250கிமீ ரேஞ்சில் உருவாகவுள்ள ஜாவாவின் புதிய எலக்ட்ரிக் பைக்... இவ்வாறான தோற்றத்தில் தான் இருக்கும்..

ஜாவா மோட்டார்சைக்கிள் ப்ராண்ட் விரைவில் தனது மாடல் லைன்அப்பை புதிய எலக்ட்ரிக் பைக் மூலமாக விரிவுப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

250கிமீ ரேஞ்சில் உருவாகவுள்ள ஜாவாவின் புதிய எலக்ட்ரிக் பைக்... இவ்வாறான தோற்றத்தில் தான் இருக்கும்..

2018ல் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் ஜாவா, ஜாவா 42 மற்றும் ஜாவா பெராக் என்ற மூன்று பைக் மாடல்களின் மூலம் ஜாவா மோட்டார்சைக்கிள் ப்ராண்ட்டை மீண்டும் இந்திய சந்தைக்கு கொண்டு வந்திருந்தது. இந்த நிலையில் ஜாவா ப்ராண்டில் புதிய எலக்ட்ரிக் பைக் வெளிவரவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

250கிமீ ரேஞ்சில் உருவாகவுள்ள ஜாவாவின் புதிய எலக்ட்ரிக் பைக்... இவ்வாறான தோற்றத்தில் தான் இருக்கும்..

ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து இதுவரை வெளிவரவில்லை. 2022ல் வெளிவரலாம் என கூறப்படும் இந்த எலக்ட்ரிக் பைக்கை கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க இருந்தாலும், மஹிந்திராவின் சில இவி தொழிற்நுட்பங்கள் பொருத்தப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

250கிமீ ரேஞ்சில் உருவாகவுள்ள ஜாவாவின் புதிய எலக்ட்ரிக் பைக்... இவ்வாறான தோற்றத்தில் தான் இருக்கும்..

மற்ற பெட்ரோல் பைக் மாடல்களை போல் இந்த எலக்ட்ரிக் பைக்கையும் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் எப்படியிருந்தாலும் விற்பனைக்கு வருவதற்கு 2-3 வருடங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படும் இந்த ஜாவா எலக்ட்ரிக் பைக் இவ்வாறான தோற்றத்தில் தான் இருக்கும் என்பதை வெளிக்காட்டும் வகையில் சில டிஜிட்டல் படங்களை எலக்ட்ரிக் வைக்கல் வெப் என்ற இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

250கிமீ ரேஞ்சில் உருவாகவுள்ள ஜாவாவின் புதிய எலக்ட்ரிக் பைக்... இவ்வாறான தோற்றத்தில் தான் இருக்கும்..

இவற்றின்படி பார்க்கும்போது தற்போதைய ஜாவா பைக்குகளின் தோற்றத்தை சிறிதளவு ஒத்து காணப்படும் இந்த எலக்ட்ரிக் பைக்கின் உண்மையான தோற்றம் ஜாவாவின் எதிர்கால பைக்குகளின் தோற்றத்தில் இருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

250கிமீ ரேஞ்சில் உருவாகவுள்ள ஜாவாவின் புதிய எலக்ட்ரிக் பைக்... இவ்வாறான தோற்றத்தில் தான் இருக்கும்..

இந்த படத்தில் ட்யூல்-டோன் பெயிண்ட் அமைப்பில் காணப்படும் இந்த இவி பைக், வட்ட வடிவிலான எல்இடி ஹெட்லேம்ப் உடன் எலக்ட்ரிக் பைக் என்பதை குறிக்கும் வகையில் நீல நிற ஹைலைட்களுடன் காட்சியளிக்கிறது. பெரிய அளவிலான பேட்டரி தொகுப்பு வழக்கமாக எரிபொருள் என்ஜின் பொருத்தப்படும் இடத்தில் உள்ளது.

250கிமீ ரேஞ்சில் உருவாகவுள்ள ஜாவாவின் புதிய எலக்ட்ரிக் பைக்... இவ்வாறான தோற்றத்தில் தான் இருக்கும்..

மேலும் எலக்ட்ரிக் பைக்குகளுக்கு உண்டான சார்ஜ் செய்யும் பகுதி உள்பட மற்ற எலக்ட்ரிக் பாகங்கள் அனைத்தையும் மறக்காமல் வடிவமைத்தவர்கள் கொடுத்துள்ளனர். மற்றப்படி சஸ்பென்ஷன், ப்ரேக் மற்றும் டயர் போன்ற பாகங்களில் விற்பனையில் உள்ள ஜாவா பைக்குகளில் இருந்து இதில் எந்த வித்தியாசமும் இல்லை.

250கிமீ ரேஞ்சில் உருவாகவுள்ள ஜாவாவின் புதிய எலக்ட்ரிக் பைக்... இவ்வாறான தோற்றத்தில் தான் இருக்கும்..

இதன் எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பில் உள்ள பாகங்கள் மறைக்கப்பட்டுள்ளதால் அவற்றை பற்றி எந்த முடிவிற்கும் இந்த படங்களில் பைக்கை வடிவமைத்தவர்கள் வரவில்லை என்பது தெரிகிறது. ஆனால் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் இந்த எலக்ட்ரிக் பைக்கை அன்றாட பயன்பாடு மற்றும் தொலைத்தூர பயன்பாடு என இரண்டிற்கும் ஏற்ற விதத்தில் வடிவமைக்கும் என்பதில் சந்தேகப்பட தேவையில்லை.

250கிமீ ரேஞ்சில் உருவாகவுள்ள ஜாவாவின் புதிய எலக்ட்ரிக் பைக்... இவ்வாறான தோற்றத்தில் தான் இருக்கும்..

அதேபோல் இந்த இவி பைக்கின் ரேஞ்ச் 200- 250 கிமீ அளவில் இருக்கும் என கூறப்படுகிறது. வரும் மாதங்களில் வெளிவரவுள்ள இந்த ஜாவா எலக்ட்ரிக் பைக்கை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள நமது ட்ரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தினை தொடர்பில் இருங்கள்.

Most Read Articles
மேலும்... #ஜாவா #jawa motorcycles
English summary
All-new Jawa Electric Bike – Will It Look Like This
Story first published: Friday, August 7, 2020, 16:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X