ஜாவா 300 மற்றும் 42 பைக்குகளின் பிஎஸ்-6 மாடல்கள் டெலிவிரி துவங்கியது!

கொரோனா பிரச்னையால் ஏற்பட்ட காலதாமதத்திற்கு பின்னர், ஜாவா 300 மற்றும் 42 பிஎஸ்-6 பைக் மாடல்களின் டெலிவிரிப் பணிகள் துவங்கி இருக்கிறது. இதுதொடர்பான கூடுதல் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

ஜாவா 300 மற்றும் 42 பைக்குகளின் பிஎஸ்-6 மாடல்கள் டெலிவிரி துவங்கியது!

ஜவா 300 மற்றும் ஜாவா 42 பைக்குகளின் பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்கள் கடந்த மார்ச்சில் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால், கொரோனா லாக்டவுனால், பிஎஸ்-6 மாடல்களின் டெலிவிரிப் பணிகளை ஜாவா நிறுவனம் தள்ளிப்போட்டு வந்தது.

ஜாவா 300 மற்றும் 42 பைக்குகளின் பிஎஸ்-6 மாடல்கள் டெலிவிரி துவங்கியது!

உதிரிபாகங்கள் சப்ளையிலும் தட்டுப்பாடு ஏற்பட்டதால், கால தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், பைக் உற்பத்திப் பணிகளை ஜாவா நிறுவனம் மெல்ல சீராக்கி வருகிறது. இதையடுத்து, டெலிவிரிப் பணிகளில் தற்போது கவனம் செலுத்தத் துவங்கி இருக்கிறது.

ஜாவா 300 மற்றும் 42 பைக்குகளின் பிஎஸ்-6 மாடல்கள் டெலிவிரி துவங்கியது!

கொரோனா பிரச்னை இருந்தாலும், வர்த்தகத்தை மீட்டெடுக்கவும், முன்பதிவு செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் வகையிலும், 300 மற்றும் 42 பைக்குகளின் பிஎஸ்-6 மாடல்களின் டெலிவிரிப் பணிகளை ஜாவா துவங்கி இருக்கிறது.

ஜாவா 300 மற்றும் 42 பைக்குகளின் பிஎஸ்-6 மாடல்கள் டெலிவிரி துவங்கியது!

கடந்த மாதம் புதிய ஜாவா பெராக் பைக்கின் டெலிவிரிப் பணிகள் துவங்கப்பட்டது. தற்போது ஜாவா மற்றும் ஜாவா 42 பைக்குகளின் டெலிவிரிப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இது ஜாவா பைக்குகளை புக்கிங் செய்து பல மாதங்களாக காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக அமையும்.

ஜாவா 300 மற்றும் 42 பைக்குகளின் பிஎஸ்-6 மாடல்கள் டெலிவிரி துவங்கியது!

ஜாவா 300 மற்றும் ஜாவா 42 பைக்குகளில் பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்ட 293சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 26.51 பிஎஸ் பவரையும், 27.05 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதனுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ஜாவா 300 மற்றும் 42 பைக்குகளின் பிஎஸ்-6 மாடல்கள் டெலிவிரி துவங்கியது!

பிஎஸ்-6 ஜாவா 300 மற்றும் 42 பைக் மாடல்களின் இருக்கையும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கூடுதல் சொகுசான அனுபவத்தை தரும் என்று ஜாவா தெரிவிக்கிறது.

ஜாவா 300 மற்றும் 42 பைக்குகளின் பிஎஸ்-6 மாடல்கள் டெலிவிரி துவங்கியது!

இந்த இரண்டு பிஎஸ்-6 ஜாவா பைக் மாடல்களிலும் சிங்கிள் சேனல் அல்லது டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

ஜாவா 300 மற்றும் 42 பைக்குகளின் பிஎஸ்-6 மாடல்கள் டெலிவிரி துவங்கியது!

ஜாவா 300 பைக்கின் பிஎஸ்-6 மாடலின் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மாடலுக்கு ரூ.1.73 லட்சமும், டியூவல் சேனல் ஏபிஎஸ் மாடலுக்கு ரூ.1.82 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஜாவா 42 பிஎஸ்-6 மாடலின் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மாடலுக்கு ரூ.1.60 லட்சம் விலையும், டியூவல் சேனல் ஏபிஎஸ் மாடலுக்கு ரூ.1.69 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

ஜாவா 300 மற்றும் 42 பைக்குகளின் பிஎஸ்-6 மாடல்கள் டெலிவிரி துவங்கியது!

கொரோனாவுக்கு முன்பாகவே, ஜாவா பைக்குகளின் டெலிவிரிப் பணிகளில் தொய்வு இருந்தது. தற்போது கொரோனாவும் சேர்ந்து கொண்டதால், ஜாவா பைக்கை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருந்தனர். தற்போது ஒருவழியாக டெலிவிரிப் பணிகள் துவங்கப்பட்டு இருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயமாகவே இருக்கும்.

Most Read Articles

மேலும்... #ஜாவா #jawa motorcycles
English summary
Jawa Motorcycle announced deliveries of the BS6 model have begun in the Indian market. The Jawa and the Jawa Forty-Two have started to reach customers. Both BS6 motorcycles were launched back in March 2020.
Story first published: Thursday, August 6, 2020, 6:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X