Just In
- 45 min ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 1 hr ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 2 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
- 5 hrs ago
ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்!! கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன
Don't Miss!
- News
பிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவையினை வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ள ஜாவா... என்னனு தெரியுமா...?
ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் அதன் தயாரிப்புகளுக்கான முழுமையாக ஏற்றப்பட்ட சாலையோர உதவி சேவையினை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சேவை ஆனது வீட்டில் இருக்கும்போதோ அல்லது பயணத்தின்போதோ தேவைப்படும் உதவிகளை வழங்கும். பயணத்தின் போது என்றால் பைக் பாதி வழியில் நின்றுவிட்டால் பழுதிற்கான தீர்வினை அந்த இடத்திற்கே வந்து நிறுவனத்தின் பணியாளர்கள் வழங்குவர்.

பெரிய அளவிலான பழுது என்றால் பைக் சர்வீஸ் மையத்திற்கு கொண்டு செல்லப்படும். இந்த சமயங்களில் தான் வாடிக்கையாளர் வாகன அளவுருவை பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும். ஏனெனில் அதனை வைத்து தான் வாகனத்திற்கு ஆர்எஸ்ஏ என அழைக்கப்படும் சாலையோர உதவிகளை வழங்கலாமா என்பதை அவர்கள் உறுதி செய்வர்.

பழுதான வாகனத்தை கஷ்டப்பட்டு டீலர்ஷிப் அல்லது சர்வீஸ் மையங்களுக்கு கொண்டு சென்றபின் ஆர்எஸ்ஏ உங்களது ஜாவா பைக்கிற்கு பொருந்தவில்லை என்றால் அது மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாக்கிவிடும். ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் சாலையோர உதவி வசதிகளை நாடு முழுவதற்கும் கொண்டுவந்துள்ளது.

இந்த கட்டணமில்லா சேவை டீலர்ஷிப்பை சுற்றி அதிகப்பட்சமாக 100கிமீ தூரம் வரையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். இந்த சேவையில் சாலையோர பழுது, எரிபொருள் உதவி மற்றும் தொலைந்த சாவி மீட்டெடுப்பு உள்ளிட்டவை அடங்குகின்றன.

பைக்கை முற்றிலுமாக இயக்க முடியாமல் போனால், அவசர செய்தியினை அனுப்பியும் மேற்கூறப்பட்டுள்ள சேவை வசதிகளை பெற்று கொள்ளலாம். இவை தவிர்த்து பயணிகளுக்கு வழங்கபடும் மருத்துவ உதவிகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. ஜாவா ஆர்எஸ்ஏ முதன்முதலாக கடந்த மே மாத இறுதியில் சில குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆர்எஸ்ஏ சேவைகளில் தட்டையான பேட்டரி அல்லது டயரை பொருத்துவது பொதுவாகவே இடம்பெறக்கூடிய ஒன்றாகும். இவற்றுடன் சிறிய அளவிலான பழுதுகளும் சாலையில் வைத்தே சரிப்பார்க்கப்படுகின்றன. இந்த சேவைக்கும் எல்லை உண்டு. அதாவது ஒரு வருடத்தில் எத்தனை சாலையோர உதவியினை வாடிக்கையாளர் பெற்றுள்ளார் என்பது கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

அதேபோல் சேவைக்கான நேரமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தை தாண்டி பைக்கில் ஏற்பட்ட பழுதினை சரிப்பார்க்க நேர்ந்தால், அதற்கு கட்டணம் வசூலிக்கும் வகையில் இந்த சேவையினை வடிவமைத்துள்ளனர். இந்த சேவைக்காக ஜாவா நிறுவனம் 2018ல் சிவப்பு நிற ஆர்எஸ்ஏ வேனை பயன்பாட்டிற்கு கொண்டுவந்தது.

இந்த சேவையினை ஆண்டு சந்தா முறையிலும் பெறலாம். இதற்கு கட்டணமாக வருடத்திற்கு ரூ.1,000- 1,300 வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சந்தா தேர்வு வாடிக்கையாளர்களுக்கு வாகனத்தை டீலர்ஷிப்பில் வாங்கும்போதே வழங்கப்படுகிறது. தற்போதைய பைக் உரிமையாளர்கள் பாலிசியைப் பொறுத்து ஏற்கனவே தங்கள் காப்பீட்டுத் தொகையாக ஆர்எஸ்ஏ-வை தேர்ந்தெடுத்திருக்கலாம்.