இதுவரை பார்த்திராத வகையில் அட்வென்ஜெர் தோற்றத்தில் ஜாவா 42 பைக்...

ஜாவா மோட்டார்சைக்கிள்கள் பொதுவாகவே கிளாசிக்கல் மற்றும் ரெட்ரோ டிசைனில் தான் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். இந்த நிலையில் ஜாவா மோட்டார்சைக்கிள் ஒன்று அட்வென்ஜெர் வெர்சனுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலினை இந்த செய்தியில் காண்போம்.

இதுவரை பார்த்திராத வகையில் அட்வென்ஜெர் தோற்றத்தில் ஜாவா 42 பைக்...

அட்வென்ஜெர் வெர்சனுக்கு மாற்றப்பட்டுள்ள ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல் பிரபல 42 பைக்காகும். இதனை பம்பாய் கஸ்டம் வொர்க்ஸ் என்ற கஸ்டமைஸ்ட் நிறுவனம் அட்வென்ஜெர் தோற்றத்திற்கு மாற்றியுள்ளது. பெயருக்கு ஏற்றாற்போல் பம்பாய் கஸ்டம் வொர்க்ஸ் நிறுவனம் மும்பையில் அமைந்துள்ளது.

இதுவரை பார்த்திராத வகையில் அட்வென்ஜெர் தோற்றத்தில் ஜாவா 42 பைக்...

மோட்டார்சைக்கிள்கள் மற்றும் கார்களை கஸ்டமைஸ்ட் செய்துவரும் இந்நிறுவனம் தற்போது உருமாற்றம் செய்துள்ள ஜாவா 42 பைக் உண்மையில் ஸ்டாக் பைக்குகளை காட்டிலும் மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்திற்கு மாறியுள்ளது. இந்த பைக்கிற்கு இத்தகைய தோற்றத்தை வழங்க கஸ்டமைஸ்ட் நிறுவனம் சில கஸ்டமைஸ்ட் பாகங்களை பொருத்தியுள்ளது.

MOST READ: அமெரிக்கரின் கண்களுக்கு தெய்வமாக மாறிய இந்திய பெண்.. படையப்பாவில்கூட இத்தனை கார்களை பார்க்கவில்லை..!

இதுவரை பார்த்திராத வகையில் அட்வென்ஜெர் தோற்றத்தில் ஜாவா 42 பைக்...

இதில் ட்யூல்-பர்பஸ் டயர்கள், கை விரல்களை பாதுக்காக்கும் தட்டுகளுடன் கஸ்டம் மற்றும் அளவு அதிகமாக்கப்பட்ட ஹேண்டில்பார்கள், பெரிய மெட்டல் பேஷ் தட்டு மற்றும் கஸ்டம்-மேட் எக்ஸாஸ்ட் உள்ளிட்டவை அடங்கும். பைக்கின் முரட்டுத்தனத்தை அதிகரிக்க பம்பாய் கஸ்டமைஸ்ட் நிறுவனம் மேட் கருப்பு நிற பெயிண்ட்டால் பைக்கை அலங்கரித்துள்ளது.

இதுவரை பார்த்திராத வகையில் அட்வென்ஜெர் தோற்றத்தில் ஜாவா 42 பைக்...

இருப்பினும் பைக்கின் பெட்ரோல் டேங்க் மற்றும் பக்கவாட்டு பேனல்களில் ஜாவா நிறுவனத்தின் லோகோ மற்றும் பின்ஸ்ட்ரிப்கள் மரியாதை நிமத்தமாக அப்படியே உள்ளன. மாடிஃபைட் செய்யப்பட்டுள்ள ஜாவா 42 மாடல் முன்புறத்தில் ஃபெண்டர்கள், ஹெட்லைட் பாதுகாப்பான் மற்றும் பொருட்களை வைப்பதற்கான பெட்டிற்காக மெட்டல் உள்ளிட்டவற்றையும் கஸ்டமைஸ்ட் மாற்றங்களாக ஏற்றுள்ளது.

MOST READ: விதி மீறினால் கொரோனா நோயாளியுடன் ஒரு நாள் டூர்.. புள்ளிங்கோ இளைஞர்களை சிதறவிட்ட திருப்பூர் போலீஸ்..

இதுவரை பார்த்திராத வகையில் அட்வென்ஜெர் தோற்றத்தில் ஜாவா 42 பைக்...

இவை மட்டுமின்றி மார்க்கெட்டிற்கு பிறகான எல்இடி டெயில்லைட் மற்றும் க்ராஷ் பாதுகாப்பானில் மிகவும் சக்தி வாய்ந்த துணை விளக்குகள் போன்றவையும் இந்த கஸ்டமைஸ்ட் பைக்கில் உள்ளன. மொத்தத்தில் அட்வென்ஜெர் பயணத்திற்கு பம்பாய் கஸ்டம் வொர்க்ஸ் நிறுவனத்தின் இந்த கஸ்டமைஸ்ட் ஜாவா 42 பைக் ரெடி.

இதுவரை பார்த்திராத வகையில் அட்வென்ஜெர் தோற்றத்தில் ஜாவா 42 பைக்...

ஜாவா 42 மாடலில் 293சிசி சிங்கிள்-சிலிண்டர், லிக்யூடு-கூல்டு, டிஒஎச்சி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பிஎஸ்4 தரத்தில் உள்ள இந்த என்ஜின் 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும். இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

MOST READ: ஜிம்கள் திறக்கப்படாததால் கேடிஎம் பைக்குடன் உடற்பயிற்சி... விபரீத செயலில் ஈடுப்பட்ட பிரபல பைக் ரேஸர்

இதுவரை பார்த்திராத வகையில் அட்வென்ஜெர் தோற்றத்தில் ஜாவா 42 பைக்...

ஜாவா நிறுவனம் தற்சமயம் அதன் சமூக வலைத்தளங்களில் 'கம்யூனிட்டி கஸ்டம்ஸ்' என்ற போட்டியினை நடத்தி வருகிறது. இதில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான முறையில் ஜாவா பைக்குகளை ஸ்கெட்ச் அல்லது 3டி ரெண்டர்கள் மூலமாக மாடிஃபைட் செய்து இணையத்தில் பதிவிடலாம்.

இதுவரை பார்த்திராத வகையில் அட்வென்ஜெர் தோற்றத்தில் ஜாவா 42 பைக்...

ஏப்ரல் 30ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ள இந்த போட்டியின் வெற்றியாளர் ஆன்லைன் ஓட்டுகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவர். இதில் பம்பாய் கஸ்டம் வொர்க்ஸ் நிறுவனம் இந்த கஸ்டமைஸ்ட் 42 மாடலால் மற்ற போட்டியாளர்களுக்கு நிச்சயம் கடுமையான போட்டியாளராக விளங்கும்.

Most Read Articles

English summary
Modified Jawa Forty Two looks ready for adventure touring
Story first published: Sunday, April 26, 2020, 11:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X