக்கப்பட்டு வருவதாக பரபரப்புத் தகவல் வெளியாகி இருக்கிறது.

எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கும் ஜாவா? - பரபரப்புத் தகவல்கள்!

பாரம்பரியம் மிக்க ஜாவா பைக்குகள் கடந்த 2018ம் ஆண்டு மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. எதிர்பார்த்ததை போலவே, ஜாவா பைக்குகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு எழுந்தது. ஜாவா பைக்குகளின் உற்பத்தி, வினியோகப் பணிகளை மஹிந்திரா நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் ஏற்றுள்ளது.

எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கும் ஜாவா? - பரபரப்புத் தகவல்கள்!

இந்த நிலையில், இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான மார்க்கெட் வலுவடைந்து வருகிறது. பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்த சந்தையில் குறிப்பிடத்தக்க அளவு வர்த்தகத்தை பிடிக்கத் துவங்கி இருக்கின்றன. எதிர்காலத்தில் மின்சார பைக்குகளுக்கான வர்த்தக வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது.

எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கும் ஜாவா? - பரபரப்புத் தகவல்கள்!

இதனால், மின்சார இருசக்கர வாகனங்களை உருவாக்குவதில் அனைத்து நிறுவனங்களுமே ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த வகையில், ஜாவா பிராண்டிலும் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் உருவாக்கப்பட்டு வருவதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கும் ஜாவா? - பரபரப்புத் தகவல்கள்!

அதாவது, மஹிந்திரா நிறுவனம் மின்சார வாகனத் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. மின்சார வாகனங்களுக்கான தொழில்நுட்பத்தில் முன்னோடியாகவும் விளங்குகிறது. எனவே, மஹிந்திராவின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஜாவா எலெக்ட்ரிக் பைக் மாடல் உருவாக்கப்பட்டு வருவதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கும் ஜாவா? - பரபரப்புத் தகவல்கள்!

எனினும், ஜாவா பிராண்டில் உருவாக்கப்படும் புதிய மின்சார பைக் மாடலின் உருவாக்கப் பணிகளை கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனமே நேரடியாக ஏற்றுள்ளது. தொழில்நுட்ப பகிர்மானத்தை மட்டும் மஹிந்திராவிடம் இருந்து பெற்றுக் கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கும் ஜாவா? - பரபரப்புத் தகவல்கள்!

டிசைனை பொறுத்தமட்டில், ஜாவா பெட்ரோல் பைக் மாடல்களில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய டிசைன் கொள்கையில் இடம்பெறும். ஆனால், சில முக்கிய மாற்றங்களையும் இந்த ஜாவா எலெக்ட்ரிக் பைக்கில் எதிர்பார்க்கலாம்.

எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கும் ஜாவா? - பரபரப்புத் தகவல்கள்!

மேலும், ஜாவா எலெக்ட்ரிக் பைக்கிற்கான பேட்டரி உள்ளிட்ட பல முக்கிய பாகங்களை இறக்குமதி செய்யும் கட்டாயம் இருக்கிறதாம். அதுகுறித்த பரிசீலனையிலும், கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கும் ஜாவா? - பரபரப்புத் தகவல்கள்!

ஆண்டு ஆண்டு ஜாவா எலெக்ட்ரிக் பைக்கின் டிசைன் அல்லது அதிகாரப்பூர்வத் தகவல்களை எதிர்பார்க்கலாம். மேலும், அடுத்த ஓரிரு ஆண்டுகளில் விற்பனைக்கு கொண்டு வரும் வாய்ப்பும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ஜாவா #jawa motorcycles
English summary
According to report, Jawa is working on an electric bike for Indian market and expected to reveal later next year.
Story first published: Monday, July 13, 2020, 19:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X